• புத்தரின் போதனைகளை இதைவிட கேவலப்படுத்த முடியுமா?
உலக மக்கள் தொகை 700 கோடி. ஆனால் 1200 கோடி மக்களுக்கு தேவையான உணவு உற்பத்தி செய்யப்படுகிறது.
உணவு இன்றி எந்த மனிதனும் பட்டினி இருக்கவில்லை. மாறாக உணவை வாங்க பணம் இன்றியே மக்கள் பட்டினியால்வாடுகின்றனர்.
இலங்கையிலும் தேவையான அளவு உணவு இருந்தும் அதை வாங்க பணம் இன்மையினாலே , வறுமையினாலே மக்கள் வாடுகின்றனர்.
“தமிழ் மக்களின் நன்மைக்காக புலிப் பயங்கர வாதிகளை அழித்ததாக” மகிந்த ராஜபக்ச கூறுகிறார். ஆனால் இந்த புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசத்தில் யாரும் பட்டினியாக இறந்தாக செய்திகள் வரவில்லை. யாரும் வறுமையினால் விபச்சாரம் செய்ததாக செய்திகள் வரவில்லை.
ஆனால் யுத்தம் முடிந்து 5 ஆண்டுகள் கழிந்தவிட்ட பின்பு தமிழ் மக்களின் நிலை என்ன?
வன்னியில் வறுமை காரணமாக தனது 3 குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்று விட்டு தானும் தற்கொலை செய்த பெண் பற்றி செய்தி வருகிறது.
இன்னொரு புறத்தில் பரீட்சைக் கட்டணம் கட்டுவதற்காக இரண்டு சிறுவர் திருடியதாக நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டதாக அறிகிறோம்.
யுhழ்ப்பாணத்தில் விபச்சாரம் செய்த பெண்கள் கைது என்று தினமும் செய்திகள் வருகின்றன.
இதுதான் இலங்கை அரசின் சாதனையா?
இதற்காகத்தான் யுத்தம் செய்யப்பட்டதா?
தமிழ் பகுதிகளில் மட்டுமல்ல சிங்கள மக்கள் வாழும் பகுதிகளிலும் இதே நிலைதானே காணப்படுகிறது.
சிறுவர் பாலியலில் இலங்கை உலகில் முதலிடம் வகிக்கிறது. யுத்த காலத்தில் கூட இந்த நிலை இருக்கவில்லையே? யுத்தம் முடிந்து 5 ஆண்டுகளுக்கு பின்பு ஏன் இந்த நிலை?
குடி தண்ணீரில் கம்பனி ரசாயணக் கழிவு கலக்கிறது என்று கூறிய நீர்கொழும்பு மக்கள் மீது ராணுவம் துப்பாக்p சூடு நடத்துகிறது.
ஆனால் மகிந்த அரசுவோ எந்தவித கவலையும் இன்றி மக்கள் மீது எந்த அக்கறையும் இன்றி போர் வெற்றிவிழா நடத்துகிறது.
தனது நாட்டு மக்கள மீது யுத்தம் செய்து அதனை வெற்றிவிழாவாக கொண்டாடும் நாடு உலகில் இலங்கை மட்டுமே இருக்க முடியும்.
இங்கு நான் கேட்க விரும்புவது என்னவெனில் 2500 வருட புத்த பாரம்பரியம் மிக்க நாடு இலங்கை என்று கூறிக்கொண்டு யுத்த வெற்றிவிழா எப்படி கொண்டாட முடிகிறது?
புத்தரின் போதனைகளை இதைவிட யாராலும் கேவலப்படுத்த முடியுமா?

No comments:
Post a Comment