Friday, August 31, 2018

எமனும் மறந்த கிழடு

எமனும் மறந்த கிழடு
தமிழ் இனத்தின் சாபக்கேடு!
அடுத்த வருடம் தீர்வு வரும் என்று
ஒவ்வொரு வருடமும் கூறிவருகிறார்.
தந்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்றால்
கொஞ்சமாவது சோத்தில் உப்பு போட்டு தின்பவன்
ஒன்றில் பதவியை தூக்கியெறிவான் அல்லது
மக்களிடம் வந்து மன்னிப்பாவது கேட்பான்.
பட்டதாரி இளைஞர்கள் சென்று வேலை கேட்டபோது
“வேலை கேட்டால் தீர்வு கிடைக்காமல் போய்விடும்” என்றார்
ஆனால் தனக்கு மட்டும் பதவி, பங்களா, மற்றும்
சொகுசு வாகனம் கேட்டுப் பெற்றார்.
தன் பதவிக்கு அபத்து என்றவுடன் ஓடிச் சென்று
மகிந்தவின் காலைப் பிடித்து கெஞ்சுகிறார்.
சிறையில் உள்ளவர்களின் விடுதலை பற்றி கேட்டால்
தன்னிடம் திறப்பு இல்லை என்று கிண்டலாக பதில் கூறுகிறார்.
காணாமல் போனோர் பிரச்சனை பற்றி பேசினால்
அவருக்கு கண் தெரியாது காது கேட்காது- ஆனால்
சந்திரிக்கா அம்மையார் குசு குசுத்தால் எல்லாம் நன்றாக கேட்கும்
மாவலி திட்டத்திற்கு பட்ஜட்டில் நிதி ஒதுக்கும்போது
ஆதரவாக கையை உயர்த்துவார்.
அத் திட்டத்தின் மூலம் நடக்கும் சிங்கள குடியேற்றம் பற்றி
பாராளுமன்றத்தில் வாயே திறக்கமாட்டார்.
ஆனால் மக்கள் முல்லைத்தீவில் போராடினால்
அதில் கலந்துகொள்ள மாவை சேனாதிராசாவை அனுப்புவார்.
தீர்வு கிடைக்கும்வரை அபிவிருத்திசபைக் கூட்டத்தில்
கலந்துகொள்ள வேண்டாம் என்று முதலமைச்சர் கேட்டால்
“அபிவிருத்தி வேண்டும்” என்று கூறி கலந்து கொள்வார்.
அபிவிருத்தி முக்கியம் என்றால் ரணில் தர முன்வந்த
நாலு அமைச்சு பதவியை பெற்று அபிவிருத்தி செய்திருக்கலாமே?
என்று கேட்டால் அதற்கு பதில் தர மாட்டார்.
இனப்படுகொலைக்கு நீதி கேட்டு ஜ.நா வாசலில்
புலம்பெயர்ந்த தமிழர்கள் போராடுகிறார்கள்.
ஆனால் இந்த கிழவர் “ இது நாம் ஏற்படுத்திய அரசு. இது நல்லாட்சி அரசு” என்று கொழும்பில் பேட்டி கொடுக்கிறார்.
இதைப் பார்த்து வெள்ளைக்காரன் குண்டியால் சிரிக்கிறான்
குறித்து வைத்தக் கொள்ளுங்கள்
இந்த கிழடு உயிரோடு இருக்கும்வரை
தமிழருக்கு உரிமையும் கிடைக்காது
அபிவிருத்தியும் கிடைக்காது
ஒரு ம—ம் கிடைக்காது!

No comments:

Post a Comment