Tuesday, July 30, 2019

திமுக சங்கர மடமா?

திமுக சங்கர மடமா?
கலைஞர் உயிரோடு இருந்தபோது திமுக சங்கரமடம் இல்லை என்றார். ஆனாலும் அவர் வாரிசு ஸ்டாலின் பதவி பெற்றார்.
இப்போது ஸ்டாலின் மகன் உதயநிதி பதவி பெற்றுள்ளார். நாளை உதயநிதியின் மகன் பதவி பெறலாம்.
ஆனால் சங்கர மடத்தில்கூட ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் சங்கராச்சாரியர்களாக நியமிக்கப்படுவதில்லை.
திமுக கலைஞரின் குடும்ப சொத்துதானே. எனவே அதன் தலைவராக அவரின் வாரிசுகள் நியமிக்கப்படுவதில் ஆச்சரியம் இல்லை.
ஆனால் தயவு செய்து உதயநிதி வரவில்லை என்றால் பாஜக வந்துவிடும் என்றெல்லாம் கதை சொல்லாதீங்கடா.
அதுவும் உதயநிதி நியமிக்கப்பட்டதெற்கெல்லாம் வாழ்த்து அனுப்பும் நிலையில் தோழர் நல்லகண்ணு இருப்பது கொடுமையடா.
கேவலம் இரண்டு சீட்டுக்காக ரஸ்சிய தலைவர் ஸ்டாலினை மறந்து கோபாலபுரம் ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவிக்கும் நிலையில் கம்யுனிஸ்ட் கட்சியை கொண்டு வந்திட்டிட்டீங்கடா. அதுதான்டா தாங்க முடியல்லையடா.
ஆனால் ஒன்றடா, என்ன இருந்தாலும் ஈழத்து கருணாநிதி என்று நாம் அழைக்கும் சம்பந்தர் ஐயா தன் இரு மகன்களில் ஒருவரைக்கூட தன் வாரிசாக அரசியலுக்கு அழைத்து வந்து பதவி கொடுக்கவில்லை.
இனி இதைப் பார்த்து அந்தாளுக்கும் ஆசை வந்து தொலைக்கப்போகுதே?

“தேசத்துரோகி” வைகோ வாழ்க!

“தேசத்துரோகி” வைகோ வாழ்க!
வைகோ அவர்களை தேசத்துரோகி என குற்றம் கண்டு ஓராண்டு சிறைத் தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.
இனி இதேபோன்று சீமான், திருமுருகன்காந்தி, நெடுமாறன், மணியரசன் போன்றவர்களும் தேசத் துரோகி என்று தண்டனை வழங்கப்படலாம்.
இது கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரான தீர்ப்பு மட்டுமல்ல முழு தமிழர்களையும் தேசத் துரோகிளாக சித்தரிக்கும் தீர்ப்பு ஆகும்.
ஒருமுறை “கம்யுனிஸ்ட் கட்சி உறுப்பினராக இருப்பதே மிகப் பெரிய பாக்கியமாக கருதுகிறேன்” என தோழர் லெனின் கூறினார்.
அதேபோல் இந்தியாவில் “தேசத்துரோகி” ஆக இருப்பதே தமிழர்களுக்கு கிடைத்த மிகப் பெரிய பாக்கியமாகும்.
பெருமையுடன் முழங்குவோம் “தேசத்துரோகி” வைகோ வாழ்க!

தமிழ் அரசுக்கு ஏழு தமிழரை விடுதலை செய்ய அதிகாரம் இல்லை என்றால்

தமிழ் அரசுக்கு ஏழு தமிழரை விடுதலை செய்ய அதிகாரம் இல்லை என்றால் அவர்களை நீண்ட பரோலில் விடுதலை செய்ய முடியும்.
ஆனால் ஏழுதமிழர்களின் பரோல் விடுமுறைக்குகூட தமிழக அரசு கடும் எதிர்ப்பு காட்டி வருகிறது.
ஒருபுறம் ஏழு தமிழர்களின் விடுதலைக்கு தீர்மானம் நிறைவேற்றிய தமிழக அரசு மறுபுறம் பரோல் விடுமுறைக்குகூட எதிர்ப்பு காட்டுகிறது.
தமிழக அரசின் இந்த இரட்டைவேட நாடகத்தை தமிழ் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
ஏழு தமிழர்களில் ஒருவரான நளினி தன் மகளின் திருமண விடயங்களுக்காக 6 மாதம் பரோல் விடுதலை கேட்டிருந்தார்.
ஆனால் தமிழக அரசு பரோல் விடுதலை வழங்காததுடன் நீதிமன்றத்திலும் அதற்கு கடும் எதிர்ப்பு காட்டியுள்ளது.
இறுதியில் நீதிமன்றம் ஒரு மாத பரோல் விடுதலை நளினிக்கு வழங்கியுள்ளது.
நளினி தாயார் என்ற ரீதியில் மகளின் திருமணத்திற்கு பரோல் வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் தந்தையரான முருகனுக்கு அந்த ஒரு மாத பரோல் மட்டுமல்ல ஒரு நாள் பரோல்கூட வழங்க நீதிமன்றமும் தயாரில்லை
ஏனெனில் முருகன் ஈழத் தமிழர் என்பதால் அவருக்கு பரோல் விடுமுறையும் மறுக்கப்பட்டுள்ளது.
நம்புங்கள்! இந்தியா ஜனநாயக நாடு. இங்கு சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் என்று.
குறிப்பு – நளினி ஒரு மாத பரோல் விடுமறை பெற குரல் கொடுத்த அனைவருக்கும் நன்றியும் பாராட்டுகளும்.

• “தேவடியா” என்ற சொல் மருவி “மீடியா” என்று வந்ததா?

• “தேவடியா” என்ற சொல் மருவி “மீடியா” என்று வந்ததா?
சில வாரங்களுக்கு முன்னர் தமிழகத்து நண்பர் ஒருவர் தேவடியா என்ற சொல்லே மருவி மீடியா என்று வந்துள்ளது என முகநூலில் எழுதியிருந்தார்.
இதைப் படித்தபோது சீச்சீ அப்படி இருக்காது என நினைத்தேன். ஆனால் இப்போது வித்தியாதரனின் மணிவிழாவைப் பார்க்கும்போது அந்த தமிழக நண்பர் எழுதியது உண்மையாக இருக்குமோ என எண்ணத் தோன்றுகிறது.
புலிகளின் விமானம் கொழும்பில் குண்டு வீசும்போது கொழும்பில் இருந்து வித்தியாதரன் அன்டன் பாலசிங்கத்துடன் தொலைபேசியில் பேசுவார். இந்த செய்தியை கோத்தபாயாவே கூறியிருக்கிறார்.
இது தெரிந்திருந்தும் இலங்கை ராணுவம் ஏன் வித்தியாதரன் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்பதற்கான காரணம் வித்தியாதரனின் மணிவிழா காட்டியுள்ளது.
ரணில், மகிந்த ராஜபக்ச, சுமந்திரன், டக்லஸ் என அனைவரையும் ஒரே இடத்தில் தன் மணிவிழாவிற்கு அழைத்து பவர் காட்டியுள்ளார் வித்தியாதரன்.
இவர் மட்டுமல்ல இவருடைய மைத்துனர் சரவணபவன் எம்பி யும் தன் மகள் பிறந்த நாளுக்கு ஜனாதிபதி மைத்திரியை அழைத்து பவர் காட்டியிருந்தார்.
புலிகளுக்கு அடைக்கலம் கொடுத்தார் என்ற குற்றச்சாட்டில் ஐயர் ஒருவர் இப்பவும் சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார். ஆனால் பலிகளின் தலைவர் பிரபாகரனுடன் விருந்துண்ட வித்தியாதரன் மணிவிழாவில் ரணில் மகிந்த ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
கதிர்காமர் வீட்டு வேலியில் இருந்த மரங்களை கூலிக்கு வெட்டிய குற்றத்திற்காக மலையக தமிழர் ஒருவர் 13 வருடங்களாக சிறையில் அடைக்கப்பட்டார். அவருடைய இரண்டு சிறுநீரகங்களும் செயல் இழந்த நிலையிலும் அரசு அவரை விடுதலை செய்யவில்லை. இறுதியாக கடந்த வாரம் அவர் சிறையிலேயே இறந்தார்.
ஆனால் அன்டன் பாலசிங்கத்துடன் தொலைபேசியில் பேசியது தெரிந்தும் இலங்கை ராணவம் வித்தியாதரன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இப்பொது வித்தியாதரன் கைது செய்து சிறையில் அடைக்கப்பட வேண்டும் என நாம் கோரவில்லை. மாறாக தன் மணிவிழாவுக்கு இத்தனை தலைவர்களையும் அழைக்கும் செல்வாக்கு கொண்ட வித்தியாதரன் அந்த செல்வாக்கை கொஞ்சம் சிறையில் இருக்கும் கைதிகளின் விடுதலைக்கு பயன்படுத்த வேண்டும் என்பதே எமது விருப்பமாகும்.
வித்தியாதரன் வெறும் ஊடகவியலாளர் மட்டுமல்ல. அவர் ஒரு அரசியல் அமைப்பின் தலைவரும் கூட. எனவே சிறையில் உள்ளவர்களின் விடுதலைக்கு உதவ வேண்டியது அவரது கடமையும்கூட.
இன்றைய நிலையில் ரணில் மகிந்த போன்றவர்களை அழைத்து மணி விழா கொண்டாடினால் நிச்சயம் கடும் விமர்சனம் வரும் என்பது வித்தியாதரனுக்கு நன்கு தெரியும்.
நன்கு தெரிந்தும் மணிவிழா கொண்டாடியது மட்டுமன்றி அந்த போட்டோக்களை துணிந்து சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார் என்றால் அவருக்கு அந்த தைரியம் எப்படி வந்தது?
சரணடைந்த போராளி தலைவர்களை கொன்றுவிடுங்கள் என்று பசில் ராஜபக்சவிடம் கூறிய சம்பந்தரையே மக்கள் தெரிவு செய்கிறார்கள் என்றால் தன்னையும் தெரிவு செய்வார்கள்தானே என்று வித்தியாதரன் நம்புகிறார் போலும்.
ஆனால் மக்கள் மகத்தானவர்கள். கடந்த தேர்தலிலும் அவர்கள் வித்தியாதரனை தோற்கடித்தார்கள். இனிவரும் தேர்தல்களிலும் நிச்சயம் தோற்கடிப்பார்கள். இது உறுதி.

தமிழக இளைஞர்களை இணைத்திருந்தால்

•தமிழக இளைஞர்களை இணைத்திருந்தால்
ஈழ விடுதலைப் போராட்டம் எப்படி அமைந்திருக்கும்?
கரும்புலிகளாக பல போராளிகள் தம் உயிரை ஈழ விடுதலைப் போராட்டத்தில் அர்ப்பணித்துள்ளனர்.
இதில் ஆச்சரியம் ஏதும் இல்லை. ஏனெனில் அவர்கள் தமது இனத்தின் விடுதலைக்காக வீர மரணம் அடைந்தனர்.
ஆனால் தமிழ்நாடடைச் சேர்ந்த தமிழர் ஒருவர் ஈழ விடுதலைப் போராட்டத்தில் தன்னை இணைத்தக் கொண்டது ஆச்சரியம் எனில் அதைவிட ஆச்சரியமானது கரும்புலியாக தனது உயிரை தந்தது.
தமிழ்நாட்டில் சிவகாசியைச் சேர்ந்த செந்தூரபாண்டீயன் என்ற செங்கண்ணன் 11.11.1993 யஙன்று கரும்புலியாக தன் உயிரை அர்ப்பணித்தார்.
உண்மையில் இத் தியாகம் மகத்தானது. ஈழத் தமிழர்களால் என்றுமே மறக்க முடியாதது.
செங்கண்ணன் மட்டுமல்ல இன்னும் சில் தமிழக இளைஞர்கள் ஈழத்தில் வந்து போராட்டத்தில் இணைந்திருந்தனர். அவர்களில் சிலர் மாவீரர்களாகவும் மரணித்தனர்.
அதைவிட முத்துக்குமார் உட்பட 17 தமிழக தமிழர்கள் தமிழ்நாட்டில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்து உயிர் துறந்தனர்.
நான் அறிந்தவரையில் உலகில் எந்த இனமும் தன் இனத்திற்காக இப்படி ஒரு தியாகத்தை செய்யவில்லை. தாய் தமிழகம் தன் தொப்புள்கொடி உறவுகளுக்காக அளப்பரிய பங்களிப்பை நல்கி வருகிறது.
குறைந்தது பத்தாயிரம் தமிழக இளைஞர்களையாவது ஈழப் போராட்டத்தில் இணைக்க வேண்டும். அதற்கு முதல் ஆளாக நானே வருகிறேன் என்று தோழர் தமிழரசன் 1984ம் ஆண்டே எம்மிடம் கூறியிருந்தார்.
அவர் கூறியபடி தமிழக இளைஞர்களை எம் போராட்டத்தில் இணைத்திருந்தால் எமக்கும் ஆட் பற்றாக்குறை ஏற்பட்டிருக்காது. கட்டாய ஆட்சேர்ப்பு செய்ய வேண்டி வந்திருக்காது.
எல்லாவற்றுக்கும் மேலாக இலங்கை இந்திய அரசுகளால் படுகொலைகளை நிகழ்த்தியிருக்க முடியாது.
ஆம். தமிழக இளைஞர்களை இணைத்திருந்தால் வரலாறு நிச்சயம் வேறு மாதிரி அமைந்திருக்கும்.
அதனால்தான் இப்பவும் ஈழத் தமிழர்களும் தமிழக தமிழர்களும் சேர்ந்து விடக்கூடாது என்பதற்காக இந்திய உளவுப்படைகள் மும்முரமாக முயற்சி செய்கின்றன.
ஆனால் வரலாற்றை இழுத்து பிடித்தவிட முடியும் என்ற அவர்கள் கனவு ஒருபோதும் நிறைவேறப் போவதில்லை.
உலக தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைந்து வரலாறு படைக்கப் போவது உறுதி.

•எம் தலைவிதி என நொந்துகொள்வதா?

•எம் தலைவிதி என நொந்துகொள்வதா? அல்லது
நாசமாய் போங்கடா என கல் எடுத்து எறிவதா?
இலங்கையை கைப்பற்றி 150 வருடங்கள் ஆட்சி செய்தவர்கள் ஒல்லாந்தர்.
அந்த ஒல்லாந்து நாட்டின் தற்போதைய இலங்கைக்கான தூதுவர் ஜொகான் டோர்நெவ்ர்ட் அம்மையார்.
அவர் விரும்பியிருந்தால் எமது தலைவர்கள் போல் 7 கோடி ரூபா பெறுமதியான சொகுசு வாகனத்தில் செல்ல முடியும்.
அவர் விரும்பியிருந்தால் இரண்டு சொகுசு பங்களாக்களில் வாழ முடியும். அதுமட்டுமல்ல அவர் விரும்பினால் தனக்கு 12 சிங்கள பொலிஸ் பாதுகாப்பு பெற முடியும்.
முக்கியமாக அவர் விரும்பியிருந்தால் தனக்கு குடை பிடிக்கவென ஒருதரை நியமித்திருக்க முடியும்.
ஆனால் அவரோ சயிக்கிளில் பயணம் செய்கிறார். ( செய்தியாளர் மாநாட்டில் கலந்துவிட்டு அவர் சயிக்கிளில் வரும் படமே கீழே உள்ளது)
இதில் ஆச்சரியம் இல்லை. ஏனெனில் அவர் நாட்டு பிரதமரே சயிக்கிளில்தான் பயணம் செய்கிறார்.
ஆனால் நமக்கும் ஒரு பிரதமர் இருக்கிறார். ஏற்கனவே அவருக்கு 6 குண்டு துளைக்காத சொகுசு வாகனங்கள் உண்டு. இருந்தாலும் அலரிமாளிகையில் இருந்து பக்கத்தில் இருக்கும் பாராளுமன்றம் செல்ல புதிதாக ஒரு ஹெலிகெப்டர் வாங்கியிருக்கிறார்.
எமது பிரதமர் பரவாயில்லை என்று நினைக்கும் அளவிற்கு இந்தியாவில் ஒரு பிரதமர் இருக்கிறார். ஏழைத் தாயின் மகன் தான் என்று கூறுவார். ஆனால் அவர் உடுத்தும் உடுப்பின் பெறுமதியே பத்து லட்சம் ரூபா.
என்ன செய்வது. இதெல்லாம் நமது தலைவிதி என்று நொந்து கொள்வதா அல்லது நாசமாய் போங்கடா என கல்லை விட்டெறிவதா?
குறிப்பு - இந்த படித்துவிட்டு நான் வன்முறையை தூண்டுவதாக ஒரு கூட்டம் ஓடி வந்து கருத்து எழுதும். முதலில் அந்த கூட்டத்திற்குதான் கல் எறியனும்.

ஈழத் தமிழர் போராட்ட வரலாற்றை இன்று முன் நகர்த்திச் செல்பவர்கள்யார்?

•ஈழத் தமிழர் போராட்ட வரலாற்றை
இன்று முன் நகர்த்திச் செல்பவர்கள்யார்?
இரண்டு சொகுசு பங்களா பெற்று அனுபவித்து வரும் சம்பந்தர் அய்யாவா இன்று பொராட்ட வரலாற்றை முன் நகர்த்திச் செல்கிறார்?
இல்லை. இல்லவேயில்லை.
அப்படியென்றால் 5 கோடி ரூபா சொகுசு வாகனத்தில் மகனுடன் பவனி வருகிறாரே மாவை சேனாதி ராசா, அவரா போராட்ட வரலாற்றை முன் நகர்த்திச் செல்கிறார்?
இல்லை. இல்லவேயில்லை.
அப்போ மகிந்த ராஜபக்சவை எல்லாம் வரவழைத்து தன் மணிவிழாவைக் கொண்டாடினாரே வித்தியாதரன, அவரா இன்று போராட்ட வரலாற்றை முன் நகர்த்திச் செல்கிறார்?
இல்லை. இல்லவேயில்லை.
அப்போ யார்தான் இன்று ஈழத் தமிழர் போராட்ட வரலாற்றை முன் நகர்த்திச் செல்பவர்கள்?
இரண்டு வருடங்களாக வெயிலில் காய்ந்தும் மழையில் நனைந்தும் வீதியில் உட்கார்ந்து போராடுகிறார்களே காணாமல் போனவர்களின் உறவுகள், அவர்களே இன்று போராட்ட வரலாற்றை முன் நகர்த்திச் செல்பவர்கள்.
தன் சொந்த நிலத்தைக் கேட்டு வீதியோரத்தில் தாயுடன் படுத்து உறங்குகிறதே அந்த கேப்பாபுலவு குழந்தை,. அதுதான் இன்று போராட்ட வரலாற்றை முன் நகர்த்திச் செல்கிறது.
ஆம். வழிநெடுக எந்தவொரு சிறு துரோகமும் இன்றி போராடுகிறார்களே இவர்களே இன்று ஈழத் தமிழர் போராட்ட வரலாற்றை முன் நகர்த்துபவர்கள்.
நாளை வரலாறு இந்த எளியவர்களையே நினைவில் கொள்ளும்.