Sunday, June 30, 2024
1994ம் ஆண்டு மதுரை சிறையில் வைக்கப்பட்டிருந்த
1994ம் ஆண்டு மதுரை சிறையில் வைக்கப்பட்டிருந்த என்னை உயர்நீதிமன்றத்தில் ஆஜர் செய்வதற்காக சென்னை அழைத்துச் சென்றனர்.
அப்போது எதிர்பாராதவிதமாக சுமார் இரண்டு மாதங்கள் சென்னை சிறையில் என்னை அடைத்து வைத்திருந்தனர்.
அதனால் அங்கு சிறை வைக்கப்பட்டிருந்த கௌத்தூர் மணி உட்பட பல தடா சிறைவாசிகளுடன் பழகும் வாய்ப்பு கிடைத்தது.
அவ்வேளையில் பொலிசார் என்னை பலவந்தமாக திண்டுக்கல் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்ல முற்பட்டவேளை சிறைவாசிகள் போராடி தடுத்து நிறுத்தினர்.
குறிப்பாக மணியண்ணை அவர்கள் வேட்டியை மடித்துக்கட்டிக்கொண்டு முன்னுக்கு நின்று எனக்காக ஜெயிலருடன் வாக்குவாதப்பட்டது இன்றும் என் நினைவில் இருக்கிறது.
தான் சிறையில் அடைக்கப்பட்ட நிலையிலும் ஈழத் தமிழனான எனக்கு குரல் கொடுத்த மணியண்ணையின் உணர்வு உண்மையில் பாராட்டப்பட வேண்டியது.
ஆனால் இன்று அவர் வெளியில் இருக்கிறார். அவர் ஆதரித்த திமுக கூட்டணி ஆட்சியில் இருக்கிறது.
இருந்தும் சிறப்புமுகாமில் இருக்கும் ஈழத் தமிழ் அகதிகளின் விடுதலைக்கு அவர் ஏன் குரல் கொடுக்க தயங்குகிறார் என்பது புரியவில்லை.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment