புரட்சிப் புயல் வைகோ அவர்களே!
ஈழத்தமிழர் விடயத்தில் காங்கிரசும் பிஜே.பி யும் ஒன்று. இதை அறியாதவன் வாயில் மண்ணு என்று சாதாரண அரசியல் அறிவுள்ளவர்களே கூறியபோது அதையெல்லாம் கவனத்தில் கொள்ளாது முதன் முதலாக பி.ஜே.பி கூட்டணியில் சென்று இடம் பிடித்துக்கொண்டீர்கள்.
அன்று கூட்டணியில் சேரும்போதும் ஈழத் தமிழர்களுக்காக சேருகிறேன் என்றீர்கள். இன்று விலகும்போதும் ஈழத் தமிழர்களுக்காக விலகுவதாக கூறுகிறீர்கள்.
உங்களிடம் நான் கேட்கும் கேள்வி ஒன்றுதான்,
தொகுதி சீட்டுக்காவும் தேர்தல் செலவுக்கு பல கோடி பணத்திற்காவும் பி.ஜே.பி யிடம் பல சுற்று பேச்சுவார்த்தை நடத்தினீர்களே, அதில் ஒரு முறைகூட ஈழத் தமிழர் விடயத்தில் அவர்கள் நிலை என்ன என்பதை ஏன் உங்களால் கேட்க முடியாமற்போயிற்று?
மோடியை தமிழகம் அழைத்துவந்து அவரை பிரதமராக்கியே தீருவேன் என புயல் பிரச்சாரம் செய்தீர்களே அப்பொழுதுகூட ஈழத்தமிழர் தொடர்பாக உங்கள நிலை என்ன என்று மோடியிடம் கேட்டிருக்கலாமே?
இறுதியாக ஒரு வேண்டுகோள்!
இனி பி.ஜே.பி யை ஒழித்துக்காட்டுகிறேன் என்று சொல்லி தி.மு.கவுடன் சேர்ந்து காங்கிரசுடன் தயவு செய்து கூட்டணி வைக்காதீர்கள்.
பலமுறை நீங்கள் கூறியதுபோல் தமிழக விடுதலையை முன்னெடுங்கள் என்றோ அல்லது ஆயுதத்தை ஏந்துங்கள் என்றோ உங்களிடம் நாம் கோரவில்லை. மாறாக முடிந்தால்
தமிழீழ விடுதலை ஆதரிப்பது போல் தமிழக விடுதலையை ஆதரியுங்கள்!
ஈழத்தில் ஆயுதப் போராட்டத்தை ஆதரித்தது போல் தமிழகத்திலும் ஆயுதப் போராட்டத்தை ஆதரியுங்கள்!
தமிழீழ விடுதலையை முன்னெடுத்த பரபாகரனை ஆதரிப்பது போல் தமிழக விடுதலையை முன்னெடுத்த தோழர் தமிழரசனை ஆதரியுங்கள்!
No comments:
Post a Comment