கலைஞர் குடும்பத்து மறதி நோய்
கனிமொழியையும் பாதித்து விட்டதா?
கனிமொழியையும் பாதித்து விட்டதா?
சசிதரன்(எழிலன்) யார் என்று எனக்கு தெரியாது- கனிமொழி தெரிவிப்பு
கனிமொழியின் எற்பாட்டிலேதான் எழிலன் முதலானோர் சரணடைந்தார்கள் என அவரது மனைவி ஆனந்தி அவர்கள் பல காலமாக சொல்லி வருகிறார்.
அவ்வாறு சரணடைந்தவர்களை இலங்கை ராணுவம் கொன்றது போர்க் குற்றம் என்றும் இது குறித்து கனிமொழியும் விசாரிக்கப்படல் வேண்டும் என பலரும் கோரி வருகிறார்கள்.
இது குறித்து இத்தனை காலமும் மௌனம் காத்து வந்த கனிமொழி அவர்கள் தற்போது எழிலனை யார் என்று தனக்கு தெரியாது என்றும் தான் அவருடன் ஒருபோதும் கதைக்கவில்லை என்றும் மறுப்பு தெரிவித்துள்ளார்.
2ஜி ஊழல் வழக்கில் விசாரணைக்கு வருமாறு தாயாளு அம்மையாருக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியதும் அவருக்கு மறதி நோய் வந்துவிட்டதாக கலைஞர் தெரிவித்தார்.
கலைஞர் குடும்பத்து அவ் மறதி நோய் தற்போது அவரது மகள் கனிமொழிக்கும் வந்துவிட்டது போல் தெரிகிறது.
அதுதான் இத்தனை நாள் கடந்து எழிலனை தெரியாது என்கிறார் போலும்.
இதில் ஆச்சரியம் இல்லை. எனெனில் 2ஜி ஊழல் வழக்கில் சமர்ப்பிக்கப்பட்ட டெலிபோன் உரையாடல் இடம்பெற்ற கசெட்டில் உள்ள தனது குரலையே மறுத்தவர் ஆயிற்றே.
கனிமொழி அவர்களே!
உங்களையே மகள் இலலை என்று மறுத்தவர் கலைஞர். உங்கள் அரசியலில் அது சகஜமாக இருக்கலாம். ஆனால் நாங்கள் பல்லாயிரம் உறவுகளை இழந்து வேதனையில் இருக்கிறோம். எமது வலிகளை ஆற்றாவிட்டாலும் பரவாயில்லை. தயவு செய்து வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் கொடுமையை இழைக்காதீர்கள்.
உங்களை நம்பி ஏமாந்த
அப்பாவி ஈழத் தமிழர்கள்.
அப்பாவி ஈழத் தமிழர்கள்.
No comments:
Post a Comment