Friday, July 31, 2020
1983 யூலை படுகொலைகளுக்கு புலிகள்தான் காரணமா?
•1983 யூலை படுகொலைகளுக்கு புலிகள்தான் காரணமா?
(1)1983ல் நடந்தது இனக் கலவரம் என்கிறார்கள். அது தவறு. அது இலங்கை அரசு திட்டமிட்டு நடத்திய இனப் படுகொலை
(2)1983ல் நடந்த கொலைகளுக்கு புலிகளே காரணம் என்கிறார்கள் சிலர். புலிகள் நடத்திய கண்ணிவெடித் தாக்குதலில் 13 ராணுவத்தினர் இறந்தமையினால்தான் இது நிகழ்ந்தது என்கிறார்கள் அந்த சிலர்.
இதுவும் தவறு. ஏனெனில்,
(அ)1956, 1966, 1977 ம் ஆண்டுகளில்கூட கலவரம் என்னும் பெயரில் தமிழ் இனப்படுகொலைகள் நடந்தன. அப்போது புலிகள் இயக்கம் இருக்கவில்லை. எந்த ராணுவத்தினரும் கொல்லப்படவில்லை.
(ஆ)1983 யூலைக்கு முன்னரும் பல பொலிசார் மற்றும் ராணுவத்தினர் புலிகள் இயக்கத்தாலும் வேறு இயக்கங்களாலும் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.
இவற்றை நாம் எடுத்துக் காட்டும்போது, அதற்கு முன்னர் 13 ராணுவத்தினர் ஒரேயடியாக கொல்லப்படவில்லை என்று சுட்டிக்காட்டுகிறார்கள் அந்த சிலர்.
அப்படியென்றால் அதன் பின்னர் ஆயிரக் கணக்கில் ராணுவத்தினர் கொல்லப்பட்டார்களே. அப்போது ஏன் கலவரம் வெடிக்கவில்லை என்று நாம் கேட்டால் அதற்கு அந்த சிலர் பதில் தருவதில்லை.
சரி. ஆனால் புலிகளால்தான் கலவரம் ஏற்பட்டதாக இப்பவும் தொடர்ந்து கூறுகிறார்களே, அதற்கு என்ன பதில் கூறுவது?
அவர்களுக்கு எந்த பதிலும் கூறத் தேவையில்லை. அவர்கள் முகத்தில் சுடுதண்ணியை ஊற்றுங்கள். புரிந்து கொள்வார்கள்.
ஏனெனில் கடந்த வருடம் கண்ணியாவில் பிள்ளையார் கோவிலை காக்க சென்ற இந்துமத பெரியவர்; ஒருவரின் முகத்தில் சுடுதண்ணியை ஊற்றியிருக்கிறார்கள். அது குறித்து இதுவரை பொலிசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
1983 யூலை இனக் கலவரம் எமக்கு கற்று தரும் பாடம் என்ன?
எமக்கு பல பாடங்களை அது கற்று தந்தாலும் அவற்றில் மிக முக்கியமானது 1983ற்கு பின்னர் இனக் கலவரம் நடக்கவில்லை. ஏனெனில் தமிழ் போராளிகள் கையில் ஆயுதம் இருந்ததே.
இனியும் கலவரம் வந்தால் மீண்டும் தமிழ் மக்கள் ஆயுதம் ஏந்துவார்கள் என்ற அச்சம் அரசுக்கு இருக்க வேண்டும். அவ்வாறு ஏந்தினால் அது முன்பைவிட பயங்கரமாக இருக்கும் என்பதையும் அது புரிந்து கொள்ள வேண்டும்
Image may contain: 2 people, text that says "கறுப்பு யூலை 1983"
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment