சுதாகரனுக்கு ஒரு நியாயம்!
பேரறிவாளனுக்கு இன்னொரு நியாயம்!
இதுதான் உச்ச நீதிமன்றத்தின் நியாயமா?
பேரறிவாளனுக்கு இன்னொரு நியாயம்!
இதுதான் உச்ச நீதிமன்றத்தின் நியாயமா?
• சுதாகரனை விடுதலை செய்த உச்ச நீதிமன்றம்
பேரறிவாளனை விடுதலை செய்ய மறுப்பது ஏன்?
பேரறிவாளனை விடுதலை செய்ய மறுப்பது ஏன்?
மக்களின் பணத்தை ஊழல் செய்தமைக்காக ஜெயா அம்மையாருக்கும் அவரது கும்பலுக்கும் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்கள்.
சிறையில் அடைக்கப்பட்ட ஜெயா அம்மையாருக்கு சுகயீனம் என்ற காரணம் காட்டி 21 நாட்களில் உச்ச நீதிமன்றம் ஜாமீனில் விடுதலை அளித்தது.
ஜெயா அம்மையாருக்கு மாத்திரமல்ல அவரது வளர்ப்பு மகன் சுதாகரனுக்கும் சுகயீனம் என காரணம் கூறி விடுதலை அளிக்கப்பட்டது.
திடகாத்திரமாக உள்ள சுதாகரனை சுகயீனம் என காரணம் கூறி விடுதலை செய்த உச்ச நீதிமன்றம் உண்மையிலே சுகயீனமாக உள்ள பேரறிவாளனை விடுதலை செய்ய மறுக்கிறது.
ஜெயா அம்மையாருக்கு 21 நாட்களில் விடுதலை அளித்த உச்ச நீதிமன்றம் பேரறிவாளனுக்கு 21 வருடமாகியும் விடுதலை செய்யாமல் தாமதம் செய்கிறது.
ஜெயா அம்மையார் 10 சதவீத ஊழல் செய்தமையினால் அது குற்றமில்லை என கண்டுபிடித்து விடுதலை வழங்கிய உயர்நீதிமன்றம் பேரறிவாளன் குற்றமற்றவர் என தெரிந்து கொண்ட பின்பும் விடுதலை செய்ய மறுப்பது கேவலமாக உள்ளது.
இந்தியா ஜனநாயக நாடு என்கிறார்கள். இங்கு சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் என்கிறார்கள். ஆனால் ஜெயா அம்மையார் கும்பலுக்கு ஒரு நீதி. பேரறிவாளனுக்கு இன்னொரு நீதி வழங்கப்படுகிறது. இது என்ன நியாயம்?
No comments:
Post a Comment