இதோ அடுத்த சந்ததியும் போராட்டத்தை கையில் எடுக்கிறது
இந்த சிறுவன் வெறும் பன்னிரண்டு வயதுதான். தன் உறவுகளின் படுகொலைக்கு நீதிகேட்டு ஜெனிவா செல்கிறான்.
பல நூறு மைல்கள். பல நாட்கள் சைக்கிள் பயணம். எப்படி இந்த சிறுவன் போராட துணிந்தான்?
இதில் ஆச்சரியப்பட எதுவும் இல்லை. ஏனெனில்
எந்த இனம் போர்த்துக்கேயருக்கு எதிராக போராடியதோ அந்த இனத்தைச் சேர்ந்தவன் இவன்.
எந்த இனம் ஒல்லாந்தருக்கு எதிராக போராடியதோ அந்த இனத்தைச் சேர்ந்தவன் இவன்.
எந்த இனம் ஆங்கிலேயருக்கு எதிராக போராடியதோ அந்த இனத்தை சேர்ந்தவன் இவன்.
எந்த இனம் சிங்கள அரசுக்கு எதிராக போராடி வருகிறதோ அந்த இனத்தை சேர்ந்தவன் இவன்.
ஆம். வீரம் செறிந்த போராட்ட வரலாற்றின் சொந்தக்காரர்களாகிய ஈழத் தமிழ் இனம் இவன்.
இவன் போராடுவது ஆச்சரியம் இல்லை. மாறாக போராடாமல் இருந்தால்தான் ஆச்சரியமாகும்.
ஓட முடியாதவர்கள் நடக்கிறார்கள். நடக்க முடியாதவர்கள் தவழ்கிறார்கள். ஆனால் எல்லோரும் இலக்கை நோக்கி நகர்கிறார்கள்.
இரண்டு நாட்களில் 40 அயிரம் மக்களை கொன்று புதைத்தால் ஈழத் தமிழ் இனம் போராட்டத்தை கைவிட்டு அடிமையாக கிடக்கும் என நினைத்தார்கள்.
ஆனால் கடல் கடந்து போனாலும் தம் உறவுகளுக்காக தமக்கு தெரிந்த வழியில் தம்மால் இயன்ற போராட்டத்தை ஈழத் தமிழர்கள் முன்னெடுத்து வருகிறார்கள்.
அந்தவகையில் எதிர்வரும் 17.09.18 யன்று ஜெனிவாவில் நீதிகோரி பொங்கு தமிழ் நடத்துகிறார்கள் புலம்பெயர் ஈழத் தமிழர்கள்.
அதில் கலந்துகொள்ளவே இந்த சிறுவன் சயிக்கிளில் பயணம் போகிறான். அவன் செல்லும் வழியெங்கும் மக்களிடம் நீதி கேட்கிறான்.
ஒரு சிறுவனே இந்தளவு அர்ப்பணிப்பை செய்கிறான் எனில் தமிழ் மக்களின் தலைவர் சம்பந்தர் அய்யா எந்தளவு அர்ப்பணிப்பு செய்வார்?
அவருக்கு வயதாகிவிட்டது. அவருக்கு கண் தெரியாது. காதுகே ட்காது என்று அவரது சிஷ்ய பிள்ளைகள் கூறுகிறார்கள்.
உண்மைதான். சம்பந்தர் அய்யாவுக்கு பொங்கு தமிழ் நிகழ்வில் கலந்து கொள்வது என்றால் ஏலாது.
ஆனால் ஜனாதிபதியின் பொங்கல் விழா என்றால் உடனே நல்லாய் ஏலும். சந்தோசமாக கலந்து கொள்வார்.
ஒரு சிறுவனுக்கு இருக்கும் உணர்வுகூட எம் தலைவர் சம்பந்தர் அய்யாவுக்கு இல்லையே?
No comments:
Post a Comment