• வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு
தமிழ் அகதிகளை மட்டும் சிறையில் அடைக்கும்.
கடந்த வாரம் 10 தமிழ் அகதிகள் தஞ்சம்கோரி தமிழ்நாட்டுக்கு சென்றனர். அவர்களை இந்திய அரசு கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. இத்தனைக்கும் அதில் 5 பேர் குழந்தைகள்.
இதில் கொடுமை என்னவென்றால் இரு குழந்தைகளை பொறுப்பேற்க சிறை நிர்வாகம் மறுத்துவிட்டது. அவர்கள் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டிருக்கிறார்கள். பெற்றோர் தனியாக சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். இது என்ன சட்டம்? என்ன நியாயம்?
இந்த அகதிகள் முகாமில் தங்க ஏன் அனுமதிக்கப்படவில்லை? இவர்களால் பாதுகாப்பிற்கு என்ன குந்தகம் வந்துவிடப் போகிறது? எதற்காக இவர்கள் சிறையில் அடைக்கப்பட வேண்டும்?
திபேத் அகதிகள் முழு சுதந்திரமாக நடமாட அனுமதிக்கப்படுகின்றனர். அவர்களுக்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்படுகிறது. ஆனால் தமிழ் அகதிகள் மட்டும் சிறையிலும், சிறப்புமுகாமிலும் அடைக்கப்படுகிறார்கள். தமிழர்களுக்கு மட்டும் ஏன் இந்த பாரபட்சம்?
இலை வென்றால் ஈழம் மலரும் என்றார்கள். ஆனால் அந்த ஈழத் தாயின்(?) ஆட்சியில் அகதியாக வந்தவர்கள் சிறையில் அடைக்கப்படுகின்றனரே? சிறையில் அடைக்கும் கொடுமையை செய்பவர்கள் ஈழம் பெற்று தருவார்கள் என்று எப்படி நம்புவது?
ஏழுபேர் விடுதலைக்கு முந்திக் கொண்டு அறிக்கை விடுத்தவர் கலைஞர். சென்னை ரயில் குண்டு வெடிப்புக்கு முஸ்லிம்கள் மீது பழியை போட்டு அறிக்கை விட்டவர் கலைஞர். இந்த அகதிகள் சிறையில் அடைக்கப்பட்டது தொடர்பாக இதுவரை அறிக்கைகூட விடவில்லையே! இத்தனைக்கும் இவர் உலகத் தமிழினத் தலைவராம்?
இலங்கை அரசின் பயங்கரவாத பட்டியல் அறிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது என லண்டன,கனடா அமெரிக்க நாடுகள் தெரிவித்துவிட்டன. ஆனால் இந்திய அரசு அதனை ஏற்று லண்டனில் இருந்து வந்த ஒரு தமிழரை திருப்பி அனுப்பியுள்ளது. தமிழகத்தில் அகதிகளாக உள்ள 42 பேரை கைது செய்து இலங்கை அரசிடம் ஒப்படைக்க முனைகிறது.
இத்தனைக்கும் பிறகும்கூட இந்திய அரசு இலங்கை தமிழர்களுக்கு உதவி செய்யும் என சொல்லும் சில நம்மவர்களின் அறியாமையை என்னவென்று அழைப்பது?

No comments:
Post a Comment