•மாணவர் போராட்டமும் மகத்தானதே!
மக்கள் போராட்டம் மட்டுமல்ல மாணவர் போராட்டமும் மகத்தானதே.
கேப்பாப்பிலவு மாணவர்கள் போராட்டம் புதிய வரலாறு படைக்கிறது.
போராட்டம் இலக்கியத்தை மட்டுமல்ல மாணவர்களுக்கு கல்வியையும் கொடுக்கிறது.
மாணவர்களின் போராட்டம் அவர்களுக்கான கல்வியையும் அந்த களத்திற்கு கொண்டு வந்திருக்கிறது.
முல்லைத்தீவு வலய பிரதி கல்விப் பணிப்பாளர் தலைமையில் மாணவர்களுக்கான கல்வி கற்பித்தல் மாணவர்களின் போராட்ட களத்தில் நடைபெறுகிறது.
கல்விக்காக பாடசாலைக்கு சென்ற மாணவர்களுக்கு கல்வியே அவர்களின் களத்திற்கு வரவைத்திருப்பது அவர்களின் போராட்டம் அன்றி வேறு என்னவாக இருக்க முடியும்?
மிகவும் சிறிய வயது மாணவர்கள். ஒரு துண்டு பாணும் ஒரு கப் தேனீரும் உண்டுகொண்டு ராணுவ முகாமின் கம்பி வேலியோரம் படுத்து உறங்கிய வண்ணம் 6வது நாளாக போராடுகிறார்கள்.
தாங்களே பாடல்களை இயற்றி தாங்களே மெட்டு போட்டு தாங்களே தாளம் போட்டு பாடுகின்றனர். ஆடுகின்றனர்.
பகலில் தமது நிலத்தை தரும்படி கேட்டு போராடுகின்றனர். இரவில் ஒன்றாக இருந்து கல்வி கற்கின்றனர்.
கும்மிருட்டு என்ன? பனிக் குளிர் என்ன? எத்தனை இடர் இருந்தபோதும் இந்த சிறு குழந்தைகள் எத்தனை துணிவாக போராடுகின்றன?
ஆம். போராட்டம் இவர்களுக்கு மகத்தான பண்புகளை கற்றுக்கொடுக்கிறது. அதனால்தான் இந்த சின்னஞ்சிறு வயதில் இவர்களால் வரலாறு படைக்க முடிகிறது.
உலகில் எந்தவொரு இனத்தின் குழந்தையும் இப்படி ஒரு போராட்டத்தை நடத்தியதாக நான் அறியவில்லை.
இவர்களை எண்ணி இவர்கள் பெற்றோர் மட்டுமல்ல தமிழ் இனமே நிச்சயம் பெருமை கொள்ள முடியும்.
-0:07
11,686 Views
Peter Ilancheliyan with Mariyampillai Antony Jeyanathan.
முல்லைத்தீவு வலய பிரதிகல்விப்பணிப்பாளர் தலமையில் கேப்பாபிலவு போராட்ட களத்தில் கல்வி கற்பித்தல் நடவடிக்கை நடைபெற்று வருகிறது.
•தமிழ் தலைவர்கள் தமிழ் மக்களை
தலைகுனிய வைக்கின்றனர்!
தலைகுனிய வைக்கின்றனர்!
வோட்டு போட்ட மக்கள் ஒழுகும் ஓலைக் குடிசை வீடுகளில் வாழ்கின்றனர். ஆனால் பதவி பெற்ற தலைவர்களோ மாட மாளிகைகளில் சொகுசாக வாழ்கின்றனர்.
...See More
-7:02
94,508 Views
Ptk Vanni Pictures was live.Follow
தமது சொந்த நிலங்களை ஆக்கிரமித்துள்ள இராணுவம் அதனை விடுவிக்க வேண்டுமென போராடிவரும் கேப்பாபுலவு மக்களின் போராட்ட களத்தில் சிறுவர்களின் பாடல் ....................
•சொந்த நிலத்தை கேட்டு கேட்டு களைத்த குழந்தை
உறங்குகிறது கேப்பிலாபுலவு ராணுவ வேலியோரத்தில்!
உறங்குகிறது கேப்பிலாபுலவு ராணுவ வேலியோரத்தில்!
மற்ற குழந்தைகள் போல் இந்த குழந்தையால் ஓடி விளையாட முடியவில்லை. ஏனெனில் தன் நிலத்திற்குகாக இந்த குழந்தை போராட வேண்டியிருக்கிறது.
...See More
Community
மாக்சிய லெனிய மாசேதுங் சிந்தனையில்
புதிய ஜனநாய புரட்சியை முன்னெடுப்போம்.
புதிய ஜனநாய புரட்சியை முன்னெடுப்போம்.
No comments:
Post a Comment