• இறுதி வெற்றி உறுதி எமக்கு!
முதலில் நாம் உரிமைகளை இழந்தோம்
பின்னர் நாம் உடமைகளை இழந்தோம்
இறுதியில் நாம் உயிர்களை இழந்தோம் - ஆனால்
இன்னமும் நாம் உணர்வுகளை இழக்கவில்லை.
இழப்பின்றி எந்தப் புரட்சியும் உலகில் வென்றதில்லை.
எந்த விடுதலையும் போராட்டம் இன்றிக் கிடைப்பதில்லை.
தீயில் கருகும் விட்டில் ப+ச்சி கூட இறுதிவரை போராடுகிறது.
காலில் மிதிபடும் புழு கூட துடித்து எழுகிறது.
ஆனால் தமிழ் இனம் மட்டும் அடிமையாக இருந்துவிடுமா என்ன?
இலங்கை சிறிய தீவுதான். ஆனால் போராட்டம் நிறைந்த வரலாறு கொண்டது.
போத்துக்கேயருக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது.
ஓல்லாந்தருக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது.
ஆங்கிலேயருக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது.
ஏன் அதன் பின்னர் கூட எந்த ஒரு கட்சியும் இலங்கையில்
தொடர்ந்து ஆட்சி செய்ய முடியவில்லை.
1972ல் ஜே.வி.பி ஆயுதப் போராட்டம் நடத்தியது. 4000 பேர் இந்திய அரசின் உதவியுடன் கொல்லப்பட்டனர். இருந்தும் அவர்கள் மீண்டும் 1989ல் போராட்டம் நடத்தினர். அப்போது 60000பேர் கொல்லப்பட்டனர். இருந்தும் அவர்கள் துவண்டுவிட வில்லை. ஒப்பாரி வைக்கவுமில்லை. மீண்டும் எழுந்தார்கள்.
60ஆயிரம் சிங்கள இளைஞர்களைக் கொன்று ஆற்றில் வீசிய ஜனாதிபதி பிரேமதாசா இறுதியில் ஆமர்வீதியில் உடல் சிதறி இறந்தார்.
6 வருட ஆட்சியில் 6 கோடி மக்களைக் கொன்ற பாசிட் கிட்லர் இறுதியில் தோல்வியடைந்து தற்கொலை செய்து கொண்டான்.
எனவே இலங்கை வரலாறும் உலக வரலாறும் எப்போதும் அடிமைத் தனத்திற்கு எதிராக போராடுவதாகவும், மக்களை அடக்கியாளும் பாசிட்டுகள் அழிக்கப்பட்டதாகவுமே இருக்கின்றன.
தமிழ்இன அழிவுக்கு துணைபோன சோனியா அரசு இந்தியாவில் தூக்கியெறியப்பட்டுள்ளது.
துற்போது உலகெங்கும் வாழும் தமிழ் இனம் மட்டுமல்ல மனிதாபிமான உணர்வுள்ள மக்கள் அனைவரும் ஆதரவுக் குரல் தருகின்றனர். அத்துடன் என்றுமில்லாதவாறு தமிழகம் துணை நிற்கின்றது.
எனவே மனம் தளராது நம்பிக்கை கொள்வோம்.
இறுதி வெற்றி பெறும்வரை உறுதியுடன் போராடுவோம்.

No comments:
Post a Comment