Sunday, June 30, 2024
கடவுளுக்கு பணம் தேவையில்லை
கடவுளுக்கு பணம் தேவையில்லை என்று தெரிந்தும் கோவிலில் உண்டியல் வைப்பது ஆத்திகம்
அந்த உண்டியலை கடவுளால் காப்பாற்ற முடியாது என்று தெரிந்து பூட்டு போடுவது நாத்திகம்.
ஆக, ஆத்திகம் பேசுபவர்களுக்குள்ளும் நாத்திகம் இருக்கிறது என கூறலாமா?
சரி அதைவிடுவம். ஆனால் ஒரு சந்தேகம்!
கோவிலில் இருக்கும் சிலையை கடவுள் என்கிறார்கள்.
ஆனால் அந்த சிலை திருடுபோனால் கடவுள் திருட்டு போய்விட்டது என கூறுவதில்லை. சிலை திருடு போய்விட்டது என்கிறார்கள். அது ஏன்?
ஒரு குறிப்பு - எல்லாம் கடவுள் விதிப்படியே நடக்கிறது என்று நம்புவோரும் வீதியைக் கடக்கும்போது கடவுள் விதியை நம்புவதில்லை. வீதியில் உள்ள சிக்னல் விதிகளையே நம்பி கடக்கின்றனர். இல்லையா?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment