• மீண்டும் ஒரு றிசானா?
சிங்கங்களை அல்ல, ஆடுகளையே எப்போதும் பலி கொடுக்கப்படுகின்றன.- டாக்டர் அம்பேத்கார்
சவூதி அரோபியாவில் இதுவரை ஒரு அமெரிக்கர் தண்டிக்கப்படவில்லை. எப்போதும் ஏழை நாட்டவரே தண்டிக்கப்படுகின்றனர்.
கடந்த வருடம் சவூதி அரேபியாவில் ஒரு இலங்கைப் பெண் கழுத்து வெட்டிக் கொல்லப்பட்டார்.
இந்த வருடம் அதே சவூதிஅரேபியாவில் ஒரு இலங்கை பெண் கல்லெறிந்து கொல்லப்பட விருக்கிறார்.
கடந்த வருடம் 17 வயதான றிசானாவை காப்பாற்ற நாம் தவறிவிட்டோம்.
இந்த வருடமாவது அனைவரும் ஒருமித்துக் குரல் கொடுத்து இந்த பெண்ணை காப்பாற்றுவோம்.
ஈரான் நாட்டில் ஒரு அப்பாவிப் பெண் நடத்தை கெட்டவள் என கணவனால் பொய்க் குற்றம் சாட்டப்பட்டு கணவன், தகப்பன், அவளின் ஆண் பிள்ளைகளாலேயே கல்லெறிந்து கொல்லப்பட்டாள்.
ஆனால் அது ஒரு பிரஞ்சு ஊடகவியலாளரால் வெளி உலகத்திற்கு தெரிய வந்தது. அந்த உண்மை சம்பவம் படமாக எடுக்கப்பட்டது.
அதனை கீழ்வரும் இணைப்பில் பார்வையிடலாம்.
நடத்தை கெட்டவள் என்று ஒரு பெண்மீது குற்றம் சுமத்துகிறார்கள்.
அப்புறம் அவளே தான் நடத்தை கெட்டவள் அல்ல என்று நிரூபிக்கும்படி கேட்கிறார்கள்.
அப்பறம் அவள் நடத்தை கெட்டவள் என்று அவர்களே தீர்ப்பு கூறுகிறார்கள்.
அப்புறம் அவர்களே கல் எறிந்து அவளை கொலை செய்கிறார்கள்.
இத்தனையையும் மதத்தின் பேரால,; கடவுளின் பேரால் செய்கிறார்கள்.
இது ஆண்களின் உலகம். அண்களுக்கு மட்டுமேயான உலகம் என்கிறார்கள்.
இங்கு பெண்கள் சக மனிதர்களாக நடத்தப்படுவதில்லை.
மாறாக மிருகங்களைவிட கேவலமாகவே மதிக்கப்படுகிறார்கள்.
மாறாக மிருகங்களைவிட கேவலமாகவே மதிக்கப்படுகிறார்கள்.
பெண் அடிமை நீங்காத வரையில் எந்தவொரு சமூகமும் முன்னேறிவிட முடியாது.
No comments:
Post a Comment