Sunday, June 30, 2024
பாண்டிபஜார் துப்பாக்கிச் சூட்டில்
பாண்டிபஜார் துப்பாக்கிச் சூட்டில் சம்பந்தப்பட்ட போராளிகளை இந்திய அரசு இலங்கையிடம் ஒப்படைக்காமைக்கு கலைஞரே காரணம். இந்த நன்றியை ஈழத் தமிழர் மறக்கக்கூடாது என எழுதப்பட்ட பதிவு ஒன்றை சிலர் கொண்டோடித் திரிகின்றனர்.
யுத்தத்தை ஏன் கலைஞர் நிறுத்தவில்லை என்று கேட்டால் ஒரு மாநில முதலமைச்சருக்கு அந்த அதிகாரம் இல்லை என்று ஒருபுறம் கூறுகின்றனர்.
ஆனால் மறுபுறம் போராளிகளை ஒப்படைக்காமைக்கு எதிர்க்கட்சியில் இருந்த கலைஞரே காரணம் என்கின்றனர்.
அப்படியென்றால் இந்தியாவில் ஒரு மாநில முதல்வரை விட எதிர்க்கட்சியில் இருப்பவருக்கு அதிக அதிகாரம் உள்ளது என்கிறார்களா?
சரி எப்படியோ இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால் இந்த கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது குட்டி மணியை கைது செய்து இலங்கை அரசிடம் ஒப்படைத்துள்ளாரே. அதற்கு இவர்கள் என்ன பதில் கூறப் போகிறார்கள்?
அதுகூடப் பரவாயில்லை. ஆனால் இதை எம்.ஜி.ஆர் சுட்டிக்காட்டி கேட்டபோது “ குட்டிமணி போராளி இல்லை. கடத்தல்காரன்” என்று டெலோ தலைவர் சிறீசபாரட்ணம் மூலம் அறிக்கைவிட வைத்தாரே கலைஞர் அந்த கொடுமையை என்னவென்று அழைப்பது?
கலைஞரின் துரோகத்தை மறைத்து அவரை நியாயப்படுத்தும் இந் நபர்களின் முயற்சிகள் ஒருபோதும் வெற்றியளிக்கப்போவதில்லை.
ஏனெனில் கூமுட்டைகள் குஞ்சு பொரிப்பதில்லை.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment