Sunday, September 30, 2018

சுமந்திரன்- ஜயா! ராஜீவ் கொலை வழக்கில

சுமந்திரன்- ஜயா! ராஜீவ் கொலை வழக்கில இருக்கிற எழுவரையும் விடுதலை செய்ய தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.
சம்பந்தர் அய்யா- அதற்கென்ன தம்பி இப்ப?
சுமந்திரன்- இல்லை ஜயா, அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று ஒரு அறிக்கை விட்டால் என்ன?
சம்பந்தர் அய்யா- இலங்கை சிறையில் உள்ளவர்களையே நாங்கள் விடச்சொல்லி கேட்கவில்லை. இதில இந்திய சிறையில் உள்ளவர்களை விடச் சொல்லி எப்படி கேட்பது?
சுமந்திரன் - அது வந்து ஜயா, அந்த எழுவரில நான்கு பேர் ஈழத் தமிழர். அவர்களை விடுதலை செய்யப் போகிறார்கள் என்று கதை வருகுது. எனவே நாங்கள் ஒரு அறிக்கை விட்டால் அப்புறம் நாங்கள் கேட்டதாலதான் விடுதலை செய்தவர்கள் என்று எலெக்சன் நேரம் பேசலாம் அல்லவா?
சம்பந்தர் அய்யா- நீர் சொல்ல வாறது எனக்கு புரியுது தம்பி. ஆனால் நாங்கள் அவையளை பயங்கரவாதிகள் என்றல்லவா சொல்லியிருக்கிறம். அப்புறம் இப்ப எப்படி அவர்களை விடச் சொல்லி கேட்பது?
சுமந்திரன் - சும்மா இருங்கைய்யா! இதைச் சொல்லித்தான் தமிழ்செல்வனுக்கு பின்னால நீங்கள் பைல் காவுற படத்தை பேஸ்புக்கில போட்டு நாறடிச்சவங்கள். அதை மறந்து போயிடீங்களே?
சம்பந்தர் அய்யா- ஓமோம் தம்பி. ஆனாலும் இந்தவாரம் இந்திய தூதரை பார்ட்டியில் சந்திக்கும்போது நைசாக கேட்கிறேன். அவர் சம்மதித்தால் அறிக்கை விடுவம்.
சுமந்திரன்- சரி ஜயா. முருகனின் தாயாரும் வந்து உங்களை சந்திச்சவ. ஞாபகம் வைச்சுக் கொள்ளுங்கோ. அடுத்து ஜயா! ஓரின சேர்க்கை குற்றம் இல்லை என்று நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.
சம்பந்தர் அய்யா- ஓ! அப்படியா? நீர் வழக்கு போட்டதை எனக்கு சொல்லவில்லையே தம்பி.
சுமந்திரன்- ஜயோ ஜயா! இது நான் போட்ட வழக்கு இல்லை. இது இந்திய உச்சநீதிமன்ற தீர்ப்பு ஜயா.
சம்பந்தர் அய்யா- பரவாயில்லை தம்பி. இலங்கையிலும் இப்படி ஒரு வழக்கை போட்டுப் பார்த்தால் என்ன?
சுமந்திரன்- முதலமைச்சருக்கு எதிராக மட்டும் வழக்கு போடுவதாக ஏற்கனவே என்னை திட்டுகிறார்கள். இந்த வழக்கையும் போட்டால் அப்புறம் நான் யாழ்ப்பாண பக்கம் தலைவைத்தும் படுக்க முடியாது.
சம்பந்தர் அய்யா- ஓ! அதுவும் சரிதான். எது செய்தாலும் பிரச்சனை. நாங்க வழக்கம் போல் எதுவும் செய்யாமல் பேசாமல் இருப்பம்.

No comments:

Post a Comment