Friday, July 31, 2020
அடிப்பதுதான் வன்முறை திருப்பி அடிப்பது வன்முறை அல்ல. தற்காப்பு.
•அடிப்பதுதான் வன்முறை
திருப்பி அடிப்பது வன்முறை அல்ல. தற்காப்பு.
தமிழ் போராளிகள் ஆயுதம் ஏந்திப் போராடியது வன்முறை என்றும் அதை தன்னால் ஏற்றுக்கொள்ள முடியாது என்று சுமந்திரன் அடிக்கடி சொல்லிக் கொண்டு திரிகிறார்.
தயவு செய்து யாராவது அவரிடம் கூறுங்கள், அடிப்பதுதான் வன்முறை. திருப்பி அடிப்பது வன்முறை அல்ல. அது தற்காப்பு என்று.
அதனால்தான் டெலோ தலைவர் தஙகத்துரை அவர்கள் நீதிமன்றத்தில் “நாம் வன்முறை மீது காதல் கொண்ட மனநோயாளிகள் அல்லர்” என்று கூறினார்.
அதுமட்டுமல்ல, ஜனாதிபதியாக இருந்த சந்திரிக்காவே “ பிரபாகரன்கள் ஆயுதம் ஏந்த இலங்கை அரசு செய்த தவறுகளே காரணம்” என்று கூறினார்.
ஆனால், முஸ்லிம்கள் தம்மை தற்காத்துக்கொள்ள ஆயுதம் ஏந்தியது நியாயம் என்று கூறும் சுமந்திரன் தமிழ் மக்கள் ஆயுதம் ஏந்தியது வன்முறை என்றும் அதனை தன்னால் எற்றுக்கொள்ள முடியாது என்கிறார்.
அதுமட்டுமல்ல இப்போது ஆயுதம் ஏந்துவதாக இருந்தால் வாள் வெட்டுக் கோஸ்டியுடன்தான் சேரவேண்டும் என்று கிண்டல் செய்கிறார்.
ஆயுதம் ஏந்தியவர்களால் உருவாக்கப்பட்ட கட்சியில் இருந்துகொண்டு அதன் மூலம் பதவியும் பெற்றுக்கொண்டு நன்றி மறந்து ஆயுதப் போராட்டத்தை நக்கல் அடிக்க சுமந்திரன் ஒருவரால்தான் முடியும்.
1983 கலவரத்தில் தானும் கப்பலில் அகதியாக வந்து யாழ்ப்பாணம் இறங்கியவன் என்கிறார். அப்படியென்றால் 5 வயது முதல் கொழும்பில் வாழ்ந்தது தனது பாக்கியம் என்று எப்படி இவரால் கூற முடிகிறது?
லூசுப் பயல்!
Image may contain: 4 people, including Anthonippillai Reginoldraj, ஆதித்தன் ஆதி and Sivasubramaniam-jothilingam Jothilingam, shorts, text that says "தூக்குடா மாப்ள லூசு ஆயிட்டான் இவனை விட்டா டா நமக் நமக்கு தான் ஆப்பு"
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment