Saturday, February 11, 2017

•மாறன் சகோதரர்களுக்கு ஒரு நீதி தமிழ் இன உணர்வாளர்களுக்கு இன்னொரு நீதி

•மாறன் சகோதரர்களுக்கு ஒரு நீதி
தமிழ் இன உணர்வாளர்களுக்கு இன்னொரு நீதி
இதுதான் இந்திய நீதியா?
மாறன் சகோதரர்கள் தமது அதிகாரத்தைப் பயன்படுத்தி 760 கோடி ரூபா ஊழல் செய்ததாக சிபிஜ வழக்கு பதிவு செய்தது. அது இந்த வழக்கில் குற்றப் பத்திரிகையும் தாக்கல் செய்துவிட்டது.
இந் நிலையில் தங்களை கைது செய்யாமல் முன் ஜாமீன் வழங்குமாறு கோரி மாறன் சகோதரர்கள் நீதிபதியிடம் கோரியிருந்தனர்.
நீதிபதி முன் ஜாமீன் வழங்கியிருக்கலாம். அல்லது வழங்க முடியாது என்று தீர்ப்பு கூறியிருக்கலாம். இந்த இரண்டில் ஒரு தீர்ப்பையே எல்லோரும் எதிர்பாhத்து இருந்தனர்.
ஆனால் நீதிபதியோ மாறன் சகோதரர்கள் மீதான வழக்கையே தள்ளுபடி செய்துவிட்டார். இப்படி தமக்கு சாதகமான ஒரு தீர்ப்பை அந்த மாறன் சகோதரர்களே எதிர்பார்த்திருக்கமாட்டார்கள்.
அதேவேளை கடந்த 10.03.2014 யன்று மதுரையில் திருச்செல்வம், தமிழரசன், கவிஅரசு, காளை, ஜோன்மாட்டின், கார்த்திக் ஆகிய ஆறு தமிழ் இன உணர்வாளர்கள் கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டனர்.
கடந்த 3 வருடங்களாக சிறையில் இருக்கும் இந்த தமிழ் இன உணர்வாளர்கள் மீதான வழக்கு விசாரணை முடிவடைந்து விட்டபோதும் தீர்ப்பை கூறாமல் வேண்டுமென்றே இழுத்தடிக்கப்படுகிறது.
நான்கு வருடம் தண்டனை பெற்ற ஜெயா அம்மையாருக்கு 21 நாளில் ஜாமீன் வழங்கிய நீதிமன்றம் எந்தவித தண்டனையும் பெறாத இவர்களுக்கு மூன்று வருடங்களாகியும் ஜாமீன் வழங்கவும் மறுக்கிறது.
இவர்கள் மாறன் சகோதரர்கள் போல் 760 கோடி ரூபா ஊழல் செய்திருந்தால் இந்நேரம் இவர்கள் மீதான வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டிருக்கும்.
இவர்கள் நடிகர் சல்மான்கானாகவோ அல்லது சஞ்சய் தத்தாகவோ இருந்திருந்தால் இந் நேரம் இவர்கள் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டிருப்பார்கள்.
இவர்கள் காஞ்சி சங்கராச்சாரி போன்று பிராமணர்களாக இருந்திருந்தால் ஜாமீனில் விடுதலை மட்டுமல்ல வழக்கில் இருந்தே விடுதலை செய்யப்பட்டிருப்பார்கள்.
ஆனால் இவர்கள் தமிழ் மக்களை நெசித்தபடியாலும் தமிழ் இன உணர்வுடன் செயற்பட்டமையினாலும் இவர்களுக்கு நீதி மறுக்கப்படுகிறது.
தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு ஒப்பாகும் என்பார்கள். இந்த ஆறு தமிழ் இன உணர்வாளர்களுக்கும் நீதி மறுக்கப்படுகிறது.
இந்தியா ஒரு ஜனநாயக நாடு. இங்கு சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்கிறார்கள். ஆனால் தமிழ் இன உணர்வாளர்களுக்கு ஒரு நீதியும் பணக்காரர்களுக்கு இன்னொரு நீதியும் வழங்கப்படுகிறது.

No comments:

Post a Comment