தோழர் ராயுவின் நினைவுகள் ஓங்குக!
ராயு அல்லது தினேஸ் என்றழைக்கப்பட்ட எமது தோழர் தங்கராசா ரவீந்திரகுமார் அவர்களின் 7வது நினைவுதினம் 10.07.2019 ஆகும்
17.05.1966 ல் பிறந்த தோழர் ராயு 10.07.2012 யன்று மாரடைப்பு காரணமாக மட்டக்களப்பு நகரில் மரணமடைந்துள்ளார்.
தனது 46 வது வயதில் மரணமடைந்த தோழர் ராயுவிற்கு எமது ஆழ்ந்த அஞ்சலிகளை செலுத்துகிறோம்.
தோழர் தமிழரசனுடன் இறுதிக் காலங்களில் நெருக்கமாக பயணித்த ஈழத்து தோழர் இவர்.
தோழர் தமிழரசனுடன் இறுதிக் காலங்களில் நெருக்கமாக பயணித்த ஈழத்து தோழர் இவர்.
நான் எழுதிய “ ஒரு ஈழப் போராளியின் பார்வையில் தோழர் தமிழரசன்” என்னும் நூலில் குறிப்பிட்டுள்ள தோழர் தினேஸ் என்பவர் இவரே.
தோழர் தமிழரசன் மேற்கொண்ட பல தாக்குதல் சம்பவங்களில் ஆலோசனை வழங்கியதுடன் சேர்ந்து பங்கெடுத்தவர் இவர்.
இவரையும் படுகொலை செய்வதற்கு இந்திய உளவுப்படைகள் முயன்றன. இந்திய ராணுவம் ஈழத்தில் இருந்தபோதும் இவரை மட்டக்களப்பில் தேடினார்கள்.
இறுதியாக 2000ம் ஆண்டளவில் நான் கொழும்பில் நின்றதை அறிந்து என்னை வந்து சந்தித்திருந்தார்.
நான் எழுதிய “ ஒரு ஈழப் போராளியின் பார்வையில் தோழர் தமிழரசன்” என்னும் நூலை அவருக்கு வழங்க முனைந்தபோது அவர் இறந்துவிட்டார் என்னும் செய்தியை அறிந்தேன்.
கிழக்குமாகாணம் மட்டக்களப்பைச் சேர்ந்த ஒரு உணர்வுள்ள சிறந்த தோழர். மாக்சிச லெனினிய மாவோயிச சிந்தனையைக் கொண்டவர் இவர்.
இவருடைய பங்களிப்புகள் மகத்தானவை. இவருடைய இழப்பு பேரிழப்பாகும்.
வரலாற்றில் தமிழ்நாடு உள்ளவரை தோழர் தமிழரசன் பெயர் இருக்கும். தோழர் தமிழரசன் பெயர் உச்சரிக்கப்படும்போதெல்லாம் தோழர் ராயு பெயரும் நினைவில் கொள்ளப்படும்.
No comments:
Post a Comment