Sunday, July 30, 2023
நண்பர் தின வாழ்த்துகள்!
நண்பர் தின வாழ்த்துகள்!
பொதுவாக பலரும் உடைந்துபோகும் இடம் சிறைச்சாலை.
ஆனால் நான் எட்டு வருடம் சிறை வாழ்க்கையை அனுபவித்தபோதும் உறுதி குலையாமல் இருந்தமைக்கு முக்கிய காரணம் நண்பர்களின் உதவியாகும்.
சிலர் என்னுடன் பேசும்போது “எப்படி உங்களால் இத்தனை காலமும் அர்ப்பணிப்புடன் செயற்பட முடிகிறது?” என ஆச்சரியத்துடன் கேட்பார்கள்.
நான் அவர்களுக்கு கூறுவது “ இதில் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை. எனக்கு கிடைத்ததுபோல் நண்பர்கள் உங்களுக்கு கிடைத்திருந்தால் நீங்கள் என்னைவிட அதிகமாக செயற்பட்டிருப்பீர்கள்”. என்று.
இது உண்மைதான். எனது பலமும் நண்பர்கள்தான். அதேவேளை எனது பலவீனமும் நண்பர்கள்தான்.
என்னுடன் ஒன்றாக பழகிய நண்பர்கள் சிலர் இறந்து விட்டார்கள்.
ஆனாலும் நான் தொடர்ந்தும் புரட்சிகர அரசியலில் உறுதியாக பயணிப்பதற்கு பெரிதும் துணை புரிவது அவர்களுடனான நினைவுகளே.
நாம் எமது வாழ்வில் விரும்பியளவு பணத்தை சம்பாதித்துவிட முடியும்.
நாம் எம் வாழ்வில் விரும்பியளவு கல்வி கற்றுவிட முடியும்.
ஆனால் விரும்பியளவு நண்பர்களை இலகுவில் நாம் பெற்றுவிட முடியாது.
இன்று பொதுவாக எல்லோரும் என்னை “தோழர்” என்றே அழைப்பார்கள்.
ஆனால் எனது ஊர் நண்பர்கள் மட்டும் இப்போதும் என்னை “அண்ணை” என்றே உரிமையுடன் அழைப்பார்கள்.
பொதுவாக இந்த உலகில் சிறந்த நட்புக்கு மார்க்ஸ் எங்கெல்ஸ் நட்பையே உதாரணமாக கூறுவார்கள்.
அப்படி ஒரு நட்பு தம் வாழ்வில் கிடைக்க வேண்டும் என்பதே ஒவ்வொருவரின் ஆசையாக இருக்கும்.
என் இனிய நண்பர்கள் அனைவருக்கும் “வாழ்த்துகள்”
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment