•அலிபாபாவும் நாற்பது திருடர்களும்
அதிமுக திருடர்கள் தமக்குரிய அலிபாபாவாக மட்டுமல்ல தமிழகத்தின் முதலமைச்சராகவும் சசிகலாவை தேர்ந்தெடுத்துள்ளனர்.
இதுவரை திரைமறைவில் இருந்துகொண்டு ரிமோட்கண்ரோல் மூலம் அதிகாரம் செலுத்தி வந்த சசிகலா இப்போது நேரிடையாக அதிகாரத்திற்கு வந்துள்ளார்.
எப்போது ஜெயா அம்மையாரின் 30 ஆயிரம் கோடி ரூபா சொத்துகள் அப்படியே சசிகலாவின் கையில் சென்றுவிட்டதோ அப்பவே தமிழக முதலவர் சசிகலா என்பதும் உறுதியாகிவிட்டது.
ஏனெனில் தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியா முழுவதுமே இருப்பது மக்கள் ஜனநாயம் அல்ல. மாறாக பணநாயகமே.
அவர் பதவிக்கு வந்திருப்பது மக்களுக்கு சேவை செய்ய அல்ல. மாறாக மேலும் மக்கள் பணத்தை கொள்ளையடிக்கவும் கொள்ளையடித்த பணத்தை காப்பதற்குமே.
அதை அவர் வழமைபோல் திரை மறைவில் இருந்துகொண்டும் செய்திருக்க முடியும் என்பதால் திடீரென முதலமைச்சர் பதவிக்கு வந்தது ஏன் என்ற கேள்வி எழுகிறது.
ஜெயா அம்மையார் மற்றும் சசிகலா மீதான சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பு உச்சநீதிமன்றத்தில் விரைவில் வரவுள்ளது.
எனவே உச்சநீதிமன்ற தீர்ப்பு தனக்கு சாதகமாக வரச் செய்வதற்கும் மற்றும் தன் குடும்பத்தவர்கள் மீதான அனைத்து வழக்குகளிலும் தமக்கு சாதகமான தீர்ப்பு வருவதற்கும் முதல்வர் பதவி அவசியம் என சசிகலா உணர்ந்துள்ளார்.
அதனால்தான் அவரது குடும்பத்தவர்களின் ஆலோசனையின் பேரில் அவசர அவசரமாக முதல்வர் பதவியினை அவர் ஏற்கிறார்.
சசிகலாவின் இந்த பலவீனமான நிலையினை புரிந்கொண்ட மோடி அரசு அதனை பயன்படுத்தி தமிழர் விரோதமான திட்டங்களை நிறைவேற்றப்போகிறது.
சசிகலா ஒரு தமிழிச்சியாக இருக்கலாம். ஆனால் அவரைக் கொண்டே தமிழ் மக்களுக்கு தீங்கு இழைக்க மோடி அரசு திட்டம் போடுகிறது.
ஆனால் மோடி அரசு எத்தனை திட்டம் போட்டு செயற்பட்டாலும் தமிழ் மக்கள் மத்தியில் இந்திய அரசு தொடர்ந்து அம்பலப்பட்டு வருவதை தடுக்க முடியாது.
அமைதிவழியாக நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தை இந்திய அரசு வன்முறை கொண்டு அடக்கியதன் மூலம் அகிம்சை வழிப் போராட்டம் மூலம் தீர்வு பெறமுடியாது என்ற உண்மையை மக்கள் உணர வைத்தது.
தற்போது இந்திய அரசு சசிகலாவை பதவிக்கு வர வைத்ததன் மூலம் இந்திய ஜனநாயகம் என்பது போலி ஜனநாயகம் என்பதையும் அது உண்மையில் பணநாயகமே என்பதையும் மக்கள் உணர வைத்துள்ளது.
மோடி அரசின் ஒவ்வொரு அசைவிலும் தமிழ் மக்கள் நிறைய கற்றுக் கொள்கின்றனர். விரைவில் அவர்களுக்கே உரிய மொழியில் தகுந்த பதிலை வழங்குவார்கள்.
No comments:
Post a Comment