• தமிழின படுகொலைக்கு கனிமொழி உதவினாரா?;
கனிமொழியுடன் தொலைபேசியில் பேசிய பிறகே எனது கணவர் எழிலன் ராணுவத்திடம் சரணடைந்தார் என ஆனந்தி சசிதரன் தெரிவித்தள்ளார்.
கனிமொழி வழங்கிய உறுதி மொழியை அடுத்து வெள்ளைக் கொடியுடன் சரணடைந்த அந்த போராளிகளும் மக்களும் ராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டது அனைவரும் அறிந்ததே.
அப்படியாயின் திட்டமிட்ட இந்த தமிழினப்படுகொலைக்கு கனிமொழி உதவினாரா?
வெள்ளைக் கொடியுடன் சரணடைந்தவர்களை கொன்றது போர்க் குற்றம். அப்படியாயின் கனிமொழிக்கும் போர்க்குற்றத்தில் பங்கு உண்டா?
தனது வாழ்நாளுக்குள் தமிழீழத்தைக் காண வேண்டும் என கூறும் கலைஞர் கருணாநிதி இது குறித்து என்ன கூறப்போகிறார்?
ஒரு புறத்தில் மகள் கனிமொழி தமிழின படுகொலைக்கு உதவுகிறார். மறுபுறத்தில் தமிழீழத்திற்காக கலைஞர் "டெசோ" மாநாடு நடத்துகிறார். இந்த அரசியல் நாடகத்தை என்னவென்று அழைப்பது?
கனிமொழியின் உதவிக்காகவா முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நேரில் அழைத்து பரிசில்கள் வழங்கினார்?
இனியும் கனிமொழி மௌனம் காக்க கூடாது. நடந்தது என்வென்று மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.
இலலையேல் வரலாறு கனிமொழியை ஒரு தமிழினத் துரோகியாகவே பதிவு செய்யும்.
No comments:
Post a Comment