Friday, July 31, 2020
சீனாவில் மாவோ செய்தது என்ன?
சீனாவில் மாவோ செய்தது என்ன?
பொதுவாக எல்லோரும் மாவோ சேதுங் அவர்கள் சீனப் புரட்சியை செய்ததாக நினைக்கிறார்கள்.
சீனப் புரட்சியை சீன மக்களே செய்தார்கள். மாவோ அப் புரட்சிக்கு தலைமை வகித்தார் . அவ்வளவே.
அப்படியென்றால் மாவோ செய்த மகத்தான பணி என்ன?
அடிமைப்பட்டுக் கிடந்த சீன மக்களுக்கு அவர்களுடைய அடிமைத்தனத்தை அவர் புரிய வைத்தார்.
அவர் ஒரு வரலாற்று ஆசிரியர். அதனால் சீன மக்களின் பெருமைக்குரிய வரலாற்றை அவர்களுக்கு எடுத்துக் கூறினார்.
அதனால் தங்களைவிட மிகவும் சிறிய நாடான ஐப்பானிடம் தாம் அடிமைப்பட்டுக் கிடப்பதை சீன மக்கள் உணர்ந்து கொண்டார்கள்.
தாம் அடிமைப்பட்டுக் கிடப்பதை உணர்ந்து கொண்டமையினால்தான் அவர்களால் மகத்தான சீனப் புரட்சியை நிகழ்த்தி விடுதலை பெற முடிந்தது.
தூங்கும் அரக்கன் எனப் பெயர் பெற்றிருந்த சீனா இன்று பொருளாதார வல்லரசு எனப் பெயர் பெற்றமைக்கு முக்கிய காரணம் சீன மக்கள் தாம் அடிமைப்பட்டு கிடக்கிறோம் என்பதை உணர்ந்தமையே.
எனவே தமிழ் இன மக்களும் விடுதலை பெற வேண்டும் எனில் முதலில் அவர்கள் தாம் அடிமையாக இருக்கிறோம் என்பதை உணர வேண்டும். உணர வைக்கப்பட வேண்டும்.
ஈழத்திலும் சரி இந்தியாவில் தமிழ்நாட்டிலும் சரி தமிழ் மக்கள் அடிமையாகவே இருக்கிறார்கள்.
ஆனால் தமிழ் தலைவர்களோ அவர்களின் அடிமைத்தனத்தை உணர விடாமல் தடுக்கும் பணியையே செய்கிறார்கள்.
மாசேதுங் துப்பாக்கி குழாயில் இருந்தே அரசியல் அதிகாரம் பிறக்கிறது என்றார். ஆனால் சுமந்திரன் 20 எம்.பி சீட் கிடைத்தால் அரசியல் அதிகாரம் பெற முடியும் என்கிறார்.
இப்போது தமிழ் இனத்திற்கு தேவை,
•மாவோ போன்று அடிமைத்தனத்தை உணர வைக்கும் தலைவர்களே.
•மாவோ போன்று தமிழ் இனத்தின் வீரம் செறிந்த போராட்ட வரலாற்றை எடுத்துக் கூறும் தலைவர்களே.
குறிப்பு- அடிமையாக கிடப்பது கேவலம் இல்லை. மாறாக தமது அடிமைத்தனத்தை உணராமல் வீழ்ந்து கிடப்பதே கேவலம் ஆகும்.
(இது ஒரு மீள்பதிவு)
Image may contain: 1 person, indoor
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment