Sunday, June 30, 2024
BASTAR - The Naxal Story (இந்திப் படம்)
• BASTAR - The Naxal Story (இந்திப் படம்)
இது மாவோயிச நக்சலைட் போராளிகள் பற்றிய படம். உண்மை சம்பவங்களை வைத்து எடுக்கப்பட்ட படம் என காட்டுகிறார்கள்.
ஆனால் புலிகள் இயக்கம் மாவோயிச இயக்கத்தினருக்கு ஆதரவு தெரிவித்து அவர்களின் கூட்டத்தில் கலந்துகொண்டதாக காட்டியுள்ளனர்.
நான் அறிந்தவரையில் நக்சலைட் அமைப்பினர் புலிகளை ஆதரித்துள்ளனர். ஆனால் புலிகள் இயக்கம் நக்சலைட் இயக்கத்தை ஆதரிக்கவும் இல்லை. உதவி செய்யவும் இல்லை.
இவர்கள் எந்த ஆதாரத்தின் அடிப்படையில் இப்படி காட்டியுள்ளனர் என்று தெரியவில்லை.
1986ல் மட்டக்களப்பை சேர்ந்த இளைஞர் ஒருவர் புலிகள் இயக்கத்தில் இருந்து விலகி பிஎல்எவ்ரி என்ற இயக்கத்தில் சேர்ந்து செயற்பட்டார்.
இவர்கள் மதுரை மேயர் முத்துவின் மகன் நல்லதம்பியுடன் சேர்ந்து மதுரையில் ஒரு வங்கியை கொள்ளை அடித்தனர்.
இவ் வழக்கில் மட்டக்களப்பை சேர்ந்த அந் நபரை பொலிசார் தேடிய போது அவர் ஆந்திரா சென்று நக்சலைட் அமைப்புனருடன் சேர்ந்து செயற்பட்டார். அவர்களுக்கு உதவி செய்தார்.
அவரும் சில வருடங்களின் பின்னர் அரசியலில் இருந்து விலகி கேரள ஆயள்வேத மருத்துவத்தில் ஈடுபாடுகொண்டார்.
நக்சலைட்டினர் தேச விரோதிகள் இல்லை. அவர்கள் தேச பக்தர்கள் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஒருவர் நக்சலைட் என்பதற்காக அவரை கைது செய்யக்கூடாது. சுட்டுக்கொல்லக்கூடாது என்று கேரள உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஆனாலும் இந்திய சினிமா அவர்களை பயங்கரவாதிகள் என்று காட்டுவதோடு பொலிசார் செய்யும் அராஜகத்தை புனிதப்படுத்துகின்றன.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment