Friday, July 31, 2020
கம்பவாரிதியும் சுமந்திரனும்!
கம்பவாரிதியும் சுமந்திரனும்!
ஒரு வெட்டிப்பயலுக்கு நூறு ரூபாய் கிடைத்தது. ஒரு சிறந்த பைவ் ஸ்டார் ஹோட்டலுக்கு சென்றான். வயிறு புடைக்க சாப்பிட்டான்.
மூவாயிரம் ரூபாய் பில் வந்தது. நேரே மேனேஜரிடம் சென்றான். தன்னிடம் பணம் இல்லை என்றான்.
மேனேஜர் அவனை பொலிஸில் ஒப்படைத்தார். அவன் பொலிசுக்கு நூறு ரூபா லஞ்சம் கொடுத்து வெளியில் வந்துவிட்டான்.
இதுதான் MBA படிக்காத Financial management என்பது.
இதேமாதிரி ஒருவர் இலங்கையில் இருக்கிறார். அவர் பெயர் கம்பவாரிதி ஜெயராஜ்.
தான் அரசியல்வாதி இல்லை என்பார். அரசியல் ஒரு சாக்கடை என்பார்.
ஆனால் அரசியல்வாதிகளைவிட பக்காவாய் அரசியல் செய்பவர் இவர்தான்.
பதவியில் இருக்கும் அரசியல்வாதிகளை அழைத்து அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி பட்டம் கொடுத்து தனக்கு வேண்டிய காரியங்களை சாதித்துக்கொள்வார்.
சுமந்திரனுக்கு “அதி சிறந்த போராளி” என்று பட்டம்; கொடுத்தவர் இவர்தான்.
இப்போது “சுமந்திரனை வெல்ல வையுங்கள் இல்லையேல் தமிழ் இனம் துலையப் போகிறது” என்று அறிக்கை விட்டிருக்கிறார்.
ஏற்கனவே பெற்ற ஆதாயத்திற்காக இப்போது இந்த அறிக்கையை விட்டாரா அல்லது இனி ஏதாவது ஆதாயம் பெறுவதற்காக இந்த அறிக்கையை விட்டாரா என்று தெரியவில்லை.
ஆனால் ஆதாயம் இல்லாமல் இந்த கம்பவாரிதி வாய் திறக்கமாட்டார் என்பது மட்டும் உண்மை.
இங்கு ஆச்சரியம் என்னவெனில் சுமந்திரன் சிறந்தவர் என்று கம்பவாரிதியால்கூட கூறமுடியவில்லை. மாறாக சுமந்திரனும் தவறு இழைத்திருக்கலாம் என்றே கூறுகிறார்.
குறிப்பு - சுமந்திரன் தம்பிகளுக்கு!
நான் நேரிடையாக எழுதும் பதிவுகள் உங்களுக்கு தலைகீழாக புரிவதால் இந்த பதிவை தலைகீழாக நின்று படிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு பொலிசுக்கு லஞ்சம் கொடுத்து தப்பியவர் கம்பவாரிதி என்று நான் எழுதவில்லை.
Image may contain: 1 person, close-up and outdoor
Image may contain: 1 person
132You, Selva Wiji, Usha Sriskandarajah and 129 others
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment