Sunday, September 30, 2018

இந்த மூட்டைப்பூச்சியை நசுக்க

இந்த மூட்டைப்பூச்சியை நசுக்க
ஒருவன்கூட தமிழ்நாட்டில் இல்லையா?
இவனுக்கு தன் அப்பன் பெயரைத் தவிர
மற்றது எல்லாம் நல்லா தெரியுது.
எப்ப பார்த்தாலும் எதற்கெடுத்தாலும்
எல்லாமே விடுதலைப்புலிகளாகவே
கண்ணுக்கு தெரியுது. வாய் உளறுது.
கக்கூஸ் போறதுக்கும் பொலிஸ் பாதுகாப்பு வேண்டும்.
இந்த லட்சனத்தில மகிந்தவுக்கு “பாரத ரத்ணா” வழங்க சிபாரிசு!
சீ.. தூ

அப்ப என்ன ம---க்கு

அப்ப என்ன ம---க்கு தூத்துக்குடியில் போரடினவங்களை
சமூகவிரோதிகள் என்று சொன்னாய்?
இப்பமாதிரி அப்பவும் பேசாம பொத்திக்கொண்டு போயிருக்கலாம்தானே?
எந்திரன்.2 ரிலீஸ்க்கு கருத்து சொல்ல வருவ
அப்ப நாங்க வைக்கிறம் கச்சேரியை!

இதோ அடுத்த சந்ததியும் போராட்டத்தை கையில் எடுக்கிறது

இதோ அடுத்த சந்ததியும் போராட்டத்தை கையில் எடுக்கிறது
இந்த சிறுவன் வெறும் பன்னிரண்டு வயதுதான். தன் உறவுகளின் படுகொலைக்கு நீதிகேட்டு ஜெனிவா செல்கிறான்.
பல நூறு மைல்கள். பல நாட்கள் சைக்கிள் பயணம். எப்படி இந்த சிறுவன் போராட துணிந்தான்?
இதில் ஆச்சரியப்பட எதுவும் இல்லை. ஏனெனில்
எந்த இனம் போர்த்துக்கேயருக்கு எதிராக போராடியதோ அந்த இனத்தைச் சேர்ந்தவன் இவன்.
எந்த இனம் ஒல்லாந்தருக்கு எதிராக போராடியதோ அந்த இனத்தைச் சேர்ந்தவன் இவன்.
எந்த இனம் ஆங்கிலேயருக்கு எதிராக போராடியதோ அந்த இனத்தை சேர்ந்தவன் இவன்.
எந்த இனம் சிங்கள அரசுக்கு எதிராக போராடி வருகிறதோ அந்த இனத்தை சேர்ந்தவன் இவன்.
ஆம். வீரம் செறிந்த போராட்ட வரலாற்றின் சொந்தக்காரர்களாகிய ஈழத் தமிழ் இனம் இவன்.
இவன் போராடுவது ஆச்சரியம் இல்லை. மாறாக போராடாமல் இருந்தால்தான் ஆச்சரியமாகும்.
ஓட முடியாதவர்கள் நடக்கிறார்கள். நடக்க முடியாதவர்கள் தவழ்கிறார்கள். ஆனால் எல்லோரும் இலக்கை நோக்கி நகர்கிறார்கள்.
இரண்டு நாட்களில் 40 அயிரம் மக்களை கொன்று புதைத்தால் ஈழத் தமிழ் இனம் போராட்டத்தை கைவிட்டு அடிமையாக கிடக்கும் என நினைத்தார்கள்.
ஆனால் கடல் கடந்து போனாலும் தம் உறவுகளுக்காக தமக்கு தெரிந்த வழியில் தம்மால் இயன்ற போராட்டத்தை ஈழத் தமிழர்கள் முன்னெடுத்து வருகிறார்கள்.
அந்தவகையில் எதிர்வரும் 17.09.18 யன்று ஜெனிவாவில் நீதிகோரி பொங்கு தமிழ் நடத்துகிறார்கள் புலம்பெயர் ஈழத் தமிழர்கள்.
அதில் கலந்துகொள்ளவே இந்த சிறுவன் சயிக்கிளில் பயணம் போகிறான். அவன் செல்லும் வழியெங்கும் மக்களிடம் நீதி கேட்கிறான்.
ஒரு சிறுவனே இந்தளவு அர்ப்பணிப்பை செய்கிறான் எனில் தமிழ் மக்களின் தலைவர் சம்பந்தர் அய்யா எந்தளவு அர்ப்பணிப்பு செய்வார்?
அவருக்கு வயதாகிவிட்டது. அவருக்கு கண் தெரியாது. காதுகே ட்காது என்று அவரது சிஷ்ய பிள்ளைகள் கூறுகிறார்கள்.
உண்மைதான். சம்பந்தர் அய்யாவுக்கு பொங்கு தமிழ் நிகழ்வில் கலந்து கொள்வது என்றால் ஏலாது.
ஆனால் ஜனாதிபதியின் பொங்கல் விழா என்றால் உடனே நல்லாய் ஏலும். சந்தோசமாக கலந்து கொள்வார்.
ஒரு சிறுவனுக்கு இருக்கும் உணர்வுகூட எம் தலைவர் சம்பந்தர் அய்யாவுக்கு இல்லையே?

சுமந்திரன்- ஜயா! ராஜீவ் கொலை வழக்கில

சுமந்திரன்- ஜயா! ராஜீவ் கொலை வழக்கில இருக்கிற எழுவரையும் விடுதலை செய்ய தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.
சம்பந்தர் அய்யா- அதற்கென்ன தம்பி இப்ப?
சுமந்திரன்- இல்லை ஜயா, அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று ஒரு அறிக்கை விட்டால் என்ன?
சம்பந்தர் அய்யா- இலங்கை சிறையில் உள்ளவர்களையே நாங்கள் விடச்சொல்லி கேட்கவில்லை. இதில இந்திய சிறையில் உள்ளவர்களை விடச் சொல்லி எப்படி கேட்பது?
சுமந்திரன் - அது வந்து ஜயா, அந்த எழுவரில நான்கு பேர் ஈழத் தமிழர். அவர்களை விடுதலை செய்யப் போகிறார்கள் என்று கதை வருகுது. எனவே நாங்கள் ஒரு அறிக்கை விட்டால் அப்புறம் நாங்கள் கேட்டதாலதான் விடுதலை செய்தவர்கள் என்று எலெக்சன் நேரம் பேசலாம் அல்லவா?
சம்பந்தர் அய்யா- நீர் சொல்ல வாறது எனக்கு புரியுது தம்பி. ஆனால் நாங்கள் அவையளை பயங்கரவாதிகள் என்றல்லவா சொல்லியிருக்கிறம். அப்புறம் இப்ப எப்படி அவர்களை விடச் சொல்லி கேட்பது?
சுமந்திரன் - சும்மா இருங்கைய்யா! இதைச் சொல்லித்தான் தமிழ்செல்வனுக்கு பின்னால நீங்கள் பைல் காவுற படத்தை பேஸ்புக்கில போட்டு நாறடிச்சவங்கள். அதை மறந்து போயிடீங்களே?
சம்பந்தர் அய்யா- ஓமோம் தம்பி. ஆனாலும் இந்தவாரம் இந்திய தூதரை பார்ட்டியில் சந்திக்கும்போது நைசாக கேட்கிறேன். அவர் சம்மதித்தால் அறிக்கை விடுவம்.
சுமந்திரன்- சரி ஜயா. முருகனின் தாயாரும் வந்து உங்களை சந்திச்சவ. ஞாபகம் வைச்சுக் கொள்ளுங்கோ. அடுத்து ஜயா! ஓரின சேர்க்கை குற்றம் இல்லை என்று நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.
சம்பந்தர் அய்யா- ஓ! அப்படியா? நீர் வழக்கு போட்டதை எனக்கு சொல்லவில்லையே தம்பி.
சுமந்திரன்- ஜயோ ஜயா! இது நான் போட்ட வழக்கு இல்லை. இது இந்திய உச்சநீதிமன்ற தீர்ப்பு ஜயா.
சம்பந்தர் அய்யா- பரவாயில்லை தம்பி. இலங்கையிலும் இப்படி ஒரு வழக்கை போட்டுப் பார்த்தால் என்ன?
சுமந்திரன்- முதலமைச்சருக்கு எதிராக மட்டும் வழக்கு போடுவதாக ஏற்கனவே என்னை திட்டுகிறார்கள். இந்த வழக்கையும் போட்டால் அப்புறம் நான் யாழ்ப்பாண பக்கம் தலைவைத்தும் படுக்க முடியாது.
சம்பந்தர் அய்யா- ஓ! அதுவும் சரிதான். எது செய்தாலும் பிரச்சனை. நாங்க வழக்கம் போல் எதுவும் செய்யாமல் பேசாமல் இருப்பம்.

ஜனாதிபதி மைத்திரி- ஹலோ மிஸ்டர் சுமந்திரன்!

ஜனாதிபதி மைத்திரி- ஹலோ மிஸ்டர் சுமந்திரன்! இந்தமுறை எப்படி எங்களை ஜநா வில காப்பாற்றப் போறீங்க? சின்னப் பொடியன் எல்லாம் சயிக்கிளில நீதி கேட்டு ஜெனீவா வருகிறானாம்.
சுமந்திரன்- நீங்க ஒன்றுக்கும் யோசியாதீங்க சேர். நானும் சம்பந்தர் ஜயாவும் அதைப் பற்றித்தான் இப்ப பேசிக் கொண்டிருக்கிறம்.
ஜனாதிபதி மைத்திரி- முதல்ல நடந்தது இனப்படுகொலை அல்ல என்று எங்களுக்காக பேசினீங்க. அப்புறம் நாங்கள் கேட்காமலே எங்களுக்கு கால அவகாசம் வாங்கித் தந்தீங்க. இந்த முறை என்ன செய்யப் போறீங்க?
சுமந்திரன்- சேர்! நீங்க சம்பந்தர் ஜயாவுக்கு பதவி தந்தீங்க. இரண்டு சொகுசு பங்களா தந்தீங்க. 6 ஜீப் வண்டியும் 30 பொலிஸ் பாதுகாப்பும் தந்திருக்கீங்க. எனக்குகூட ஜனாதிபதி சட்டத்தரணி பதவி தந்தீங்க. எஸ்.ரி.எவ் பொலிஸ் பாதுகாப்பு தந்தீங்க. அதையெல்லாம் மறக்காமல் நன்றியுடன் இருப்போம்.
ஜனாதிபதி மைத்திரி- இன்னும் என்ன வேண்டுமானாலும் கேளுங்க மிஸ்டர் சுமந்திரன். நிச்சயம் தருகிறோம். ஆனால் இம்முறையும் எங்களை எப்படியும் ஜ.நா வில காப்பாற்றி விடுங்க.
சுமந்திரன்- “இப்ப இருக்கிற அரசு நல்லாட்சி செய்கிறது. அதில் எமக்கு நம்பிக்கை இருக்கிறது” என்று சம்பந்தர் அய்யா அமெரிக்க தூதுவரிடம் கூறிவிட்டார். இந்திய அரசை நீங்கள் கொஞ்சம் கவனித்தால் அப்புறம் ஜ.நா வில் எந்தப் பிரச்சனையும் வராது சேர்.
ஜனாதிபதி மைத்திரி- அதுதான் அவர்கள் கேட்ட பலாலி விமான நிலையம் கொடுத்தாயிற்று. காங்கேசன்துறை துறைமுகம் மற்றும் சீமெந்து தொழிற்சாலை கொடுத்தாயிற்று. திருகோணமலை துறைமுகமும் கொடுத்தாயிற்று. அப்புறம் என்ன?
சுமந்திரன்- இல்லை சேர். அந்த 50 ஆயிரம் வீட்டுத்திட்டத்தையும் தமக்கு தர வேண்டும் என்று இந்திய அரசு எதிர்பார்க்கிறது
ஜனாதிபதி மைத்திரி – அதெப்படி சுமந்திரன் கொடுக்க முடியும்? இந்தியா ஒரு வீட்டுக்கு 7 லட்சம் ரூபா சொல்கிறது. ஆனால் சீனா அதே வீட்டை 4 லட்சம் ரூபாவில் கட்டி தருவதாக கூறுகிறது. நான் இந்தியாவுக்கு கொடுத்தால் அப்புறம் ஜே.வி.பி பாராளுமன்றத்தில் கேள்வி கேட்குமே.
சுமந்திரன்- எனக்கு விளங்குது சேர். ஆனால் வடபகுதி கடலில் எண்ணெய் ஆய்வுக்கு சீனாவுக்கு வழங்கியதையும் இந்தியா விரும்பவில்லை.
ஜனாதிபதி மைத்திரி- ஏற்கனவே மன்னாரில் 6 எண்ணெய்வயல் இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதில் ஒன்றில்கூட இன்னும் வேலை ஆரம்பிக்கவில்லை. அப்படியிருக்க பருத்தித்துறைகடல் எண்ணெய்வளத்தையும் எப்படி இந்தியாவுக்கு கொடுக்க முடியும்?
சுமந்திரன் - என்னவோ சேர். ஆனால் “மகிந்தவை முற்றிலும் பகைக்க வேண்டாம். ஒரு தொடர்பை பேணுங்கள்” என்று இந்திய தூதர் சம்பந்தர் ஜயாவிடம் கூறியுள்ளார். எனவே கொஞ்சம் கவனமாய் இருங்கள்.
ஜனாதிபதி மைத்திரி – என்னது? அப்ப திருப்பதிக்கு ஒருக்கால் தரிசனம் போக வேண்டும் போல் இருக்கிறது. சரி பரவாயில்லை. ஆனால் நீங்க ஜநா விடயத்தை கவனமாக பாருங்க.

தோழர் மாஓசேதுங் நினைவு தினம்.

தோழர் மாஓசேதுங் நினைவு தினம்.
இன்று செப்-9, மாபெரும் ஆசான் தோழர் மாஓ சேதுங் அவர்களின் நினைவு தினமாகும்.
அவர் “மக்கள் சக்தியே மகத்தான சக்தி” என்றார்
.
“மக்கள் சக்தி அணுகுண்டை விட வலிமையானது” என்றார்.
“மக்களோடு சேர்ந்து உண்ணுங்கள்
மக்களோடு சேர்ந்து உறங்குங்கள்
மக்களோடு சேர்ந்து உழையுங்கள்” என்று போராளிகளுக்கு வழி காட்டினார்.
“துப்பாக்கி குழாயில் இருந்தே அரசியல் அதிகாரம் பிறக்கிறது” என்பதை சுட்டிக் காட்டினார்.
“மக்களை அணிதிரட்ட ஆயிரம் பொதுக் கூட்டங்களை விட கொரில்லா தாக்குதல் மேன்மையானது” என்றார்.
ஆயுதப் போராட்டத்தின் மூலம் புதிய ஜனநாயகப் புரட்சியை வென்று காட்டினார்.
பாட்டாளி வர்க்க சர்வாதிகார தலைமையில் கலாச்சாரப் புரட்சியை வழி நடத்தினார்.
“நூறு மலர்கள் மலரட்டும் ஆயிரம் கருத்துகள் முட்டி மோதட்டும்” என்றார்.
“மரம் ஓய்வை விரும்பினாலும் காற்று விடுவதில்லை” என்றார்.
” ஒரு புரட்சி என்பது மாலை நேர விருந்தோ, ஒரு கட்டுரை எழுதுவதோ, ஓவியம் தீட்டுவதோ, பூத்தையல் வேலைப்பாடோ அல்ல……….. ஒரு புரட்சி நிதானமுள்ளதாகவும் பொறுமை, கருணை, பெருந்தன்மையுள்ளதாக இருக்க முடியாது. புரட்சி என்பது ஒரு வர்க்கம் இன்னொரு வர்க்கத்தினை பலாத்காரமாக தூக்கி எறிவதாகும் "
- மாவோ
மாக்சிச லெனிச மாவோசிச சிந்தனையின் வழிகாட்டலில்
புதிய ஜனநாயகப் புரட்சியை வென்றெடுப்போம்!

•கருத்து மக்களை பற்றிக்கொண்டால்

•கருத்து மக்களை பற்றிக்கொண்டால்
அது மாபெரும் பௌதீக சக்தியாக மாறும்!
ஜெனிவாவில் கோஷம் போடுவதால் தீர்வு வந்துவிடுமா என்று சிலர் நக்கலாக கேட்கின்றனர்.
உண்மைதான். தீர்வு வந்துவிடப் போவதில்லைதான். ஆனாலும் இதில் ஒரு பயன் இருக்கத்தான் செய்கிறது.
வல்லரசு நாடுகள் தாமாக ஒருபோதும் எம்மீது இரக்கம் கொண்டு தீர்வு கிடைக்க வழி செய்யப் போவதில்லை என்பதும் எமக்கு தெரிந்துதான் இருக்கிறது.
ஆனால்,
அமெரிக்க வல்லரசுக்கு எதிராக வியட்நாம் மக்கள் வெற்றிபெற எப்படி உலக மக்களின் ஆதரவு உதவியாக இருந்ததோ,
ரஸ்சிய வல்லரசுக்கு எதிராக ஆப்கானிஸ்தான் மக்கள் வெற்றிபெற எப்படி உலக மக்களின் ஆதரவு உதவியாக இருந்ததோ
2ம் உலக யுத்தத்தின் பின்னர் யூத மக்கள் தமக்கென்று ஒரு நாடுபெற எப்படி உலக மக்களின் அதரவு உதவியாக இருந்ததோ
அNதுபோன்று ஈழத் தமிழ்மக்களும் தமக்குரிய தீர்வுபெற உலக மக்களின் ஆதரவை வென்றெடுப்பது அவசியம்.
அதைத்தான் ஜெனிவாவில் ஒன்றுகூடும் எமது மக்கள் செய்கிறார்கள். இனியும் செய்வார்கள்.
லண்டனில் இருந்து சயிக்கிள் பயணம் , நோர்வேயில் இருந்து கார் காட்சிப் பயணம் என வழி எங்கும் மக்களை சந்திக்கிறார்கள்.
முள்ளிவாய்க்கால் படுகொலை படங்களை மக்களுக்கு காட்டி நீதி கோருகிறார்கள். உலக மக்களின் ஆதரவைப் பெற்று வருகிறார்கள்.
அதனால்தான் இலங்கை அரசு அச்சம் கொள்கிறது. புலம்பெயர் தமிழர்களின் போராட்டங்களை நசுக்க பல வழிகளிலும் அது முயற்சி செய்கிறது.
தலைவர்களை விலைக்கு வாங்கிவிட்டால் தமிழர்களின் போராட்டம் தானாக மங்கிவிடும் என இலங்கை ஆட்சியாளர்கள் நினைத்தார்கள்.
ஆனால் தமிழர்கள் தாமாகவே இந்தளவு விரைவாக திருப்பி எழும்புவார்கள் என அவர்கள் நினைத்திருக்கவில்லை.
தமிழன் திருப்பி எழும்பியது ஆச்சரியம் இல்லை. அவன் எழும்பாவிட்டால்தான் ஆச்சரியம். ஏனெனில் அவன் வீரம் செறிந்த போராட்ட வரலாற்றின் சொந்தக்காரன் அல்லவா!