•ஈழத் தமிழருக்கு நீதி கிடைக்க இந்தியா உதவுமா?
“மகிந்த சீன ஆதரவாளர். அதனால்தான் அவரை இந்தியாவும் அமெரிக்காவும் ஆட்சியில் இருந்து அகற்றியது” என்று ஒரு கும்பல் இதுவரை கூறிக்கொண்டிருந்தது.
இப்போது அந்த கும்பல் என்ன கூறப்போகின்றது?
மகிந்த இப்போது வெறும் எம்.பி மட்டுமே. அதுவும் சுப்பிரமணியசுவாமியின் அழைப்பின் பேரில் வந்தவருக்கு இத்தனை முக்கியத்துவம் இந்தியா ஏன் வழங்க வேண்டும்?
மகிந்தவை இந்திய பிரதமர் மோடி சந்தித்துள்ளார். முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் சந்தித்துள்ளார். காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி சந்தித்துள்ளார்.
இலங்கையில் நடந்தது இனப்படுகொலை என்று தமிழக சட்ட மன்றம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
இலங்கையில் நடந்தது இனப்படுகொலை என்று வடமாகாணசபை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
இலங்கையில் நடந்த இனப்படுகொலை விசாரணை செய்யப்பட வேண்டும் என்று UNHCR மனிதவுரிமை கமிஷன் தெரிவித்துள்ளது.
புலம்பெயர் ஈழத் தமிழர்கள் நீதி கோரி ஜெனிவாவில் “பொங்கு தமிழ”; கூடுகிறார்கள்.
இந்நிலையில் இதையெல்லாம்மீறி இனப்படுகொலை சூத்திரதாரி மகிந்த ராஜபக்சவை இந்தியா வரவேற்று உபசரிக்கிறது என்றால் என்ன அர்த்தம்?
இத்தனைக்கு பிறகும் ஈழத் தமிழருக்கு நீதி கிடைக்க இந்தியா உதவும் என்று கூறுபவர்களை என்னவென்று அழைப்பது?
No comments:
Post a Comment