Friday, July 31, 2020
இம்முறை யார் வெல்ல வேண்டும் என்பதைவிட சுமந்திரன் தோற்கடிக்கப்பட வேண்டும் என்பதே முக்கியம்!
•இம்முறை யார் வெல்ல வேண்டும் என்பதைவிட
சுமந்திரன் தோற்கடிக்கப்பட வேண்டும் என்பதே முக்கியம்!
தேர்தலுக்கு இன்னும் நான்கு நாட்கள் மட்டுமே உண்டு. அனைத்து வேட்பாளர்களும் தாங்கள் வெற்றி பெற்றால் என்ன செய்வோம் என்பதை தமிழ் மக்களுக்கு தெரிவித்துவிட்டார்கள்.
எனவே; முடிவு எடுக்க வேண்டிய கட்டத்தில் இப்போது தமிழ் மக்கள் இருக்கிறார்கள்.
யார் என்ன சொல்லியிருந்தாலும் இவர்களில் யார் வெற்றி பெற்றாலும் தமிழ் மக்களுக்கு எதுவும் கிடைத்துவிடப் போவதில்லை என்பதே உண்மை.
ஆனால் சுமந்திரன் வெற்றி பெற்றால்,
(1) நடந்தது இனப்படுகொலை அல்ல வெறும் போர்க்குற்றமே என்று தான் கூறியதை தமிழ் மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர் என்று சுமந்திரன் கூறுவார்.
(2) போர்க்குற்ற விசாரணையில் புலிகள் செய்த இனச்சுத்திகரிப்பும் விசாரிக்கப்பட வேண்டும் என்று தான் கூறியதை தமிழ் மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர் என்று சுமந்திரன் கூறுவார்.
(3)ஆயுதப் போராட்டம் வன்முறை என்றும் அதனை செய்தவர்களை தன்னால் ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறியதை தமிழ் மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர் என்று சுமந்திரன் கூறுவார்.
(4) இன அழிப்பு செய்தவர்களுடன் 5 வயது முதல் சேர்ந்து வாழ கிடைத்தது பாக்கியம் என்று தான் கூறியதை தமிழ் மக்கள் சரி என்று ஏற்றுக் கொண்டுள்ளனர் என்று சுமந்திரன் கூறுவார்.
(5) தான் ஜனாதிபதி சட்டத்தரணி பதவி பெற்றதையும்; தனக்கு சிங்கள பொலிஸ் பாதுகாப்பு பெற்றதையும் தமிழ் மக்கள் ஏற்றுக்கொண்டுவிட்டதாக சுமந்திரன் கூறுவார்.
(6) அம்பிகா அன்ரிக்கு எம்.பி பதவி பெற்றுக் கொடுக்க தான் முனைவதையும் தமிழ் மக்கள் ஏற்றுக்கொண்டுவிட்டதாக சுமந்திரன் கூறுவார்.
இவ்வாறு பல விடயங்களை தான் வெற்றி பெற்றால் சுமந்திரன் கூறப் போகிறார்.
எனவேதான் இம்முறை யார் வெற்றி பெற வேண்டும் என்பதைவிட சுமந்திரன் தோற்கடிக்கப்பட வேண்டும் என்பதே தமிழ் மக்களின் குறிக்கோளாக இருக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்.
குறிப்பு -
சுமந்திரன் தோற்கடிக்கப்பட்டால்,
•சுமந்திரனுக்கு வழங்கப்படும் சிங்கள பொலிஸ் பாதுகாப்பு நீக்கப்படும்
•சுமந்திரன் பெயரால் தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்படுவது நிறுத்தப்படும்
•முக்கியமாக இதுவரை கைது செய்யப்பட்ட அப்பாவி 16 தமிழ் இளைஞர்களும் விடுதலை செய்யப்பட வாய்ப்பு ஏற்படும்.
Image may contain: 1 person
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment