Sunday, June 30, 2024
அமெரிக்காவில் ஒரு கறுப்பர்
அமெரிக்காவில் ஒரு கறுப்பர் ஜனாதிபதியாக முடிகிறது.
இங்கிலாந்தில் ஒரு இந்தியர் பிரதமராக முடிகிறது.
ஆனால் இந்தியாவில் ஒரு தமிழர் இன்னும் பிரதமராக முடியவில்லை.
ஒரு தெலுங்கர் பிரதமராகியிருக்கிறார். இரண்டு கோடி மக்கள் தொகை கொண்ட சீக்கியர்கூட பிரதமராகியுள்ளார்.
ஆனால் எட்டுக்கோடி மக்கள் கொண்ட தமிழ் இனத்தில் இன்னும் ஒருவர் பிரதமராக முடியவில்லை.
இலங்கையில்கூட ஒரு தமிழர் ஜனாதிபதியாகவோ அல்லது பிரதமராகவோ முடியவில்லை.
தேர்தலில் தோற்ற, ஒரு எம்.பி கூட ஆதரவு அற்ற ரணிலை ஜனாதிபதியாக நியமிப்பார்கள்.
ஆனால் 18 எம்.பிகள் கொண்ட சம்பந்தர் ஐயாவை ஜனாதிபதியாக நியமிக்க யோசனைகூட செய்ய மாட்டார்கள்.
ஏனெனில் சம்பந்தர் ஐயா ஒரு தமிழர் என்பதைத் தவிர வேறு என்ன காரணம் இருக்க முடியும்?
பத்துவருடமாக இந்திய பிரதமராக இருப்பவர் “ஒரிசாவை தமிழன் ஆளலாமா? கோயில் சாவியை திருடிய தமிழன்” என்று பேசலாம். அவரை இனவாதி என்று கூறமாட்டார்கள்.
ஆனால் “ஒரு தமிழனே தமிழனை ஆளவேண்டும்” என்று கூறும் சீமானை இனவாதி என்கிறார் காங்கிரஸ் தலைவர்.
என்னே கொடுமை இது?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment