Sunday, June 30, 2024
அவர் தன்னை உலகத் தமிழினத் தலைவர்
அவர் தன்னை உலகத் தமிழினத் தலைவர் என்றார் ஆனால் ஈழத்தில் தமிழினம் அழிக்கப்பட்டபோது அது இன்னொரு நாட்டு விடயம் என்றார்.
அவர் தன்னை கடலில் வீசி எறிந்தால் கட்டுமரமாகி வந்து தமிழனுக்கு உதவுவேன் என்றார்.
ஆனால் ஈழத்தில் தமிழன் தத்தளித்தபோது கட்டு மரமாகி வந்து உதவுவார் என நம்பினோம். கடைசிவரை அவர் வரவேவில்லை.
3 மணி நேரம் உண்ணாவிரதம் இருந்து போர் நிறுத்தப்பட்டுவிட்டது என்றார்.
ஆனால் அதன் பின்பும் தமிழர் கொல்லப்படுகிறார்களே என்று கேட்டபோது “மழை விட்டும் தூவானம் விடவில்லை” என்றார்.
பொதுவாக பதவி கொடுக்காதவர்களுக்கு தன் இதயத்தில் இடம் கொடுப்பதாக கூறுவார்.
ஆனால் தத்தெடுத்த அகதிச் சிறுவன் மணிக்கு அந்த இதயத்திலும் இடங்கொடுக்காமல் கொன்று விட்டார்.
பக்கத்தில் மனைவி, துணைவி என்று இரண்டு பேரை வைத்துக் கொண்டு கொஞ்சம்கூட கூச்சமில்லாமல் ஒருவனுக்கு ஒருத்தி என்பதே தமிழன் பண்பாடு என்று பேசுவார்.
ஈழத்தில் பல்லாயிரம் தமிழர் மாண்டிருக்க உங்கள் பிள்ளைகளின் பதவி எற்பு விழா தேவையா என்று கேட்டால் சங்க இலக்கியத்தில் ஒரு வீட்டில் செத்தவீடு நடக்கும்போது பக்கத்து வீட்டில் கலியாணம் நடந்தது என்பார்.
வரலாறு அவரை பகுத்தறிவு பகலவன் என்று கூட எழுதிச் செல்லலாம்.
ஆனால் ஈழத்தமிழர் அவரது துரோகத்தை ஒருபோதும் மறக்கவும் மாட்டார்கள். மன்னிக்கவும் மாட்டார்கள்.
என்ன அவர் இறந்த பின்பும் திட்டுகிறீர்களே என யாராவது கேட்கக்கூடும். என்னசெய்வது மழை விட்டும் தூவானம் விடவில்லையே.
இனப் படுகொலையில் கலைஞர் பங்கு என்ன?
இனப் படுகொலையில் கலைஞர் பங்கு என்ன?
கலைஞர் வெறும் மாநில முதலமைச்சர்தான். அவருக்கு இன்னொரு நாட்டில் நடக்கும் யுத்தத்தை நிறுத்தும் அதிகாரம் இல்லை என்று சிலர் கூறுகின்றார்கள்.
இன்னும் சிலர், கலைஞர் மட்டுமல்ல இந்திய அரசே நினைத்தாலும் யுத்தத்தை நிறுத்தியிருக்க முடியாது என்கிறார்கள்.
ஆனால், இந்தியாவுக்காகவே யுத்தத்தை நடத்தினோம் என்று மகிந்த ராஜபக்சா கூறிய போது இந்திய அரசோ அல்லது இந்த இவர்களோ ஏன் அதை மறுக்கவில்லை?
சரி. பரவாயில்லை. இந்தியாவின் உதவி இல்லையேல் எம்மால் யுத்தத்தில் வென்றிருக்க முடியாது என்று கோத்தபாயா கூறினாரே. அப்போது அதை ஏன் இந்திய அரசோ அல்லது இவர்களோ மறுக்கவில்லை?
சரி. பரவாயில்லை. யுத்தத்தை நிறுத்த இந்தியா விரும்பவில்லை. புலிகள் அழியும்வரை யுத்தம் தொடர வேண்டும் என்பதே இந்தியாவின் விருப்பமாக இருந்தது என்று ராணுவ தளபதி சரத்பொன்சேகா கூறியிருக்கிறாரே. இதற்கு இவர்கள் என்ன கூறப் போகிறார்கள்?
சரி. அதெல்லாவற்றையும் விடுவோம். நாராயணனும் சிவசங்கர்மேனனும் ஒவ்வொரு முறையும் கொழும்பு சென்று திரும்பும்போது சென்னை வந்து கலைஞர் கருணாநிதியை எதற்காக சந்தித்தனர்?
எந்த அதிகாரமும் இல்லாத முதலமைச்சரிடம் இவர்கள் சந்தித்து என்ன பேசினார்கள்? கலைஞரிடம் திருக்குறளுக்கு விளக்கம் கேட்க சந்தித்தார்கள் என்று கூறப்போகிறார்களா?
பிரபாகரனை கைது செய்யும்போது கௌரவமாக நடத்த வேண்டும் என்று கலைஞர் கருணாநிதி அறிக்கை விட்டிருந்தார்.
பிரபாகரனுக்கு இப்படி ஒரு நிலை ஏற்படப்போகின்றது என்பது எந்தவித அதிகாரமும் இல்லாத முதலமைச்சரான கலைஞருக்கு எப்படி முன்கூட்டியே தெரிந்தது?
இறுதி நேரத்தில் புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் நடேசன் கலைஞருடன் பேசக் கேட்டபோது “பக்கத்தில் இருந்து கேட்டுக் கொண்டுதான் இருக்கிறார். நீங்கள் கூறுங்கள்” என்று கனிமொழி கூறினாரே.
அப்போதாவது கலைஞர் தனக்கு எந்த அதிகாரமும் இல்லை என்று நடேசனிடம் கூறியிருக்கலாமே ?
மாறாக கனிமொழி மூலம் வெள்ளைக் கொடி பிடித்துக்கொண்டு சரண்அடையும்படி எந்த அதிகாரமும் இல்லாத கலைஞர் ஏன் எற்பாடு செய்தார்?
குறைந்தபட்சம் சரணடையும்போது கொல்லப்படப் போகிறீர்கள் என்பதையாவது இந்த எந்த அதிகாரமும் இல்லாத முதலமைச்சர் நடேசனிடம் கூறியிருக்கலாமே?
மத்திய அரசுடன் சேர்ந்து இனப்படுகொலைக்கு துணை போனதுடன் தமிழகத்தில் எழுந்த ஈழத் தமிழருக்கான ஆதரவு நிலையினையும் இரும்புக்கரம் கொண்டு அடக்கியவர் எந்த அதிகாரமும் இல்லாத இந்த முதலமைச்சர் கருணாநிதி.
இந்த விபரங்களை தெரியாத தமிழக அப்பாவி உடன்பிறப்புகள் கலைஞரை ஆதரிப்பது புரிந்துக்கொள்ள முடிகிறது.
ஆனால் நன்கு விபரம் தெரிந்த சில ஈழத் தமிழர் கலைஞரை நியாயப்படுத்துவதைத்தான் புரிந்து கொள்ள முடியவில்லை
பாண்டிபஜார் துப்பாக்கிச் சூட்டில்
பாண்டிபஜார் துப்பாக்கிச் சூட்டில் சம்பந்தப்பட்ட போராளிகளை இந்திய அரசு இலங்கையிடம் ஒப்படைக்காமைக்கு கலைஞரே காரணம். இந்த நன்றியை ஈழத் தமிழர் மறக்கக்கூடாது என எழுதப்பட்ட பதிவு ஒன்றை சிலர் கொண்டோடித் திரிகின்றனர்.
யுத்தத்தை ஏன் கலைஞர் நிறுத்தவில்லை என்று கேட்டால் ஒரு மாநில முதலமைச்சருக்கு அந்த அதிகாரம் இல்லை என்று ஒருபுறம் கூறுகின்றனர்.
ஆனால் மறுபுறம் போராளிகளை ஒப்படைக்காமைக்கு எதிர்க்கட்சியில் இருந்த கலைஞரே காரணம் என்கின்றனர்.
அப்படியென்றால் இந்தியாவில் ஒரு மாநில முதல்வரை விட எதிர்க்கட்சியில் இருப்பவருக்கு அதிக அதிகாரம் உள்ளது என்கிறார்களா?
சரி எப்படியோ இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால் இந்த கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது குட்டி மணியை கைது செய்து இலங்கை அரசிடம் ஒப்படைத்துள்ளாரே. அதற்கு இவர்கள் என்ன பதில் கூறப் போகிறார்கள்?
அதுகூடப் பரவாயில்லை. ஆனால் இதை எம்.ஜி.ஆர் சுட்டிக்காட்டி கேட்டபோது “ குட்டிமணி போராளி இல்லை. கடத்தல்காரன்” என்று டெலோ தலைவர் சிறீசபாரட்ணம் மூலம் அறிக்கைவிட வைத்தாரே கலைஞர் அந்த கொடுமையை என்னவென்று அழைப்பது?
கலைஞரின் துரோகத்தை மறைத்து அவரை நியாயப்படுத்தும் இந் நபர்களின் முயற்சிகள் ஒருபோதும் வெற்றியளிக்கப்போவதில்லை.
ஏனெனில் கூமுட்டைகள் குஞ்சு பொரிப்பதில்லை.
தியாகி சிவகுமாரன் 50வது நினைவு தினம்.
•தியாகி சிவகுமாரன் 50வது நினைவு தினம். (05.06.1974)
சிவகுமாரன் தமிழீழத்திற்காக ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்தவர். அதற்காக களப்பலியான முதல் வீரர் எனக் குறிப்பிடக்கூடியவர்.
சிவகுமாரன் விரும்பியிருந்தால் நன்கு படித்து பட்டம் வாங்கி நல்ல உத்தியோகத்தையும் பெற்று வசதியாக வாழ்ந்திருக்க முடியும்.
அல்லது மற்றவர்கள் போல் வெளிநாட்டுக்கு சென்று பாதுகாப்பாக இருந்திருக்க முடியும்.
ஆனால் அவரோ ஏற்கனவே பல முறை கைது செய்யப்பட்டு சிறைவாசம் அனுபவித்திருந்தாலும் தொடர்ந்து தமிழ் மக்களுக்காக போராடி மரணித்தார்.
எமது போராட்டத்தில் களப்பலியான முதல் போராளி என்ற பெருமை அவருக்கே சாரும்.
மரணமடையும்போது அவர் கூறிய இறுதி வரிகள் “ மீண்டும் பிறப்பேன். தமிழ் மக்களுக்காக மீண்டும் போராடுவேன்”
போராளிகள் புதைக்கப்படுவதில்லை. விதைக்கப்படுகிறார்கள். அவர்களின் மரணங்கள் பல புதிய போராளிகளை தோற்றுவிக்கும் என்பதற்கு சிறந்த உதாரணம் தியாகி சிவகுமாரனின் மரணம்.
ஆம். அவரது மரணம் பல தமிழ் இளைஞர்களை போராட்டத்தில் ஈடுபடவைத்தது.
உன்னை ஒரு கூட்டம்
உன்னை ஒரு கூட்டம் எப்படியாவது மேலெழுந்துவிடாமல் தடுக்கிறது என்றால் அதற்காக வருத்தப்படாதே. ஏனெனில் நீ அவர்களைவிட உயரத்திற்கு செல்லப்போகிறாய் என்று அர்த்தம்.
அமெரிக்காவில் ஒரு கறுப்பர்
அமெரிக்காவில் ஒரு கறுப்பர் ஜனாதிபதியாக முடிகிறது.
இங்கிலாந்தில் ஒரு இந்தியர் பிரதமராக முடிகிறது.
ஆனால் இந்தியாவில் ஒரு தமிழர் இன்னும் பிரதமராக முடியவில்லை.
ஒரு தெலுங்கர் பிரதமராகியிருக்கிறார். இரண்டு கோடி மக்கள் தொகை கொண்ட சீக்கியர்கூட பிரதமராகியுள்ளார்.
ஆனால் எட்டுக்கோடி மக்கள் கொண்ட தமிழ் இனத்தில் இன்னும் ஒருவர் பிரதமராக முடியவில்லை.
இலங்கையில்கூட ஒரு தமிழர் ஜனாதிபதியாகவோ அல்லது பிரதமராகவோ முடியவில்லை.
தேர்தலில் தோற்ற, ஒரு எம்.பி கூட ஆதரவு அற்ற ரணிலை ஜனாதிபதியாக நியமிப்பார்கள்.
ஆனால் 18 எம்.பிகள் கொண்ட சம்பந்தர் ஐயாவை ஜனாதிபதியாக நியமிக்க யோசனைகூட செய்ய மாட்டார்கள்.
ஏனெனில் சம்பந்தர் ஐயா ஒரு தமிழர் என்பதைத் தவிர வேறு என்ன காரணம் இருக்க முடியும்?
பத்துவருடமாக இந்திய பிரதமராக இருப்பவர் “ஒரிசாவை தமிழன் ஆளலாமா? கோயில் சாவியை திருடிய தமிழன்” என்று பேசலாம். அவரை இனவாதி என்று கூறமாட்டார்கள்.
ஆனால் “ஒரு தமிழனே தமிழனை ஆளவேண்டும்” என்று கூறும் சீமானை இனவாதி என்கிறார் காங்கிரஸ் தலைவர்.
என்னே கொடுமை இது?
இன்று தியாகி சிவகுமாரனின்
இன்று தியாகி சிவகுமாரனின் 50வது நினைவு தினம்
தமிழ் மக்களுக்காக போராடி உயிர் துறந்த முதல் போராளியின் நினைவு தினம்.
இறக்கும் தருவாயில்கூட அவர் வாயில் இருந்து வந்த வார்த்தைகள் “மீண்டும் பிறப்பேன். மீண்டும் தமிழ் மக்களுக்காக போராடுவேன்”
ஈழத்தமிழ் மக்கள் மத்தியில் இப்போது ஒரு கும்பல் உருவாகியுள்ளது.
இந்த கும்பல் தியாகி சிவகுமாரனை நினைவு கூரவில்லை. மாறாக பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது.
பிரதமர் மோடி இதுவரை தமிழ் மக்களுக்காக என்ன செய்தார்?
அல்லது, இனி என்ன செய்வார் என்ற நம்பிக்கையில் இந்த கும்பல் வாழ்த்து தெரிவிக்கிறது?
ஒருவேளை சிவகுமாரனும் போராடி மரணிக்காமல் இந்திய பிரதமருக்கு தேங்காய் உடைத்து வாழ்ந்திருக்க வேண்டும் என இக் கும்பல் கருதுகிறதா?
சீ வெட்கம்!
Subscribe to:
Posts (Atom)