Friday, July 31, 2020
அரசு ஆயுதம் கொண்டு வன்முறையை பாவிக்கும்போது
அரசு ஆயுதம் கொண்டு வன்முறையை பாவிக்கும்போது அதற்கு ஆயுதரீதியாக பதில் அளிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. இதுவே ஆயுதப் போராட்டத்தின் பின்னால் உள்ள அரசியல்.
இதுவே எளிமையாக “ அடிப்பதுதான் வன்முறை. திருப்பி அடிப்பது வன்முறை அல்ல . அது தற்காப்பு” என்று கூறப்படுகிறது.
இது சுமந்திரனுக்கு புரியவில்லை அல்லது புரிந்தும் வேண்டுமென்றே “ ஆயுதப் போராட்டம் வன்முறை என்றும் நான் அகிம்சை வழியில் தீர்வு பெற்று தருவேன்” என்று கூறுகிறார்.
சரி அப்படியென்றால் கடந்த 11 வருடங்களாக சுமந்திரன் செய்த அகிம்சைப் போராட்டம் என்ன? அதன்மூலம் பெற்ற தீர்வு என்ன? என்று கேட்டால்
அதற்குரிய பதிலை தரவேண்டும். ஆனால் மாறாக “நீங்கள் என்ன செய்தீர்கள?;” என்று திருப்பி கேட்கிறார்கள் சுமந்திரன் தம்பிகள்.
கேள்வி கேட்டால் முதலில் அதற்குரிய பதிலை அளிக்க வேண்டும். அதைவிடுத்து திருப்பி கேள்வி கேட்பது உரிய பதில் இல்லை என்பதை சுமந்திரன் தம்பிகள் முதலில் உணர வேண்டும்.
இதுவரையில் பதவியில் இருந்தது சுமந்திரன்தான். இப்போது வந்து மீண்டும் பதவி தாருங்கள் என்று கேட்பதும் சுமந்திரன்தான். எனவே சுமந்திரனிடம் கேள்வி கேட்பதற்கு ஒவ்வொரு தமிழனுக்கும் உரிமையும் தகுதியும் உண்டு என்பதையும் சுமந்திரன் தம்பிகள் உணர வேண்டும்.
மாறாக ஒருவர் ஏதாவது சாதித்த பின்புதான் வந்து சுமந்திரனிடம் கேள்வி கேட்க வேண்டும் என்று கருதுவது ஆக்கபூர்வமான உரையாடலுக்கு வழி சமைக்காது என்பதை சுமந்திரன் தம்பிகள் உணர வேண்டும்.
எப்படித்தான் சுட்டிக்காட்டினாலும் சில தம்பிகள் புரிந்து கொள்ளப் போவதில்லை. ஏனெனில் அவர்கள் அற்ப சுயநல சலுகைகளுக்காக சுமந்திரனை ஆதரிக்கிறார்கள்.
சுமந்திரன் தோல்வியுற்றதும் செத்த மாட்டில் இருந்து உண்ணிகள் கழருவதுபோல் இவர்கள் கழன்று சென்று விடுவார்கள்.
இது சுமந்திரனுக்கும் நன்கு தெரியும்.
Image may contain: text that says "எல்லோரிட பேசி புரிய வைக்க முயற்சிக்காதீர்கள் சில நேரங்களில் எதிரில் நிற்பது எருமையாக கூட இருக்கலாம்"
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment