இருவரும் தமிழர்கள்
இருவரும் கரவெட்டியை சேர்ந்தவர்கள்
ஒருவர் சிறையில் அரசியல் கைதியாக இருக்கிறார்.
இன்னொருவர் தானே தமிழர் தலைமை என்று கூறிக்கொண்டு இருக்கிறார்.
இன்னொருவர் தானே தமிழர் தலைமை என்று கூறிக்கொண்டு இருக்கிறார்.
அந்த ஒருவர் தமிழ் மக்களுக்காக போராடிய காலத்தில் இந்த இன்னொருவர் இந்தியாவில் படித்துக் கொண்டிருந்தார்.
அந்த ஒருவர் தன் பிள்ளைகளையும் சேர்த்துக் கொண்டு கொழும்பு வீதியில் போராடியபோது இந்த இன்னொருவர் தன் பிள்ளையை லண்டனில் படிக்க வைத்தார்.
அந்த ஒருவர் இந்த அரசு தனக்கு அப்பீல் செய்யக்கூட அனுமதிக்காமல் நீதியை மறுக்கிறது என்கிறார்.
இந்த இன்னொருவர் அந்த அரசை நல்லாட்சி அரசென்று கூறுவதுடன் அதனைக் கவிழாமல் ஓடிச் சென்று காப்பாற்றுகிறார்.
இந்த இன்னொருவர் அந்த அரசை நல்லாட்சி அரசென்று கூறுவதுடன் அதனைக் கவிழாமல் ஓடிச் சென்று காப்பாற்றுகிறார்.
அந்த ஒருவர் வேறு வழியின்றி சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கிறார். அவர் மனைவியோ தன் கணவனை காப்பாற்றுமாறு ஒவ்வொரு தமிழ் எம்.பி யிடமும் மன்றாடுகிறார்.
இந்த இன்னொருவர் எம்.பி மட்டுமல்ல ஜனாதிபதி சட்டத்தரணியும் ஆவார். ஆனால் அந்த ஒருவர் உண்ணாவிரதம் இருக்கிறார் என்று தெரிந்தும் குரல் கொடுக்க மறுக்கிறார்.
போதைப் பொருள் கடத்தியவர்களுக்காக தொலைபேசியில் பொலிஸ்மா அதிபரையே மிரட்டிய இந்த இன்னொருவர் அந்த ஒருவருக்காக ஒரு தொலைபேசி அழைப்பைகூட செய்ய மறுக்கிறார்.
பரவாயில்லை. அடுத்த தேர்தல் வரும்போது இந்த இன்னொருவர் வோட்டுகேட்டு கரவெட்டிக்கு வரத்தானே வேண்டும்.
No comments:
Post a Comment