•போராட்டம் ஒருபோதும் தோல்வியை தருவதில்லை
•இன்று பரவிபாஞ்சான். நாளை கேப்பாப்பிலவு!
பரவிபாஞ்சான் மக்களின் போராட்டம் வெற்றி பெற்றுள்ளது. பரவிபாஞ்சான் மக்களது காணிகளை ஒப்படைக்க ராணுவம் சம்மதித்துள்ளது.
சம்பந்தர் அய்யாவின் நல்லிணக்க அரசியலால் சாதிக்க முடியாததை பரவிபாஞ்சான் மக்கள் தமது போராட்டம் மூலம் சாதித்து காட்டியுள்ளனர்.
பரவிபாஞ்சான் மக்கள் பெற்ற வெற்றி கேப்பாப்பிலவு மக்களுக்கு உற்சாகத்தையும் உறுதியையும் கொடுத்துள்ளது.
25 வது நாளாக தொடரும் கேப்பாப்பிலவு மக்களின் போராட்டமும் நிச்சயம் வெற்றி பெறும். அம் மக்களும் தமது காணிகளை மீளப் பெறுவார்கள்.
இதேவேளை காணாமல் போனவர்களின் உறவுகளின் கவனயீர்ப்பு போராட்டம் 5 வது நாளாக தொடருகிறது.
இம் மக்களின் நியாயமான கோரிக்கைக்கு ஆதரவாக உலகெங்கும் உள்ள தமிழர்கள் குரல் கொடுக்கிறார்கள்.
தமிழ் மக்கள் மட்டுமன்றி முஸ்லிம் மற்றும் சிங்கள மக்களும் இந்த மக்கள் போராட்டங்களுக்கு தமது ஆதரவினை தெரிவித்து வருகின்றனர்.
வாழ்க்கை போராட்டமயமானது. போராட்டம் இன்பமயமானது என்று தோழர் கால் மாக்ஸ் கூறியுள்ளார்.
அது உண்மைதான் என்பதை கேப்பாப்பிலவில் 25வது நாளாக போராடும் குழந்தைகள் நிரூபித்துக்கொண்டிருக்கின்றனர்.
No comments:
Post a Comment