•நாகலாந்து மக்களால் முடியுமென்றால்
தமிழ் மக்களால் ஏன் முடியாது?
தமிழ் மக்களால் ஏன் முடியாது?
இந்தியாவில் உள்ள ஒரு மாநிலம்தான் நாகலாந்து. இந்திய அரசு அம் மாநில மக்களுக்கு தனி கொடி, தனி பாஸ்போட்,தனி அரசியல் சாசனம் வழங்க முடிவு செய்துள்ளது.
ஏற்கனவே பல உரிமைகளை பெற்றுள்ள நாகலாந்து மக்களால் தற்போது இந்த உரிமைகளையும் எப்படி பெற முடிகிறது? அல்லது இந்திய அரசு எப்படி நாகலாந்திற்கு மட்டும் இப்படி வழங்க முடிவு செய்துள்ளது?
இப்போது எழும் கேள்வி என்னவெனில் நாகலாந்து மக்களால் இப்படி பெற முடியுமென்றால் ஏன் தமிழ் மக்களால் பெற முடியாது?
முதலாவது,
நாகலாந்து மக்கள் தனித்துவமானவர்கள். அதனால் அவர்களால் பெற முடிகிறது என்கிறார்கள்.
தமிழ் மக்களும் தனித்துவமானவர்கள்தானே. அவர்களுக்கும் நீண்ட தனித்துவமான வரலாறு உள்ளதே.
இரண்டாவது,
நாகலாந்து மக்கள் தமது உரிமைக்காக போராடினார்கள். அதனால் பெற்று வரகிறார்கள் என்கிறார்கள்.
தமிழ் மக்களும் நீண்ட காலமாக போராடித்தானே வருகிறார்கள். இந்தி எதிர்ப்புக்கு எதிராக எல்லாம் பல மாணவர்கள் போராடி இறந்தார்களே.
மூன்றாவதாக,
நாகலாந்து மக்கள் படை கட்டி ஆயுதம் ஏந்தி போராடினார்கள். அதனால் உரிமைகளை பெற்று வருகிறார்கள் என்கிறார்கள்.
ஆம். அது உண்மைதான். தமிழர்களும் கட்டினார்கள். ஆனால் அது படை அல்ல, ரசம் விடுவதற்காக சோற்றுக்குள்ள கட்டிய பாத்தி.
முக்கியமானது என்னவென்றால்,
•தமிழ்நாட்டில் எச்ச.ராசா, குருமூர்த்தி, என்.ராம் போன்று நாகலாந்தில் இருந்துகொண்டு நாகலாந்திற்கு எதிராக பேச யாரையும் அவர்கள் அனுமதிப்பதில்லை.
•தமிழ்நாட்டில் ஆயுதம் ஏந்திப் போராடுபவர்களை பயங்கரவாதிகள் என்கிறோம். ஆனால் அவர்கள் தமது தியாகிகள் என்று போற்றுகிறார்கள்.
•அறிவாயுதம் ஏந்துவோம் என்று சொல்லி தேர்தல் பாதையில் செல்பவர்களை அவர்கள் நம்பவில்லை. ஏற்கவில்லை.
No comments:
Post a Comment