Sunday, September 30, 2018

•தோழர் தமிழரசன் பெயரை முகநூலில் எழுதினால்கூட

•தோழர் தமிழரசன் பெயரை
முகநூலில் எழுதினால்கூட
இந்திய அரசு அச்சம் கொள்கிறது!
கண்ணதாசன் என்ற உணர்வாளர் முகநூலில் தமிழ்நாடு தனிநாடு ஆகவேண்டும் என்று எழுதியற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தியா ஒரு ஜனநாயகநாடு. இங்கு கருத்து சுதந்திரம் எழுத்துச் சுதந்திரம் பேச்சு சுதந்திரம் இருப்பதாக கூறுகிறார்கள்.
ஆனால் தன் கருத்தை தெரிவித்தமைக்காக கண்ணதாசன் என்ற தமிழ் இன உணர்வாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதுவும் முகநூலில் கருத்து தெரிவிப்பதற்காக வழக்கு போட முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ள நிலையிலும் அதையும்மீறி கைது செய்துள்ளனர்.
தமிழ்நாடு தனிநாடாக வேண்டும் என்று காலம் காலமாக பலர் கூறிவரும் நிலையில் ஏழைத் தொழிலாளியான கண்ணதாசன் ஏன் கைது செய்யப்பட்டுள்ளார்?
கண்ணதாசன் தோழர் தமிழரசன் படத்தை முகநூலில் வைத்துள்ளார். தோழர் தமிழரசன் பாதையில் தனிநாடு காண வேண்டும் என்று விரும்புகிறார்.
அதனால்தான் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இது தோழர் தமிழரசன் குறித்து இன்றும் இந்திய அரசு அச்சம் கொள்கிறது என்பதையே காட்டுகிறது.
உணர்வாளர்களை கைது செய்து சிறையில் அடைப்பதன் மூலம் அவர்களின் உணர்வுகளை அடக்கிவிட முடியாது.
மாறாக அடக்க அடக்க அந்த அடக்குமுறைக்கு எதிராக வெடித்து கிளம்புவார்கள்.
இத்தனை காலமும் ஒன்றுபட்ட இந்தியாவை விரும்பிய கண்ணதாசன்கள் இன்று தனிநாடு கேட்கின்றார்கள் எனில் அது கண்ணதாசன்கள் தவறு அல்ல. மாறாக அவர்களை அடக்கி ஒடுக்கிவரும் இந்திய அரசின் தவறே காரணம்.
எனவே உணர்வாளர் கண்ணதாசனை உடனே விடுதலை செய்ய வேண்டும்.

No comments:

Post a Comment