•என்ன டீல் ஓகே வா?
லண்டன் கனடா போன்ற நாடுகளுக்கு சென்ற ஈழ அகதிகள் அந்த நாட்டு குடியுரிமை பெற்று விரும்பியதை படித்து விரும்பிய தொழில் செய்ய முடியும். ஆனால் இந்தியாவில் 36 வருடமாக அகதியாகத்தான் இருக்கின்றனர். இதை ஏன் என்று இந்திய அரசைப் பார்த்து கேட்க முடியாதவர்கள்,
பாகிஸ்தானில் இருந்து வந்தவர்கள், பங்களாதேசில் இருந்து வந்தவர்களுக்கு எல்லாம் குடியுரிமை வழங்கும் இந்திய அரசு ஈழ அகதிகளுக்கு மட்டும் ஏன் குடியுரிமை வழங்க மறுக்கிறது என்று இந்திய அரசிடம் கேட்க முடியாதவர்கள்,
ஈழ அகதிகளைப் பார்த்து கூறுகிறார்கள் தமிழகத்தை விட்டு வெளியேறு என்று.
ஓகே நாங்கள் வெளியேற தயார். ஆனால் அதற்கு முன்
•யாழ்ப்பாணத்தில் இருக்கும் இந்திய தூதர் வெளியேற வேண்டும்
•பலாலி விமான நிலையத்தில் இருந்து இந்தியா வெளியேற வேண்டும்
•காங்கேசன் துறைமுகத்தில் இருந்து இந்தியா வெளியேற வேண்டும்
•காங்கேசன் சீமெந்து தொழிற்சாலையில் இருந்து இந்தியா வெளியேற வேண்டும்
•புல்மோட்டை கனிவளத்தை விட்டு இந்தியா வெளியேற வேண்டும்
•திருகோணமலை துறைமுகத்தில் இருந்து இந்தியா வெளியேற வேண்டும்
•அந்த துறைமுகத்தில் இருக்கும் எண்ணெய் குதங்களில் இருந்து வெளியேற வேண்டும்
•சம்பூர் 500 ஏக்கர் நிலத்தை விட்டு இந்தியா வெளியெற வேண்டும்
•சம்பூர் நிலக்கரி மின்சார உற்பத்தியில் இருந்து இந்தியா வெளியேற வேண்டும்
•மன்னார் பெற்றோல் வளத்தை விட்டு இந்தியா வெளியேற வேண்டும்
அதாவது தமிழர் பிரதேசமான வடக்கு கிழக்கில் இருந்து இந்தியா வெளியேற வேண்டும். இலங்கை அரசு விரும்பினால் தாராளமாக வடக்கு கிழக்கிற்கு வெளியே சிங்கள பிரதேசங்களில் தாராளமாக இந்தியா ஆக்கிரமிக்கலாம்.
என்ன டீல் ஓகே வா? எப்போ முடிவு சொல்லப் போகிறீர்கள்?
No comments:
Post a Comment