Friday, July 31, 2020
அலறியடித்து ஓடிக்கொண்டிருந்த பசுவை தடுத்த யானை
அலறியடித்து ஓடிக்கொண்டிருந்த பசுவை தடுத்த யானை “ஏன் இத்தனை பயத்துடன் ஓடுகிறாய்?” எனக் கேட்டது.
காட்டில் உள்ள எல்லா எருமை மாடுகளையும் பிடிக்க அரசாங்கம் உத்தரவு போட்டிருக்கிறது” என்றது பசு.
“நீ பசுதானே. அப்புறம் நீ ஏன் ஓடுகிறாய்?” என்று யானை ஆச்சரியத்துடன் கேட்டது.
“நான் பசு என்கிறது எனக்கு தெரியும். ஆனால் என்னை அரசாங்கம் பிடிச்சுதுன்னா நான் எருமையில்லை பசுன்னு நிரூபிக்க முடியாமல் காலம்பூராவும் சிறையில் இருக்க வேண்டுமே” என்றது பசு.
இப்போது பசுவுடன் சேர்ந்து யானையும் ஓடியது.
மேலே கூறியது காட்டில் நடந்த கதை. இனி நாட்டில் நடக்கும் ஒரு கதையை பார்ப்போம்.
அலறியடித்து ஓடிக்கொண்டிருந்த மாணவன் ஒருவனைத் தடுத்த தாத்தா ஒருவர் “ஏன் இத்தனை பயத்துடன் ஓடுகிறாய்?” எனக் கேட்டார்.
“மாணவர்களை சுட்ட அதிரடிப்படை வருகிறது. அதுதான் பயத்தில் ஓடுகிறேன்” என்றான் அந்த மாணவன்.
“நம்ம வக்கீல் சுமந்திரனிடம் கூறினால் அவர் உடனே வாதாடி எடுத்துவிடுவார் அல்லவா? அப்புறம் எதற்கு பயப்படுகிறாய்?”என்று தாத்தா அப்பாவியாய் கேட்டார்.
“யோவ் பெரிசு உனக்கு விசயம் தெரியாதா? அந்த அதிரடிப்படையின் பாதுகாப்பில்தான் சுமந்திரன் வருகிறார். அதுமட்டுமல்ல அவரைக் கொலை செய்ய முயற்சி செய்ததாக கூறியே எங்களை கைது செய்யிறாங்கள” என்றான் மாணவன்.
இப்போது தாத்தாவும் மாணவனுடன் சேர்ந்து ஓடினார்.
Image may contain: 2 people, including Velu Bavan, people standing and outdoor
Image may contain: 2 people, people standing
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment