Sunday, June 30, 2024
கிணற்று தவளைகளின்
கிணற்று தவளைகளின் அதி உச்சகனவு
பாம்புகளற்ற கிணறு மட்டுமே.
நிருபர் - ஜனாதிபதி ரணில் அவர்கள் நேற்று ஆற்றிய உரை பற்றி தங்கள் கருத்து என்ன ஐயா?
சம்பந்தர் ஐயா – என் சொகுசு மாளிகை பற்றி எதுவும் அவர் பேசவில்லைதானே. அப்புறம் அந்த உரை கருமம் பற்றி நான் ஏன் கருத்து கூறவேண்டும்?
நிருபர் - தமிழ் பொதுவேட்பாளர் பற்றி தங்கள் கருத்து என்ன ஐயா?
சம்பந்தர் ஐயா - இந்திய அரசு பொதுவேட்பாளரை ஆதரிக்கிறதா இல்லையா என்று தெரியவில்லை. தெரிந்த பின்பு கருத்து கூறுகிறேன்.
நிருபர் - அப்படியென்றால் ஜனாதிபதி தேர்தலில் நீங்கள் யாரை ஆதரிக்கப் போகின்றீர்கள் ஐயா?
சம்பந்தர் ஐயா – வழக்கம்போல் இம்முறையும் இந்திய அரசு யாரை கைகாட்டுகிறதோ அவரை நாங்கள் ஆதரிப்போம்.
நிருபர் - இந்திய அரசு யார் ஜனாதிபதியாக வர வேண்டும் என்று விரும்புகிறது ஐயா?
சம்பந்தர் ஐயா – யார் வரவேண்டும் என்பதைவிட யார் வரக்கூடாது என்பதில் அவர்கள் இப்போது தெளிவாக இருக்கின்றனர். எக்காரணம் கொண்டும் ஜேவிபி அனுரா வரக்கூடாது என்று அவர்கள் நினைக்கின்றனர்.
நிருபர் - அனுரா டில்லிபோய் இந்திய வெளியுறவு அமைசரையெல்லாம் சந்தித்தாரே ஐயா?
சம்பந்தர் ஐயா – ஆம். ஆனால் அவர் அதானியின் கம்பனிக்கு அனுமதி கொடுப்பது தொடர்பாக உறுதிமொழி கொடுக்க மறுத்துவிட்டாராம்.
நிருபர் - அப்படியென்றால் ரணில், சஜித் சம்மதிப்பார்களா ஐயா?
சம்பந்தர் ஐயா – சந்தேகமே வேண்டாம். யார் சம்மதிக்கிறாரோ அவரையே இந்திய அரசு ஆதரிக்கும்.
நிருபர் - அப்படியென்றால் தமிழர் தீர்வு பற்றி இந்திய அரசு வலியுறுத்தாதா ஐயா?
சம்பந்தர் ஐயா – அண்மையில் நம்ம ஆட்கள் ஜெய்சங்கரை சந்தித்தபோது காணி பொலிஸ் அதிகாரம் தர சஜித் தயாராக இருப்பதாக கூறியபோது அவர் ஆச்சரியமாக சிரித்தாராம். அதன் அர்த்தம் புரியவில்லையா உங்களுக்கு இன்னும்?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment