•தமிழ்நாடு மக்கள் மழை வெள்ளத்தில் மூழ்கிறார்கள்
இந்திய அரசோ இலங்கைக்கு ராணுவ உதவி செய்கிறது!
இந்திய அரசோ இலங்கைக்கு ராணுவ உதவி செய்கிறது!
மழை தொடர்ந்து பெய்கிறது. வீதிகளில் வெள்ளம் ஆறாக பாய்கிறது. மக்கள் வெள்ளத்தில் மூழ்கிக் கொண்டிருக்கிறார்கள. இந்திய அரசோ மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு பதிலாக இலங்கைக்கு ராணுவ உதவி வழங்குகிறது.
இந்திய அரசு தமிழ்நாட்டில் இருந்து ஆண்டுக்கு 85 அயிரம் கோடி ரூபா வரியாக பெற்றுக்கொள்கிறது. ஆனால் அது தமிழ்நாட்டிற்கு வழங்கும் பணம் வெறும் 27ஆயிரம் கோடி ரூபா மட்டுமே.
ஆண்டு தோறும் 58 ஆயிரம் கோடி ருபாவை பெற்றுக் கொள்ளும் இந்திய அரசு வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு மறுக்கிறது.
ஆனால் அதே இந்திய அரசு இலங்கையின் ராணுவத்தை மேம்படுத்த உதவி வழங்குகிறது அண்மையில் போhக்கப்பலை அன்பளிப்பாக வழங்கிய இந்திய அரசு தொடர்ந்தும் இலங்கை ராணுவத்திற்கு உதவிகள் வழங்கப்படும் என இந்திய ராணவ தளபதி உறுதியளித்துள்ளார்.
இலங்கை ராணுவம் இலங்கைத் தமிழ் மக்களை மட்டுமல்ல தமிழக மீனவர்களையும் கொன்று வருகிறது.
உலகில் தனது நாட்டு மீனவனைக் கொல்லும் அந்நிய நாட்டு ராணுவத்திற்கு உதவி வழங்கம் ஒரே நாடு என்ற பெருமை இந்தியாவுக்கு மட்டுமே உண்டு.
தமிழ்நாடு இந்திய அரசின் கீழ் அடிமையாக இருப்பதாலேயே இந்திய அரசு இவ்வாறு தொடர்ந்து வஞ்சனை செய்கிறது.
தமிழகம் இந்திய அரசில் இருந்து வெளியேறினால்>
•ஆண்டுதோறும் இந்திய அரசுக்கு வழங்கி வரும் 58 ஆயிரம் கோடி ரூபாவை தமிழக மக்களுக்கு செலவு செய்யலாம்.
•இலங்கை ராணுவத்திற்கு இந்திய அரசு வழங்கி வரும் உதவியை நிறுத்தலாம்
•தமிழக மினவர்களை மட்டுமல்ல இலங்கை தமிழ் மக்களையும் பாதுகாக்கலாம்
•தமிழ்நாட்டின் இன்றைய கடன்தொகையான 1.21லட்சம் கோடி ரூபாவை கட்டலாம்.
தமிழக மக்கள் இனியாவது இந்த உண்மையை உணர்ந்து கொள்வார்களா?
No comments:
Post a Comment