Friday, July 31, 2020
வேலிக்கு ஓணான் சாட்சி!
வேலிக்கு ஓணான் சாட்சி!
5 கோடி ரூபா கூட சேரவில்லை. அப்புறம் எப்படி 20 கோடி ரூபா அனுப்பியிருக்க முடியும் என கனடா கிளைத் தலைவர் தங்கவேல் கேட்டிருக்கிறார்.
நல்ல கேள்வி. ஆனால் சுமந்திரனை காப்பாற்றுவதாக நினைத்து அவர் கூறியது சுமந்திரனுக்கு இன்னும் சிக்கல் வழங்குவதாகவே இருக்கிறது.
ஏனெனில் சுமந்திரன் தான் ஒரு சதம்கூட பெறவில்லை என்று தொடர்ந்து மறுத்துக் கொண்டிருக்கும் நிலையில் 5 கோடி ரூபா கொடுத்திருப்பதாக கூறுவது அவருக்கு உதவுவதாக இல்லை.
சரி பரவாயில்லை, 5 கோடி ரூபா வாங்கிவிட்டு எப்படி ஒரு சதம்கூட வாங்கவில்லை என்று உங்களால் பொய் கூறமுடிகிறது என்று சுமந்திரனிடம் நாம் கேட்கப் போவதில்லை.
ஏனெனில் அவர் பொய் சொல்கிறார் என்று தெரிந்த பின்னும் ஏன் பொய் கூறினீர்கள் என்று கேட்பது முட்டாள்தனம். ஏனெனில் அதற்கும் அவர் பொய்தான் கூறுவார்.
அதேவேளை தங்கவேல் அவர்கள் கூறுவதையும் உண்மை என்று அப்படியே ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனெனில் அவர் தனது கிளைக் கணக்கு வழக்குகளை இதுவரை பொது வெளியில் தந்தது இல்லை.
அடிக்கடி இந்தியா சென்று வரும் இவர் தனது அந்தகால விருப்பமான நடிகைக்கு அன்பளிப்புகளை வழங்கி வருவதாகவும் அதற்கெல்லாம் இவருக்கு பணம் ஏது என்று சிலர் கேட்கின்றனர்.
ஆனால் இது அவரது தனிப்பட்ட விடயம் மட்டுமல்ல ஆதாரமற்ற அவதூறும் ஆகும். எனவே நாம் இதில் அக்கறை காட்ட வேண்டியதில்லை.
ஆனால் அவர் உண்மையில் சுமந்திரனை மட்டுமல்ல தன்னையும் காப்பாற்ற விரும்பினால் இதுவரை கனடா கிளை சேர்த்த பணம் எவ்வளவு, கட்சிக்கு கொடுக்கப்பட்டது எவ்வளவு என்ற கணக்கு விபரங்களை இனியாவது மக்கள் முன் வைக்க வேண்டும்.
இப்படி அவர் மக்கள் முன் கணக்கு வழக்குகளை வைத்தால் அது லண்டன் கிளைக்கும் ஒரு முன் மாதிரியாகவும் அவர்களும் கணக்கு காட்ட வேண்டிய நிலையை உருவாக்கும்.
குறிப்பு - தங்கவேல் அவர்களின் அறிக்கை கீழே பின்னூட்டத்தில் தரப்பட்டுள்ளது.
Image may contain: 1 person, close-up
கடவுளை நம்பாமல் முகத்திற்கு மாஸ்க் அணிபவர்கள் நாத்திகவாதிகளா?
கடவுளை நம்பாமல் முகத்திற்கு மாஸ்க் அணிபவர்கள் நாத்திகவாதிகளா?
கடவுளை நம்பும் ஆத்மீகவாதிகளும் மாஸ்க் அணிவதன் மூலம் நடைமுறையில் நாத்திகவாதிகளாகவே இருக்கின்றனர்.
என்னதான் கடவுள் விதித்த விதிப்படியே யாவும் நடப்பதாக நம்புவர்கள்கூட வீதியைக் கடக்கும்போது சிக்னல் லைற்றையே நம்பிக் கடக்கிறார்கள்.
இந்த உண்மையைச் சொன்னால் உடனே ஓடிவந்து நீங்கள் ஏன் மாஸ்க் அணிந்த கிருத்தவ பாதிரியார் படம் போடவில்லை,? அல்லது ஏன் ஒரு முஸ்லிம் படம் போடவில்லை என்று கேட்பார்கள்.
இப்படியானவர்களுக்கு கொஞ்சமாவது சிந்திக்கும் திறன் கொண்ட மூளையைக் கொடுப்பதற்காவது ஒரு கடவுள் இருந்தால் நல்லது என்றே தோன்றுகிறது.
Image may contain: one or more people and people standing
லண்டனில் மீண்டும் ஒரு குழந்தை கொலை!
லண்டனில் மீண்டும் ஒரு குழந்தை கொலை!
லண்டனில் ஈழத்து தமிழ் தாய் ஒருவர் தன் குழந்தையை குத்திவிட்டு தன்னையும் குத்தியுள்ளார். இதில் குழந்தை இறந்துவிட்டதாக அறிய வருகிறது.
இரு மாதங்களுக்கு முன்னர் இதேபோன்று தமிழ் தந்தை ஒருவர் தன் இரு குழந்தைகளையும் குத்திக் கொன்றார்.
மன அழுத்தம் காரணமாக பெற்றோர் இவ்வாறு குழந்தைகளைக் கொல்வதாக சிலர் கூறுகின்றனர்.
என்னதான் மன அழுத்தம் இருந்தாலும் ஒரு பெத்த தாயால் தன் குழந்தைகளைக் கொல்ல முடியுமா?
ஆம் எனின் அதைவிடக் கொடுமை ஏது?
குறிப்பு - மன அழுத்தம் உள்ளவர்களுக்கு சிகிச்சை கிடைக்க உறவினர்கள் அல்லது நண்பர்கள் வழி செய்ய வேண்டும்.
Image may contain: 1 person, hat and close-up
என்னடா நியாயம் இது?
•என்னடா நியாயம் இது?
20 கோடி ரூபா எங்கே என்று கேட்டவுடன் கேட்ட பெண்ணை மகிந்தவின் ஊடுருவல் என்றார் சுமந்திரன்.
இப்போது ஜபிசி ஊடகம் தனக்கு எதிராக எழுதுகிறது என்றவுடன் மகிந்தவிடம் பணம் பெற்று எழுதுவதாக சுமந்திரன் கூறுகிறார்.
சுமந்திரன் இவ்வாறு தன்னை எதிர்ப்பவர்கள் மீது மகிந்த முத்திரை குத்துவது ஆச்சரியம் இல்லை.
ஆனால் எமது அச்சம் என்னவென்றால் தேர்தலில் தோற்றால் தமிழ் மக்கள் எல்லோரும் மகிந்தவின் ஆட்கள் என்று கூறிவிடப் போகிறாரே.
ஓ! கோரோனேவே
சுமந்திரனைக் கொன்றுவிடு. அல்லது எம்மையாவது கொன்றுவிடு.
Image may contain: 1 person, sitting
அடிப்பதுதான் வன்முறை திருப்பி அடிப்பது வன்முறை அல்ல. தற்காப்பு.
•அடிப்பதுதான் வன்முறை
திருப்பி அடிப்பது வன்முறை அல்ல. தற்காப்பு.
தமிழ் போராளிகள் ஆயுதம் ஏந்திப் போராடியது வன்முறை என்றும் அதை தன்னால் ஏற்றுக்கொள்ள முடியாது என்று சுமந்திரன் அடிக்கடி சொல்லிக் கொண்டு திரிகிறார்.
தயவு செய்து யாராவது அவரிடம் கூறுங்கள், அடிப்பதுதான் வன்முறை. திருப்பி அடிப்பது வன்முறை அல்ல. அது தற்காப்பு என்று.
அதனால்தான் டெலோ தலைவர் தஙகத்துரை அவர்கள் நீதிமன்றத்தில் “நாம் வன்முறை மீது காதல் கொண்ட மனநோயாளிகள் அல்லர்” என்று கூறினார்.
அதுமட்டுமல்ல, ஜனாதிபதியாக இருந்த சந்திரிக்காவே “ பிரபாகரன்கள் ஆயுதம் ஏந்த இலங்கை அரசு செய்த தவறுகளே காரணம்” என்று கூறினார்.
ஆனால், முஸ்லிம்கள் தம்மை தற்காத்துக்கொள்ள ஆயுதம் ஏந்தியது நியாயம் என்று கூறும் சுமந்திரன் தமிழ் மக்கள் ஆயுதம் ஏந்தியது வன்முறை என்றும் அதனை தன்னால் எற்றுக்கொள்ள முடியாது என்கிறார்.
அதுமட்டுமல்ல இப்போது ஆயுதம் ஏந்துவதாக இருந்தால் வாள் வெட்டுக் கோஸ்டியுடன்தான் சேரவேண்டும் என்று கிண்டல் செய்கிறார்.
ஆயுதம் ஏந்தியவர்களால் உருவாக்கப்பட்ட கட்சியில் இருந்துகொண்டு அதன் மூலம் பதவியும் பெற்றுக்கொண்டு நன்றி மறந்து ஆயுதப் போராட்டத்தை நக்கல் அடிக்க சுமந்திரன் ஒருவரால்தான் முடியும்.
1983 கலவரத்தில் தானும் கப்பலில் அகதியாக வந்து யாழ்ப்பாணம் இறங்கியவன் என்கிறார். அப்படியென்றால் 5 வயது முதல் கொழும்பில் வாழ்ந்தது தனது பாக்கியம் என்று எப்படி இவரால் கூற முடிகிறது?
லூசுப் பயல்!
Image may contain: 4 people, including Anthonippillai Reginoldraj, ஆதித்தன் ஆதி and Sivasubramaniam-jothilingam Jothilingam, shorts, text that says "தூக்குடா மாப்ள லூசு ஆயிட்டான் இவனை விட்டா டா நமக் நமக்கு தான் ஆப்பு"
மலராமலே கருகிய மொட்டு!
மலராமலே கருகிய மொட்டு!
அடுத்த சந்ததி இனப்படுகொலைக்கான நீதியை பெறாமல் ஓயாது என்பதற்கு சாட்சியாய் இருந்த மொட்டு ஒன்று மலராமலே கருகிவிட்டது.
என்ன சொல்லி ஆறுதல் கொள்வது என்று தெரியவில்லை. மனம் விம்முகிறது.
சென்று வா மகளே!
குறிப்பு -கடந்த வருட முள்ளிவாய்க்கால் நினைவெழுச்சி நிகழ்வில் கொடியைப்பிடித்துக்கொண்டு ஆக்ரோசமாக கத்துபவள்தான் நேற்றய சம்பவத்தில் இறந்த பிள்ளை.
Image may contain: 2 people, people standing, people walking, shoes and outdoor
இன்னுமா உலகம் இவரை நம்புது?
இன்னுமா உலகம் இவரை நம்புது?
தன் கையால் தனக்கு குடை பிடிக்க முடியவில்லை
மற்றவர் உதவியின்றி தன்னால் நடக்கவும் முடியவில்லை
வேட்டியுடன் மூத்திரம் போவதும்கூட தெரியவில்லை
இத்தனைக்கு பிறகும் பதவியையும் துறக்க மனம் வரவில்லை
பதவி பறிபோன பின்பும்கூட பங்களாவையும் விடவில்லை.
பாராளுமன்றத்திலும் பலமணி நேரம் தூங்கியே தொலைப்பவர்
தீபாவளிக்கு மட்டும் எழுந்து நின்று அறிக்கை விட்டு தொலைப்பார்.
புலிகள் ஆயுதம் தூக்கியதால் “பயங்கரவாதிகள்” என்றவர்
தேர்தல் வருகிறது என்றவுடன்
தமிழர் மீண்டும் ஆயுதம் தூக்க வேண்டி வரும் என்கிறார்
இப்போது வந்து தனக்கு 20 எம்.பி தாருங்கள் என்கிறார்.
இத்தனை நாளும் 18 எம்பி வைத்து எதுவும் பிடுங்கவில்லை
இனி 20 எம்.பி யை வைத்து எந்த என்ன பிடுங்கப் போகிறார்?
கடந்த தேர்தலில் ஒரு வருடத்தில் தீர்வு என்றார்
பின்னர் அடுத்த தீபாவளிக்கு தீர்வு என்றார்
கடந்த வருடம் இந்தியா மூலம் தீர்வு என்றார்
இப்ப சர்வதேச மேற்பார்வையில் தீர்வு என்கிறார்.
அவருக்கென்ன ? அவர் லூசு ஐயாதானே!
எப்படி வேண்டுமானாலும் பேசி பொழுதைக் கழிப்பார்.
ஆனால் அவர் என்ன கூறினாலும் அதை “சாணக்கியம்” என்று
பேஸ்புக்கில் எழுதி மகிழும் “செம்பு”க்கூட்டம் ஒருபுறம்
அவரை “வாழும் வீரர்” என்று பட்டம் கொடுத்து மகிழும் கூட்டம் மறுபுறம்
இத்தனைக்கும் நடுவே இந்த கிழம்
எப்போது செத்து தொலைக்கும் என்று
தலையில் கைவைத்து காத்திருக்கும் தமிழ் மக்கள்
ஆனால்,
இவர் ஈழத்து கருணாநிதி. அதாவது எமனும் மறந்த கிழம்.
கொரோனோவுக்கே டாட்டா காட்டிய வாழும் அற்புதம்
Image may contain: 2 people, people standing
Subscribe to:
Posts (Atom)