Wednesday, December 30, 2015

•தமிழர்களுக்கு ஒரு நியாயம்! மற்றவர்களுக்கு இன்னொரு நியாயம்!! இதுதான் இந்திய அரசின் நியாயமா?

•தமிழர்களுக்கு ஒரு நியாயம்!
மற்றவர்களுக்கு இன்னொரு நியாயம்!!
இதுதான் இந்திய அரசின் நியாயமா?
இந்திய அரசு நேபாளத்திற்கு வழங்கிய உதவி 14 ஆயிரம் கோடி
இந்திய அரசு பூட்டானுக்கு வழங்கிய உதவி 8 அயிரம் கோடி
இந்திய அரசு இலங்கைக்கு வழங்கிய உதவி 10 ஆயிரம் கோடி
இந்திய அரசு ஆப்கானிஸ்தானுக்கு வழங்கிய உதவி 1 ரில்லியன் டொலர்.
எங்கோ இருக்கும் மங்கோலியாவுக்கு கடந்த மாதம் இந்திய அரசு வழங்கியது 6500 கோடி
ஆனால் இந்திய அரசு தமிழ்நாட்டிற்கு வழங்கியதோ ஆயிரம் கோடி மட்டுமே.
தமிழ்நாடு வெள்ள அழிவு 50 ஆயிரம் கோடிக்கு மேலே
தமிழ்நாடு அரசு கேட்ட தொகை 5 ஆயிரம் கோடி
இந்திய அரசு வழங்கியதோ ஆயிரம் கோடி மட்டுமே
இந்திய அரசு தமிழ்நாட்டில் இருந்து பெறும் வரியோ 85 ஆயிரம் கோடி
இந்திய அரசு,
இலங்கை அரசின் பட்ஜட் துண்டு விழும் தொகைக்கு உதவுகிறது.
இலங்கை ராணுவத்திற்கு பயிற்சி வழங்கி வருகிறது.
இலங்கை ராணுவத்தை நவீனமயமாக்க உதவி வழங்குகிறது.
தமிழக மீனவர்களை சுட்டுக் கொல்லும் இலங்கை கடற்படைக்கு
போர்க்கப்பல் வழங்கியுள்ளது.
அதேவேளை,
தமிழக அரசின் இன்றைய கடன் 1.21லட்சம் கோடி ரூபா.
இதற்கு வட்டியாக 10754 கோடி ரூபா தமிழக அரசு கட்டுகிறது.
ஒவ்வொரு தமிழன் தலையிலும் 13862 ரூபா கடன் சுமத்தப்பட்டுள்ளது.
அதாவது பிறக்கும் ஒவ்வொரு தமிழ்க்; குழந்தையும் 13862ரூபா கடனுடனே பிறக்கின்றது.
இந்திய ராணுவம் மிகவும் தாமதமாகவே மீட்பு உதவிக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
வந்த ராணுவத்திடம் மீட்பிற்கு வேண்டிய போதிய உபகரணங்கள் இல்லை.
உதவி செய்ய வந்த அமெரிக்காவின் உதவியும் ஏற்கப்டவில்லை.
எல்லாவற்றுக்கும் மேலாக ஈழத் தமிழர்கள் வடமாகாணசபை ஊடாக உதவி செய்ய முன்வந்ததையும் இந்திய தூதரகம் எற்க மறுத்துவிட்டது.
இப்போது கூறுங்கள்
தமிழகம் இந்தியாவுடன் இணைந்து இருப்பதால் என்ன பயன்?
மாறாக பிரிந்து தனிநாடாக இருந்தால்,
•வருடா வருடம் கட்டும் வரி 85 ஆயிரம் கோடி மிச்சமாகும்.
•ஆப்கானிஸ்தான் ,நேபாளம், பூட்டான் போன்று தமிழ்நாட்டிற்கும் இந்திய அரசு 1 ரில்லியன் அமெரிக்க டாலர் உதவி வழங்கும்
•தமிழக மீனவர்களை மட்டுமல்ல ஈழத் தமிழர்களின் உயிரையும் காக்க முடியும்.

No comments:

Post a Comment