உயிர் வலி - ( சக்கியடிக்கும் சத்தம்)
இந்திய நீதித்துறையின் மனட்சாட்சியை உறையவைக்கும் ஆவணப்படம்.
நீண்ட நாட்களாக பார்க்க வேண்டும் என ஆவலுடன் இருந்தேன்.
மும்பையில் இருக்கும் நண்பர்கள் இதன் பிரதி அனுப்பி உதவினார்கள்.
எனது ஆவலை பூர்த்தி செய்த அவர்களுக்கு முதலில் எனது நன்றிகள்.
மரண தண்டனைக்கு எதிரான ஆவணப்படம் என குறிப்பிட்டிருந்தாலும் இது பேரறிவாளன் குற்றமற்றவர் என்பதை நிருபிக்கின்றது. அந்த விதத்தில் இந்த ஆவணப்படம் தனது குறிக்கோளை நிறைவேற்றியுள்ளது எனலாம்.
இந்த ஆவணப்படத்தை தயாரித்து மக்களை மரண தண்டனைக்கு எதிராக குரல் கொடுக்க வைத்த தயாரிப்பாளர் மற்றும் படக் குழுவினர் அனைவரும் பாராட்டுக்குரியவர்கள். அவர்கள் வரலாற்றில்; ஒரு சிறந்த பங்களிப்பை நல்கியுள்ளனர் என்பதில் சந்தேகமே இல்லை.
பேரறிவாளன் தமிழை நேசித்தார். அவர் ஈழத் தமிழர்களுக்கு உறுதியான ஆதரவாளராக இருந்தார். இதைவிட அவர் வேறு எந்த தவறும் செய்யவில்லை.
இத்தனை கொடும் சிறைவாசத்திற்கு பின்னரும்,
ஏன் அவர் தூக்கு கயிற்றின் கீழ் நின்றபோதும்
ஈழத் தமிழர்களுக்கு ஆதரவளித்தது தவறு என்று ஒருபோதும் கூறவில்லை.
அல்லது அந்த ஆதரவை நிறுத்தி மன்னிப்பு கோரவும் இல்லை.
இந்தளவு தூரம் தங்களுக்கு ஆதரவான ஒரு உறவை
ஈழத் தமிழர்கள் ஒருபோதும் மறக்கவே கூடாது.
இந்த ஆவணப்படத்தை தவறாது பார்ப்பதும்
பேரறிவாளன் விடுதலைக்கு குரல் கொடுப்பதும்
ஒவ்வொரு ஈழத் தமிழன் கடமையாகும்!

No comments:
Post a Comment