கலைஞர் வயது 92,
வாழ்த்த மனம் வருகுதில்லையே?
வாழ்த்த மனம் வருகுதில்லையே?
எதிரியாக இருந்தாலும் வாழ்த்துவது தமிழன் பண்பாடு. ஆனால் தமிழின தலைவர் என தன்னை அழைத்துக்கொள்ளும் கலைஞர் அவர்களை வாழ்த்த மனம் வருகுதில்லையே?
கலைஞர் விரும்பியிருந்தால் முள்ளிவாய்க்காலில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதை தடுத்திருக்கமுடியும். ஆனால் அவர் அவ்வாறு விரும்பாதது மட்டுமல்ல படுகொலைகளுக்கு காங்கிரஸ் சோனியாவுடன் சேர்ந்து துணை புரிந்ததை மறக்க முடியவில்லையே!
ஆயிரக் கணக்கில் தமிழர்களை கொன்று குவித்த மகிந்த ராஜபக்ச கூட பிரபாகரனின் தாயார் இந்தியா சென்று மருத்துவ சிகிச்சை பெறுவதை தடுக்கவில்லை. ஆனால் தமிழனத் தலைவர் கலைஞர் விமான நிலையத்தில் வைத்து அவரை திருப்பி அனுப்பியதை என்னவென்று அழைப்பது?
ஒரு தமிழனாக இல்லாவிட்டாலும் வயதான பெண் மணி என்றாவது சிந்தித்து மனிதாபிமானத்துடன் அவர் மருத்துவ சிகிச்சை பெற அனுமதிதிருக்கலாம். ஆனால் அவ்வாறு செய்யாமல் கலைஞர் கருணாநிதி திருப்பி அனுப்பியதை எப்படி மறக்க முடியும்?
வரலாற்றில் முள்ளிவாய்க்கால் அவலம் இருக்கும்வரை அதில் துரோகம் இழைத்த கலைஞர் பெயரும் நினைவில் இருக்கும். அதனால்தான் அவரை வாழ்த்த மனம் வருகுதில்லையே?
எவ்வளவு வயதானாலும் ஒருவர் மரணம் அடையும்போது அவர் இன்னும் கொஞ்சம் காலம் வாழ்ந்திருக்கலாம் என நினைப்பது அனுதாபப்படுவது மனித இயல்பு. ஆனால் ஒருவர் வாழும்போதே இவர் இன்னும் சாகவில்லையா என நினைப்பது மிகவும் அரிது.
இந்த அரிதானவர்களில் கலைஞரும் இருக்கிறார் என்பதே அவருக்கான வாழ்த்தாக இருக்கிறது.
No comments:
Post a Comment