•எம் தலைவிதி என நொந்துகொள்வதா? அல்லது
நாசமாய் போங்கடா என கல் எடுத்து எறிவதா?
நாசமாய் போங்கடா என கல் எடுத்து எறிவதா?
இலங்கையை கைப்பற்றி 150 வருடங்கள் ஆட்சி செய்தவர்கள் ஒல்லாந்தர்.
அந்த ஒல்லாந்து நாட்டின் தற்போதைய இலங்கைக்கான தூதுவர் ஜொகான் டோர்நெவ்ர்ட் அம்மையார்.
அவர் விரும்பியிருந்தால் எமது தலைவர்கள் போல் 7 கோடி ரூபா பெறுமதியான சொகுசு வாகனத்தில் செல்ல முடியும்.
அவர் விரும்பியிருந்தால் இரண்டு சொகுசு பங்களாக்களில் வாழ முடியும். அதுமட்டுமல்ல அவர் விரும்பினால் தனக்கு 12 சிங்கள பொலிஸ் பாதுகாப்பு பெற முடியும்.
முக்கியமாக அவர் விரும்பியிருந்தால் தனக்கு குடை பிடிக்கவென ஒருதரை நியமித்திருக்க முடியும்.
ஆனால் அவரோ சயிக்கிளில் பயணம் செய்கிறார். ( செய்தியாளர் மாநாட்டில் கலந்துவிட்டு அவர் சயிக்கிளில் வரும் படமே கீழே உள்ளது)
இதில் ஆச்சரியம் இல்லை. ஏனெனில் அவர் நாட்டு பிரதமரே சயிக்கிளில்தான் பயணம் செய்கிறார்.
ஆனால் நமக்கும் ஒரு பிரதமர் இருக்கிறார். ஏற்கனவே அவருக்கு 6 குண்டு துளைக்காத சொகுசு வாகனங்கள் உண்டு. இருந்தாலும் அலரிமாளிகையில் இருந்து பக்கத்தில் இருக்கும் பாராளுமன்றம் செல்ல புதிதாக ஒரு ஹெலிகெப்டர் வாங்கியிருக்கிறார்.
எமது பிரதமர் பரவாயில்லை என்று நினைக்கும் அளவிற்கு இந்தியாவில் ஒரு பிரதமர் இருக்கிறார். ஏழைத் தாயின் மகன் தான் என்று கூறுவார். ஆனால் அவர் உடுத்தும் உடுப்பின் பெறுமதியே பத்து லட்சம் ரூபா.
என்ன செய்வது. இதெல்லாம் நமது தலைவிதி என்று நொந்து கொள்வதா அல்லது நாசமாய் போங்கடா என கல்லை விட்டெறிவதா?
குறிப்பு - இந்த படித்துவிட்டு நான் வன்முறையை தூண்டுவதாக ஒரு கூட்டம் ஓடி வந்து கருத்து எழுதும். முதலில் அந்த கூட்டத்திற்குதான் கல் எறியனும்.
No comments:
Post a Comment