Saturday, March 30, 2019

28 வருடங்களாக தன் மகனின் விடுதலைக்காக ஓயாது நடந்த

28 வருடங்களாக தன் மகனின் விடுதலைக்காக ஓயாது நடந்த
அந்த அற்புதமான தாய் அழைக்கிறார் மனித சங்கிலியில் பங்கேற்க.
ஒட்டுமொத்த தமிழர்களும் ஒன்றினைந்து பங்கேற்போம். ஒருமித்து குரல் கொடுப்போம்.
அவர் மகன் பேரறிவாளனை விடுவித்து அவருடன் வீட்டுக்கு அனுப்பி வைப்போம்.
இனியாவது அவர் கால்கள் ஓய்வு பெறட்டும்.
25 வருடங்களாக தாய் தந்தையரை காணமுடியாமல் லண்டனில் தவித்துக் கொண்டிருக்கும் அரித்ராவுக்கு அவர் தாய் தந்தையரான முருகன் நளினியை விடுவித்து உதவுவோம்
சாவதற்கு முன் தன் மகனை ஒருமுறை பார்த்துவிட வேண்டும் என்று உயிரைப் பிடித்துக்கொண்டிருக்கும் சாந்தனின் தாயாருக்கு அவர் மகனை விடுவித்து உதவுவோம்.
ஏழு தமிழரின் விடுதலை என்பது ஏழு கோடி தமிழர்களின் விருப்பம் என்பதை இந்திய அரசுக்கு காட்டுவோம்.

தமிழினம் இதுவரை வெற்றி பெறாமைக்கு காரணம் தொடரும் தமிழ் தலைமைகளின் துரோகமே!

•தமிழினம் இதுவரை வெற்றி பெறாமைக்கு காரணம்
தொடரும் தமிழ் தலைமைகளின் துரோகமே!
போர்த்துக்கேயருக்கு எதிராக 100 வருடம் போராடிய தமிழினம்
ஒல்லாந்தருக்கு எதிராக 100 வருடம் போராடிய தமிழினம்
ஆங்கிலேயர்களுக்கு எதிராக 150 வருடம் போராடிய தமிழினம்
சிங்கள அரசுக்கு எதிராக 71 வருடமாக போராடி வரும் தமிழினம்
இன்னும் தனக்கான விடுதலையை பெற முடியாமைக்கு என்ன காரணம்?
தலைமைகளின் துரோகம் தவிர வேறு என்னவாக இருக்க முடியும்?
போர் முடிந்து 10 வருடமாகிவிட்டது. இன்னும்
• சிறையில் உள்ளவர்கள் விடுதலை செய்யப்படவில்லை
• காணாமல் போனோர் கண்டு பிடிக்கப்பட வில்லை
• இடம் பெயர்ந்தோர் மீள் குடியேற்றம் செய்யப்பட வில்லை
ஆனாலும் எமது தலைமைகள் மேலும் இரண்டு வருடகால அவகாசத்தை இலங்கை அரசுக்கு பெற்றுக் கொடுத்திருக்கிறார்கள்.
கடந்தமுறையும் இரண்டுவருடகால அவகாசத்தை இவர்கள்தானே பெற்றுக் கொடுத்தார்கள். அதில் இலங்கை அரசு என்ன சாதித்தது?
இப்போது எந்த முகத்துடன் மீண்டும் இரண்டு வருடகால அவகாசத்தை இலங்கை அரசுக்கு பெற்றுக் கொடுக்கிறார்கள்?
அடுத்த இரண்டு வருடத்திலும் இலங்கை அரசு எதுவும் செய்யவில்லை என்றால் இவர்கள் அதற்குரிய பொறுப்பை எடுப்பார்களா?
நிச்சயமாக எடுக்கமாட்டார்கள். அடுத்த முறையும் ஏதாவது காரணம் கூறி இலங்கை அரசைக் காப்பாற்றுவார்கள்.
அப்படியென்றால் இதற்கு என்னதான் தீர்வு?
தீர்வு- இந்த துரோகத் தலைமைகளை அப்புறப்படுத்தாதவரை தமிழ் மக்களுக்கு எந்த தீர்வும் கிடைக்கப்போவதில்லை.
குறிப்பு- இம்முறை இலங்கை அரசுக்கு கால அவகாசத்தை கொடுக்கும் தீர்மானத்தை பிரிட்டனும் கனடாவுமே கொண்டு வருகின்றன. பிரிட்டனில் ஒரு லட்சம் தமிழரும் கனடாவில் 3 லட்சம் தமிழரும் இருந்தும் இந் நாடுகள் இத் தீர்மானத்தை கொண்டு வருகின்றது எனில் இந் நாடுகளில் ராஜதந்திர நகர்வுகளை மேற்கொள்வதாக கூறும் தமிழ் அமைப்புகளின் தோல்வி இது என்பதே அர்த்தமாகும்.
இனி என்ன செய்ய வேண்டும்?
(1)தமிழ் அமைப்புகள் முதலில் தமிழ் மக்களுக்கு உண்மையை சொல்ல வேண்டும்.
(2) உண்மையை சொல்லி தமிழ் மக்களை அமைப்பாக திரட்ட வேண்டும்
(3) தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல அனைத்து உலக மக்களுக்கும் உண்மை விபரங்களை தெரியப்படுத்தி அவர்களின் ஆதரவை திரட்ட வேண்டும்.
எம்முடைய கருத்துக்கு பின்னால் எந்தளவு மக்கள் இருக்கிறார்கள் என்பதை வைத்தே எந்த ஒருநாடும் எமது பிரச்சனையை அணுகும் என்ற உண்மையை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.

எதிரி தெளிவாக இருக்கிறான்.

எதிரி தெளிவாக இருக்கிறான்.
நம்மவர்கள்தான் குழம்புகிறார்கள்
இவர்கள் என்ன மதம் என்று எதிரி பார்க்கவில்லை
இவர்கள் தமிழர் இனம் என்றுதானே கொன்று குவித்தான்.
எதிரி சிவன் ஆலயத்தின் மீதும் குண்டு போட்டான்
எதிரி இயேசுவின் தேவாலயத்தின் மீதும் குண்டு போட்டான்.
நாம் அழிந்தபோது சிவனும் வந்து காப்பாற்றவில்லை
நாம் அழிந்தபோது இயேசுவும் வந்து காப்பாற்றவில்லை
அப்புறம் ஏன்டா மத ரீதியாய் பிரிந்து உங்களுக்குள் அடிபட்டுக் கொள்கிறீர்கள்?
குறிப்பு – “உழைத்து உழைத்து உருக்குலைந்துபோன மக்களை மேலெழும்ப விடாமல் அழுத்தி வைக்கும் ஆபத்தான ஆயுதங்களே மதமும் கடவுளும் - தோழர் லெனின்

• மார்ச் -8 சர்வதேச மகிளிர் தினத்தை முன்னிட்டு.

• மார்ச் -8 சர்வதேச மகிளிர் தினத்தை முன்னிட்டு.
ஒரு கை போனாலும் மறு கையால்
துப்பாக்கி ஏந்தி போராடவும் செய்தார்கள்
ஒரு கையால் குடை பிடித்துக்கொண்டு
மறு கையால் ஒழுகும் கொட்டிலில் பரீட்சை எழுதினார்கள்
மாணவர்களை பதுங்குழியில் இருத்திவிட்டு தாய்க் கோழிபோல் காத்து நின்றார்கள்.
இவர்களால் மண் பெருமை அடைகிறதா அல்லது மண் இவர்களுக்கு பெருமை சேர்க்கிறதா என்று எனக்கு தெரியவில்லை.
ஆனால் இவர்கள் முறத்தால் புலியை விரட்டியதாக கூறும் புறநானூற்றுக் கதைகள் எல்லாம் உண்மைதானோ என்று இப்பொது நினைக்க தோன்றுகிறது.
எனது கவலை எல்லாம்,
என் இனத்து பெண்களின் இந்த அற்புதமான கதைகளை உலகிற்கு சொல்ல ஒரு சிறந்த எழுத்தாளர் இல்லையே?
இவர்களது கதையை ஒரு படமாக தர ஒரு சிறந்த இயக்குனர் இல்லையே?
இவர்களது கதையை காவியமாக பாட ஒரு நல்ல கவிஞர் இல்லையே ? என்பதுதான்.
ஆனாலும் அவர்கள் தங்கள் வரலாற்றை தாமே படைப்பார்கள். அதில் எந்த சந்தேகமும் இல்லை.
ஆதிகாலத்தில் பெண் தலைமையே இருந்ததாக சமூக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
காலப் போக்கில் பெண் எப்படி அடிமையானாள் அல்லது ஆணாதிக்கம் எப்படி ஏற்பட்டது என்பது பற்றி இங்கு நான் உரையாடப் போவதில்லை.
ஆனால் வெகுவிரைவில் அனைத்து அடிமைத்தனத்தையும் உடைத்து அவர்கள் தமது வரலாற்றை படைப்பார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
அதற்குரிய அனைத்து தகுதிகளும் எமது தமிழ இன பெண்களுக்கு உண்டு என்பதை யாராலும் மறுக்க முடியாது.

பெண்களுக்கு முழு சுதந்திரம் வாங்கிக் கொடுக்காத வரையிலும்,பாட்டாளி வர்க்கம் முழு விடுதலையை அடைய முடியாது." - லெனின்

பெண்களுக்கு முழு சுதந்திரம் வாங்கிக் கொடுக்காத வரையிலும்,பாட்டாளி வர்க்கம் முழு விடுதலையை அடைய முடியாது." - லெனின்
ஒரு முதலாளித்துவ குடியரசில் எவ்வளவு ஜனநாயகம் உள்ள நாடாக இருந்த போதிலும் தனிச் சொத்துரிமை இருக்கின்ற நாடான போதிலும் உலகத்தின் எந்தப் பகுதியிலும் அதிகமான முன்னேற்றம் அடைந்த நாட்டில் கூட பெண்களுக்கு ஆண்களைப் போல் முழு அளவுக்கு சமமான உரிமைகள் இல்லை.
முதலாளித்துவ ஜனநாயகம் என்பது சுதந்திரத்தையும், சமத்துவத்தையும் பற்றி அலங்காரமான சொற்றொடர்களும் கம்பீரமான வார்த்தைகளும் மிதமிஞ்சிய வாக்குறுதிகளும் ஆர்பாட்டங்களுமாக ஒலிக்கும் கோஷங்களும் உள்ள ஜனநாயகமாகும். ஆனால் பெண்களின் உண்மை நிலையை அதாவது சமத்துவமும் சுதந்திரமும் இல்லாது இருப்பதை மூடி மறைக்கிறது.
ஆனால் ´சோலிஸ்ட் ஜனநாயகம்´ என்பது புரட்டான பகட்டான போலியான வார்த்தைகளை அலட்சியப்படுத்துகிறது...
ஒடுக்கப்பட்டவர்களுக்கும் ஒடுக்குவோர்களுக்கும் சுரண்டப்படுபவர்களுக்கும் சுரண்டுவோருக்கும் இடையே சமத்துவம் என்பது இல்லை. அப்படி ஏற்படவும் முடியாது.
ஆண்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் சட்டப்பூர்வமான தனி உரிமைகளால் பெண்குலம் பாதிக்கப்படும் வரை மூலதனத்திலிருந்து தொழிலாளிக்கு விடுதலை கிடைக்காத வரை முதலாளி நில உரிமையாளர் வணிகர் ஆகியோரின் அதிகாரத்தில் இருந்து உழைக்கும் விவசாயிக்கு விடுதலை கிடைக்காத வரையில் உண்மையான சுதந்திரம் என்பது கிடையவே கிடையாது.
"ஒடுக்கப்பட்ட பெண்ணினத்துக்கு சுதந்திரமும், சமத்துவமும்...."
"தொழிலாளிகளுக்கும், உழைக்கும் விவசாயிகளுக்கும் சுதந்திரமும், சமத்துவமும்..."
"ஒடுக்குபவர்களுக்கு எதிராக, முதலாளிகளுக்கு எதிராக, ஏழை விவசாயிகளைச் சுரண்டும் பணக்கார விவசாய உடைமையாளர்களுக்கு எதிராகப் போராட்டம்..."
இதுவே நமது போர் முழக்கம்! இதுவே நமது பாட்டாளி வர்க்க உண்மை!!.

மன்னார் புதைகுழி அறிக்கையும் சுமந்திரனும்

மன்னார் புதைகுழி அறிக்கையும் சுமந்திரனும்
மன்னார் புதைகுழி இராணுவத்தின் கட்டுப்பாட்டு காலத்தில் நடந்தது என்றால் இலங்கை அரசு விரும்பாது.
மன்னார் புதைகுழி இந்திய ராணுவ காலத்தில் நடந்தது என்றால் இந்திய அரசுக்கு பிடிக்காது
மன்னார் புதைகுழி விடுதலைப் புலிகளின் காலத்தில் நடந்தது என்றால் தமிழ் மக்கள் நம்பப் போவதில்லை.
பார்த்தான் அமெரிக்ககாரன். பேசாமல் இது சங்கிலியன் காலத்தில் நடந்தது என்று அறிக்கையை தந்துவிட்டான்.
அறிக்கை வரும்போது தமிழ் மக்கள் அதிர்ச்சி அடைவார்கள் என்று சுமந்திரன் கூறியபோதே நாம உஷாராகியிருக்கனும்.
இது புலிகள் காலத்தில் நடந்தது என்றுதான் கூறப்போகின்றார்கள் என்று நினைத்துவிட்டோம்.
இப்படி சங்கிலியன் காலத்தில் நடந்தது என்று கூறுவார்கள் என கனவிலும் நினைக்க முடியவில்லை.
சங்கிலியன் காலத்தில் கிருத்தவ மதத்திற்கு மாறிய 600 பேர் கொல்லப்பட்டதாக வரலாறு கூறுகின்றது.
எனவே அது இதுதான் என்றும் அவர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்றும் சுமந்திரன் இனி கோரலாம்.
ஒருவேளை சுமந்திரன் அவ்வாறு கோரினால் அதற்கு முழு அதரவு வழங்க தயாராய் இருக்கிறோம்.
ஏனெனில் சங்கிலியனின் வாரிசு தான் என்று ஒருவன் ஹோலண்டில் கூறிக்கொண்டிருக்கிறான்.
முகநூலில் அவன் தொல்லை தாங்க முடியவில்லை. எனவே சங்கிலியன் செய்த கொலைக்காக இவனை பிடித்து சிறையில் தள்ளுங்கள்.
கெட்டதிலும் ஒரு நல்லது போன்று இவனின் தொல்லையாவது இல்லாமல் போகட்டும்.
சுமந்திரன் சேர்! வெகுவிரைவில் ஒரு அறிக்கை விடுங்கள்.

புரட்சி புயல் அவர்களே

புரட்சி புயல் அவர்களே
கொஞ்சம் திரும்பி பாருங்கள்
ஆரம்பித்த இடத்திற்கே திரும்பி வந்து நிற்கின்றீர்கள்
ஒரு சீட்டுக்காக திமுக வை ஆதரிப்பதைக்கூட சகித்து கொள்ளலாம்.
ஆனால் காங்கிரஸ் கட்சியை எப்படி நியாயப்படுத்தப் போகின்றீர்கள் என்பதை நினைத்தால் அருவருப்பாக இருக்கிறது.
அன்னை சோனியாவை ஆதரியுங்கள் என்று உங்கள் குரல் முழங்கும்போது அன்னை பார்வதி அம்மாளின் முகம் வராமலா போகும்?
ராகுல்காந்தியை பிரதமராக்குவோம் என்று மேடையில் நீங்கள் பேசும்போது சிறுவன் பாலச்சந்திரன் முகம் உங்களுக்கு வராமலா போகும்?
சரி. நடந்தது நடந்ததாகவே இருக்கட்டும். இனியாவது இப்படி நடக்காது என்ற ஒரு உறுதிமொழியையாவது காங்கிரசிடமிருந்து உங்களால் பெற முடிந்ததா?
நடந்ததற்கு இதுவரை வருத்தம் தெரிவிக்கவில்லை. இனி இப்படி நடக்காது என்றும் உறுதி தரவில்லை.
அப்புறம் எதற்காக காங்கிரசை ஆதரிக்க முடிவெடுத்தீர்கள்.?
கேவலம் ஒரு சீட்டுக்காகவா?
பேசாமல் கட்சியை கலைத்துவிட்டு திமுக வில் சங்கமித்துவிடுங்கள்.