•இரண்டு கேள்விகளும் எனது பதில்களும்
லண்டனில் பிரிஎவ் அமைப்பில் செயற்படும் ஒருவர் என்னுடன்; பேசும்போது நீங்கள் மட்டும்தானே இந்தியாவை எதிர்த்து எழுதுகிறீர்கள்? என்று கேட்டார்.
அதற்கு நான் “ நான் மட்டும்தான் என்றால் ஏன் இந்திய உளவு அமைப்புகள் அச்சப்பட வேண்டும்? கண்டுக்காமல் விடவேண்டியதுதானே?” என்று திருப்பி கேட்டேன்.
நான் எந்த பதவியிலும் இல்லை. நான் எந்த ஊடகமும் நடத்த வில்லை. பேஸ்புக்கில் மட்டுமே எழுதுகிறேன். அதுவும் என்னுடைய பக்கத்தில் மட்டுமே எழுதுகிறேன். இருந்தும் அவர்கள் ஏன் என் எழுத்து கண்டு எரிச்சல் கொள்கிறார்கள்?
அதற்கு ஒரே காரணம்தான். என் பதிவுகள் 24 மணி நேரத்தில் சராசரியாக 60 ஆயிரம் மக்களை சென்றடைகிறது. அதுவும் சில பதிவுகள் ஒரு லட்சத்தை தாண்டியும் சென்றடைகிறது.
நான் விதைக்கும் கருத்துக்கள் முளைத்துவடும் என அவர்கள் அஞ்சுகிறார்கள். கருத்துகள் மக்களை பற்றிக் கொண்டால் அவை பௌதீக சக்தி பெற்றுவிடும். அச் சக்தி அவர்களின் ஆக்கிரமிப்புக்கு சாவு மணி அடித்தவிடும் என அவர்கள் நினைக்கிறார்கள்.
அடுத்து இன்னொருவர் “நீங்கள் எப்ப பார்த்தாலும் இந்தியாவுக்கு எதிராகத்தானே எழுதுகிறீர்கள்?” என்று கேட்டார்.
ஆம். அதுவும் உண்மைதான். நான் எனக்கு இருக்கும் நோயைப்பற்றி கூறினால்தானே அதற்குரிய மருந்தைப் பெற முடியும்.
இந்தியாதானே எம்மை நசுக்குகிறது. இந்தியாதானே எமது விடுதலைப் போராட்டத்தை ஒடுக்குகிறது. இந்தியாதானே எம்மீது ஆக்கிரமிப்பு செய்கிறது.
இந்தியாதானே பலாலி, காங்கேசன்துறை, புல்மோடடை சம்பூர் திருகோணமலை மன்னார் எல்லாம் ஆக்கிரமித்து எமது வளங்களை சுரண்டுகிறது.
எனவே நான் இந்தியா பற்றி பேசாமல் எதியோப்பியா பற்றியா பேச வேண்டும்?
இந்தியள அரசு எமது நட்பு சக்தி அல்ல எமது எதிரி என்பதை மக்கள் அனைவரும் உணரும்வரை நான் எழுதிக் கொண்டே இருப்பேன்.
ஏனெனில் ஒரு எதிரியை நண்பன் என்று நம்பினால் அந்த விடுதலைப் போராட்டம் ஒருபோதும் வெற்றியடையாது.
No comments:
Post a Comment