•இந்திய அரசு ஏன் தோழர் தமிழரசனுக்கு அஞ்சுகிறது?
தோழர் தமிழரசன் தமிழ்நாடு தனிநாடாக விடுதலை அடைய வேண்டும் என்று கூறியதால் இந்திய அரசு அஞ்சுகிறது என்கிறார்கள்.
அப்படியென்றால், வேறு பலர் தமிழ்த் தனிநாடு கேட்டிருக்கும்போது தமிழரசன் மீது மட்டும் ஏன் அஞ்சுகிறது? என்று கேட்டால்
தமிழரசன் தனிநாடு கேட்டது மட்டுமன்றி அதை அடைய ஆயுதப் போராட்ட பாதையை தேர்ந்தெடுத்தமையே காரணம் என்று பதில் தருகிறார்கள்.
அப்படியென்றால,; பல கம்யுனிஸ்ட் கட்சிகள் ஆயுதப் போராட்டத்தின் மூலமே புரட்சி என்று கூறிவரும்போது ஏன் தமிழரசன் மீது மட்டும் அஞ்ச வேண்டும்? என்று கேட்டால்,
மற்ற கம்யுனிஸ்ட் கட்சிகள் ஆயுதப் போராட்டத்தின் மூலமே புரட்சி என்று கூறினாலும் அவர்கள் தேர்தல் பாதையில் பயணிக்கின்றனர்.
ஆனால் தமிழரசன் தேர்தல் பாதையை நிராகரித்து ஆயுதப் போராட்டத்தை நடைமுறையில் கொண்டிருந்தார். இதுவே தமிழரசன் மீது மத்திய மாநில அரசுகள் அஞ்சுவதற்கு காரணம் என்கிறார்கள்.
ஆம். உண்மைதான். அதனால்தான் இந்திய அரசு தனது உளவுப்படைகள் மூலம் சதி செய்து தோழர் தமிழரசனைக் கொன்றது.
ஆனாலும் தமிழரசன் இறந்து 30 வருடங்களுக்கு பின்னரும் இந்திய அரசு தோழர் தமிழரசனுக்கு அஞ்சுகிறது.
தோழர் தமிழரசன் பாதையை முன்னெடுப்பவர்கள் மீது பொய் வழக்கு போட்டு சிறையில் அடைக்கிறது.
சிறையில் அடைத்தவர்களுக்கு 4 வருடங்களாகியும் ஜாமீன்கூட வழங்க மறுத்து வருகிறது.
தோழர் தமிழரசன் போஸ்டர் ஒட்டினால் பொலிசை விட்டு கிழிக்கிறது. கூட்டம் போட அனுமதி கேட்டால் தர மறுக்கிறது.
தோழர் தமிழரசன் பற்றி புத்தகம் எழுதினால் மிரட்டுகிறது. புத்தகத்தை வெளியிடுபவர்களை பொய் வழக்கு போட்டு சிறையில் அடைக்கிறது.
தமிழ்நாடு விடுதலைப்படைப் போராளி காலம்சென்ற தோழர் பசுபதி வீட்டுக்குச்;சென்று அவரின் வயதான தாயாரைக்கூட பொலிசார் மிரட்டியுள்ளனர்.
தோழர் தமிழரசனுக்கு சிலை வைக்க நிலம் வழங்கக்கூடாதென்று அந்த வயதான தாயாரிடம் மிரட்டி கையொப்பம் வாங்கியுள்ளனர்.
ஏன் இந்தளவு தூரத்திற்கு இந்திய அரசு தோழர் தமிழரசனுக்கு அஞ்சுகிறது?
ஏனெனில் தோழர் தமிழரசன் புதைக்கப்படவில்லை. விதைக்கப்பட்டிருக்கிறார். அவரிலிருந்து ஆயிரக் கணக்கான தமிழரசன்கள் முளைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இதுவே இந்திய அரசு அஞ்சுவதற்கு காரணமாகும்!
No comments:
Post a Comment