Sunday, September 30, 2018

ஓ! திலீபனே

ஓ! திலீபனே
இவர்களை மன்னிப்பாயாக!
திலீபனின் மரணம் எமக்கு இரண்டு உண்மைகளை கற்றுத் தந்துள்ளது.
முதலாவது, அகிம்சை போராட்டம் பயன் தராது என்பது.
இரண்டாவது, இந்தியா எமது நட்பு சக்தி இல்லை என்பது.
ஆனால் இந்த இரண்டு உண்மைகளையும் மறந்து விட்டு அல்லது மறைத்துவிட்டு சிலர் அஞ்சலி செலுத்துகிறார்கள்.
அகிம்சை வழியை போதித்த காந்தியின் தேசம் எனப்படும் இந்தியாவும்கூட அகிம்சை போராட்டத்தை மதிக்காது என்பதை திலீபன் மரணம் நிரூபித்தது.
திலீபன் ஒரு ஆயுதம் தாங்கிய போராளி. அதனால்தான் இந்தியா அவரது அகிம்சை போராட்டத்தை மதிக்கவில்லை என சிலர் அதற்கு நியாயம் கூறுகிறார்கள்.
அப்படியென்றால் அதே காலப்பகுதியில் அன்னை பூபதியின் அகிம்சைப் போராட்டத்தையும் இந்தியா மதிக்கவில்லையே. அவருடைய மரணத்திற்கு உங்கள் பதில் என்ன? என்று கேட்டால் இவர்கள் பதில் தருவதில்லை.
இதுவரை புலிகளை பயங்கரவாதிகள் என விமர்சித்து வந்த சுமந்திரன்கூட இன்று திலீபனுக்கு விளக்கேத்தி அஞ்சலி செலுத்துகிறார்.
இவர்கள் திலீபனுக்கு அஞ்சலி செலுத்துவது திலீபன் மீது கொண்ட மதிப்பினால் அல்ல. மாறாக அதனை ஒரு போட்டோ எடுத்து மக்களிடம் காட்டி வோட்டு பெறுவதற்காகவே.
போகிற போக்கைப் பார்த்தால் தமிழ் மக்களின் வோட்டைப் பெறுவதற்காக மகிந்த ராஜபக்சாவும் திலீபனுக்கு அஞ்சலி செலுத்தினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

No comments:

Post a Comment