யார் இந்த ராமசாமி துரைரத்தினமும்
ஜேவிபி நியூஸ். கொம் உம்?
ஜேவிபி நியூஸ். கொம் உம்?
அரசியல் கைதி தேவதாசனை சந்தித்து அவர் உண்ணாவிரதத்தை அமைச்சர் மனோ கணேசன் முடித்து வைத்தபோதே இனி சுமந்திரன் செம்புகளால் அவர் விமர்சிக்கப்படபோகிறார் என்பதை கூறியிருந்தோம்.
ஆனால் நாம்கூட அவருக்காக அவர் சார்ந்த இந்திய தமிழர் சமூகமே ஒட்டுமொத்தமாக கேவலமாக விமர்சிக்கப்படும் என எதிர் பார்க்கவில்லை.
முதலாவது, அமைச்சர் மனோ கணேசன் தானாக தேவதாசன் விடயத்தில் ஈடுபடவில்லை. தேவதாசன் அழைத்தமைக்கு இணங்கவே சென்று சந்தித்தார்.
இரண்டாவது, அவர் மட்டும் செல்லவில்லை. அவர் கூட ரெலோ எம்பி செல்வம் அடைக்கலநாதன், கோடீஸ்வரன் போன்றவர்களும் சென்றுள்ளனர்
மூன்றாவது, அவர் இரண்டு வாரத்தில் அமைசரவையில் இது தொடர்பாக பத்திரம் சமர்ப்பிப்பதாக உறுதி அளித்துள்ளார்.
எனவே அமைச்சர் மனோ கணேசனை விமர்சிக்க விரும்புபவர்கள் இரண்டு வாரம் கழித்து முடிவை பார்த்து விட்டு தாராளமாக விமர்சிகலாம்.
ஆனால் அதுவும்கூட உண்ணாவிரதம் இருந்த தேவதாசனை சந்திக்காமல் யாழ்பானம் சென்று ஐஸ்கிறீம் கடை திறந்த சுமந்திரன் செம்புகளுக்கு அவரை விமர்சிக்க எந்த அருகதையும் இல்லை.
இராமசாமி துரைரத்தினம் என்பவர் அமைச்சர் மனோ கணேசனை கேவலமாக விமர்சித்துள்ளார்.
இந்த ராமசாமி துரைரத்தினம் என்பவர் தன்னை ஒரு ஊடகவியலாளர் என்று கூறிக்கொண்டு பொதுவெளியில் இனரீதியான சாதீரீதியான துவேஷங்களை விதைத்து வருகிறார்.
இவர் முன்னர் ஒருமுறை தமிழக பாராளுமன்ற உறுப்பினரான ரவிக்குமாரை சாதீரீதியாக திட்டி முகநூலில் உரையாடியிருந்தார்.
இது தவறு என்றும் மன்னிப்பு கேட்குமாறு பலர் கோரியிருந்தும் இன்றுவரை அதற்கு இந்த ராமசாமி துரைரத்தினம் மன்னிப்பு கோரவில்லை.
ஆனால் இதில் ஆச்சரியம் என்னவெனில் இவ்வாறு பொது வெளியில் அநாகரீகமாக நடந்து கொண்ட இந்த துரைரத்தினத்திற்கு “வாழ்நாள் சாதனையாளர்” விருதை வழங்கி கௌரவித்தது ஐபிசி ஊடகம்.
இப்போது அதே துரைரத்தினம் அமைச்சர் மனோகணேசனை கேவலமாக விமர்சித்துள்ளார்.
அவர் மனோ கணேசனை மட்டும் விமர்சித்திருந்தாலும் பரவாயில்லை. அவருக்காக ஒட்டுமொத்த இந்திய தமிழரையும் விமர்சித்துள்ளார்.
இந்திய தமிழர்களை “ இந்திய கேடுகெட்ட கழிசறைகள்” என்று எழுதியுள்ளார். அவர்களை “கூலிக்கு மாரடிக்கும் வேலைகளை” செய்பவர்கள் என்று எழுதியுள்ளார்.
அதுமட்டுமன்றி இந்திய தமிழர்களை ஈழத் தமிழர்களின் பொது எதிரி என்றும் காட்ட முயல்கிறார்.
இவ்வாறு இவர் பொதுவெளியில் எழுதியது ஆச்சரியம் என்றால் அதைவிட ஆச்சரியமாக இருப்பது அதை ஐபிசி யின் ஜேவிபி நியூஸ் இல் வெளியிட்டிருப்பது ஆகும்.
தமிழ் மக்களிடையே இனரீதியாக சாதிரீதியாக துவேஷங்களை விதைத்து வரும் இந்த ராமசாமி துரைரத்தினத்தை “தமிழ் இன உணர்வாளா”; என்று சிலர் தூக்கி திரிகிறார்கள்.
இந்திய தமிழர்களை “தோட்டக்காட்டான்” என்று கிளிநொச்சி பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் அண்மையில் பேசியிருந்தார்.
அவரது தம்பி ஆசிரியராக இருக்கும் Nஐவிபி நியூஸ் துரைரத்தினம் இந்திய தமிழரை கேவலமாக பேசியதை வெளியிடுகிறது.
இவ்வாறு இந்திய தமிழருக்கு எதிராக துவேஷம் கக்குபவர்களின் நிறுவன முதலாளியாக ஐபிசி கந்தையா பாஸ்கரன் இருக்கிறார்.
இவர்களை தமிழ் மக்கள் இனம் காண வேண்டும். இவர்களை பொது வெளியில் இருந்து தமிழ் மக்கள் விரட்டி அடிக்க வேண்டும்.
குறிப்பு- பொது வெளியில் இந்திய தமிழர்களை கேவலப்படுத்திய இவர்கள் மீது அமைச்சர் மனோ கணேசன் ஏன் வழக்கு தொடரக்கூடாது?
No comments:
Post a Comment