Friday, July 31, 2020
இந்த இருவர் கொலைகளையும் கண்டிக்கும் தைரியம் சுமந்திரனுக்கு உண்டா?
•இந்த இருவர் கொலைகளையும்
கண்டிக்கும் தைரியம் சுமந்திரனுக்கு உண்டா?
ஒருவர் தர்மலிங்கம். மற்றவர் ஆலாலசுந்தரம்
இருவரும் சுமந்திரனின் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்தவர்கள்.
ஒருவர் கோப்பாய் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர். மற்றவர் மானிப்பாய் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர்.
1983 யூலைக் கலவரத்தை அடுத்து அமிர்தலிங்கம் சிவசிதம்பரம் சம்பந்தர் எல்லாம் நாட்டை விட்டு ஓடி தமிழ்நாட்டில் இருந்தார்கள்.
அப்போது நாட்டில் மக்களோடு மக்களாக இருந்தவர்கள்தான் இந்த ஆலாலசுந்தரம் மற்றும் தர்மலிங்கம்.
இவர்கள் இருவரும் 02.09.1985 யன்று ரெலோ இயக்கத்தால் சுட்டுக்கொல்லப்பட்டார்கள்.
இவர்கள் ஏன் கொல்லப்பட்டார்கள் என்று இன்றுவரை தமிழ் மக்களுக்கு தெரியாது
இங்கு வேதனை என்னவென்றால் இவர்களை ஏன் கொல்கிறோம் என்று இவர்களை சுட்டுக் கொன்ற ரெலோ இயக்கத்திற்கும் தெரியாது.
ரெலோ இயக்கத்தைப் பொறுத்தவரை இந்திய உளவுப்படையான றோ இவர்களை கொல்லும்படி கூறியது. எனவே நாம் கொன்றோம் என்றே கூறுகிறார்கள்.
அதுதான் உண்மையும்கூட. இந்திய உளவுப்படையே கொல்வித்தது என்ற உண்மை அப்போது இந்தியாவில் இருந்த அமிர்தலிங்கம், சிவசிதம்பரம், சம்பந்தர் முதலானவர்களுக்கும் தெரியும்.
ஆனாலும் இதுவரை ஒருவர்கூட இந்திய உளவுப்டையையோ அல்லது இந்திய அரசையோ கண்டிக்கவில்லை.
ஆனால் சுமந்திரன் தன்னை தைரியமான ஆளு என்கிறார். அவர் துரையப்பாவின் கொலையை கண்டிககிறார்.
எனவே தனது கட்சியை சேர்ந்த இந்த இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களின் கொலைக்கு காரணமான இந்திய உளவுப்படையை அவர் கண்டிப்பாரா?
Image may contain: 2 people, text
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment